Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 6 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- Sports
இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி!
- News
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐரோப்பா, தாய்லாந்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸில் கெத்து காட்ட கிளம்பிய நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்...
ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள், பிலிப்பைன்ஸில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 க்ரூஸர் மோட்டார்சைக்கிளை பிலிப்பைன்ஸ் சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மீட்டியோர் 350 க்ரூஸர் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

தற்போது பிலிப்பைன்ஸில் மீட்டியோர் 350 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஐரோப்பா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட சந்தைகளில் இந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிள் ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மாடலுக்கும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வண்ண தேர்வுகள் மற்றும் உபகரணங்கள் ஆகிய அம்சங்களில், இந்த மூன்று வேரியண்ட்களும் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. ஆனால் இந்த மூன்று இன்ஜின் மற்றும் பிளாட்பார்ம் ஆகிய அம்சங்களில் ஒன்றுபடுகின்றன.

அத்துடன் இந்த மூன்று வேரியண்ட்களிலும் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை ராயல் என்பீல்டு நிறுவனம் ஸ்டாண்டர்டாக வழங்குகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்ற மோட்டார்சைக்கிள்களிலும், ட்ரிப்பர் நேவிகேஷன் வசதி தற்போது படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில், 348 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 தற்போது இந்திய சந்தையில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

இந்திய சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 8,624 மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் 350 சிசி மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக மீட்டியோர் 350 உள்ளது. 350 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

கிளாசிக் 350 மற்றும் புல்லட் போன்ற மாடல்கள் மூலமாக இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனி ராஜாங்கம் நடத்தி வருகிறது. புதுவரவான மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள், இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஆதிக்கத்தை இன்னும் நிலைநிறுத்தி கொள்வதற்கு உதவி செய்து வருகிறது.

இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிட்டு வருகிறது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளும் இந்திய சந்தைக்கு புதுவரவுதான். இந்த மோட்டார்சைக்கிளும் தற்போது இந்திய சந்தையில் வேகமாக பிரபலமாகி வருகிறது.