Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 4 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 7 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021ம் ஆண்டின் சிறந்த பைக் எது தெரியுமா? தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... இது பெருமையான தருணம்!
2021ம் ஆண்டிற்கான சிறந்த மோட்டார்சைக்கிளாக தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுமுக பைக் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பைக் பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுமுக பைக்குகளில் ஒன்றாக மீட்டியோர் 350 பைக் இருக்கின்றது. இந்திய இளைஞர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் இப்பைக்கையே 2021 ஆண்டிற்கான நாட்டின் சிறந்த மோட்டார்சைக்கிளாக (Indian Motorcycle of the Year 2021) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியில், ராயல் என்பீல்டு மீட்டியோர் பைக்கிற்கு போட்டியாக ஹீரோ ஃபேஷன் ப்ரோ, ஹீரோ கிளாமர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர், ஹோண்டா ஹார்னெட் 2.0, பஜாஜ் டோமினார் 250, ஹஸ்குவர்னா ஸ்வர்ட்பிளன் 250 ம ற்றும் கேடிஎம் 390 அட்வென்சர் ஆகிய பைக்குகள் களம் கண்டன.

ஆனால், இவையனைத்தையும் பின்னுக்கு தள்ளி ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த மோட்டார்சைக்கிள் என்ற பட்டத்தை வென்றிருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் இப்பைக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி அன்று நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அறிமுகமான வெகு சில நாட்களிலேயே இளைஞர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெறும் பைக்காக இது மாறியிருக்கின்றது. இந்த நிலையிலேயே விலை, தரம், பயன்பாடு, திறன், உருவம் என பலவிதமான அளவுகோல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இப்பைக் சிறந்த மோட்டார்சைக்கிள் என்ற நற்சான்றைப் பெற்றிருக்கின்றது.

இப்பைக் இந்தியாவில் ஃபையர் பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர் நோவா ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், மீட்டியோர் 350 ஃபையர்பால் வேரியண்ட் ரூ. 1,78,744 விலையிலும், மீட்டியோர் 350 ஸ்டெல்லர் வேரியண்ட் ரூ. 1,84,337 என்ற விலையிலும் மற்றும் மீட்டியோர் 350 சூப்பர்நோவா வேரியண்ட் ரூ. 1,93,656 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இப்பைக்கில் பிற ராயல் என்பீல்டு பைக்குகளில் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், நாம் கவனிக்க வேண்டிய அம்சமாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் பாட் (கூகுள் மேப்), ஸ்மார்ட்போன் இணைப்பு, அனலாக் ஸ்பீடோ மீட்டர், கியர் பொசிஷனை காண்பிக்கும் டிஸ்பிளே, நேரம் மற்றும் ட்ரிப் டேட்டா என பல்வேறு சிறப்பு வசதிகளை இவ்வாகனம் கொண்டிருக்கின்றது.

இதுதவிர சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பிற்காக டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், ஷாக் அப்சார்பர் பின் பக்க வீலிலும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, க்ரூஸர் ரக பைக்குகளில் இடம்பெறுவதைப் போன்ற அலாய் வீல்கள் (முன் பக்க வீல் 19 இன்ச், பின்பக்க வீல் 17 இன்சுடையது ஆகும்) ட்யூப் லெஸ் டயருடன் பொருத்தப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து இப்பைக்கில் 349 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஏர்-ஆயில் கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடியது. இப்பைக் இந்தியாவில் ஜாவா பெராக், பெனெல்லி இம்பீரியல் 400 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.