தமிழகத்தின் தயாரிப்பை பெற காத்திருக்கும் வட இந்தியர்கள்... காத்திருப்பு காலம் 5 மாதங்களாக உயர்வு...

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதுமுக பைக்குகளில் ஒன்றான மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தமிழகத்தின் தயாரிப்பை பெற காத்திருக்கும் வட இந்தியர்கள்... காத்திருப்பு காலம் 5 மாதங்களாக உயர்வு...

தமிழகத்தின் தலைநகரான சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகனம் மீட்டியோர் 350 மாடல் பைக். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்பைக் கடந்த வருடம் விற்பனைக்கு அறிமுகமாகியது. இது ஓர் ரெட்ரோ க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளாகும்.

தமிழகத்தின் தயாரிப்பை பெற காத்திருக்கும் வட இந்தியர்கள்... காத்திருப்பு காலம் 5 மாதங்களாக உயர்வு...

இந்த பைக்கிற்கே தற்போது இளைஞர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கிற்கு காத்திருப்பு காலம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலம் மற்றும் நகர வாரியாக வேறுபடும் இந்த காத்திருப்பு காலம் தற்போது ஐந்து மாதங்கள் வரை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

தமிழகத்தின் தயாரிப்பை பெற காத்திருக்கும் வட இந்தியர்கள்... காத்திருப்பு காலம் 5 மாதங்களாக உயர்வு...

ஆமாங்க, ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கை கையில் (டெலிவரி) பெற வேண்டுமானால் அதிகபட்சமாக 5 மாதங்கள் வரையிலாவது காத்திருக்க வேண்டும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாட் செல்லிங் விற்பனையாகும் பைக்காக மீட்டியோர் மாறியிருப்பதன் காரணத்தினாலேயே இந்த நிலை உருவாகியிருக்கின்றது.

தமிழகத்தின் தயாரிப்பை பெற காத்திருக்கும் வட இந்தியர்கள்... காத்திருப்பு காலம் 5 மாதங்களாக உயர்வு...

காத்திருப்பு காலம் பற்றி டெல்லி, புனே மற்றும் மும்பை உள்ளிட்ட சில நகங்களில் செயல்பட்டு வரும் டீலர்களின் வாயிலாகவே இத்தகவல் தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலை வட மாநிலங்களில் மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களில் இதே நிலையே நீடித்து வருகின்றது. ஆகையால் பல இளைஞர்கள் இப்பைக்கிற்காக காத்திருக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது.

தமிழகத்தின் தயாரிப்பை பெற காத்திருக்கும் வட இந்தியர்கள்... காத்திருப்பு காலம் 5 மாதங்களாக உயர்வு...

மீட்டியோர் ஓர் 350 சிசி ரக மோட்டார்சைக்கிளாகும். இது தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கிற்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 2,02,388 லட்சம் ஆகும். இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

தமிழகத்தின் தயாரிப்பை பெற காத்திருக்கும் வட இந்தியர்கள்... காத்திருப்பு காலம் 5 மாதங்களாக உயர்வு...

இந்த பைக் ஃபையர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தொடர்ந்து, இளைஞர்களை இப்பைக்கின் கவர வேண்டும் என்பதற்காக சிறப்பு கஸ்டமைசேஷன் வசதியையும் ராயல் என்ஃபீல்டு வழங்கி வருகின்றது.

தமிழகத்தின் தயாரிப்பை பெற காத்திருக்கும் வட இந்தியர்கள்... காத்திருப்பு காலம் 5 மாதங்களாக உயர்வு...

இதன் மூலம் நிறம், சைலென்சர் மற்றும் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை நம்முடைய டேஸ்டிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். இதனை 'மேக் இட் யூர்ஸ்' எனும் சிறப்பு நிகழ்வின் வாயிலாக வழங்கி வருகின்றது ராயல் என்ஃபீல்டு. இந்த பைக்கில் 350 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது.

தமிழகத்தின் தயாரிப்பை பெற காத்திருக்கும் வட இந்தியர்கள்... காத்திருப்பு காலம் 5 மாதங்களாக உயர்வு...

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 பைக்கை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. அந்தவகையில், தாய்லாந்து, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் நிறுவனத்தின் பைக்குகள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

Most Read Articles
English summary
Royal Enfield Meteor 350 Waiting Period Increased Up To 5 Months: Here Are More Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X