தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

இந்தியாவில் இருந்து பாகங்களாக ஏற்றுமதி செய்து முழு மோட்டார்சைக்கிளாக உருவாக்கும் அசெம்பிள் தொழிற்சாலையை தாய்லாந்தில் நிறுவி உள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

இங்கிலாந்தில் உருவாகி தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியா மட்டுமின்றி பல வெளிநாட்டு சந்தைகளிலும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இதில் பெரும்பாலான நாடுகளில் ராயல் என்பீல்டு பைக்குகள் முழுவதுமாக உருவாக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

உதாரணத்திற்கு, இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் விற்பனை செய்யப்படும் அதே சிபியூ பாணியில். அதேநேரம் சில நாடுகளில் சிகேடி முறையிலும் தயாரிப்புகளை ராயல் என்பீல்டு சந்தைப்படுத்தி வருகிறது. இத்தகைய நாடுகளில் முன்பு தென் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா மட்டுமே இருந்தன.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

ஆனால் தற்போது இவற்றுடன் தாய்லாந்தும் இணைந்துள்ளது. இந்தியாவிற்கு அருகே உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சந்தையை விரிவுப்படுத்த இந்த பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்ட் பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தது. இந்த முயற்சிகளின் பலனாக தற்போது ராயல் என்பீல்டின் முதல் சிகேடி தொழிற்சாலை தாய்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

வாகனங்களுக்கான பாகங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுவது சிகேடி என்பதன் அர்த்தமாகும். கடந்த பல மாதங்களாக தாய்லாந்தில் உருவாக்கப்பட்டு வந்த இந்த தொழிற்சாலையின் மூலம், ஏற்கனவே கூறியதுபோல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சந்தையை விரிவாக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

ஏனெனில் இங்கு அசெம்பிள் செய்யப்படும் பைக்குகளை தாய்லாந்தில் விற்பனை செய்வது மட்டுமின்றி, இந்தோனிஷியா, வியட்நாம் போன்ற ராயல் என்பீல்டு பிராண்டிற்கு பரவலாக ரசிகர்கள் உள்ள மற்ற தென்கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக அந்த நாடுகளில் தயாரிப்புகளின் விலைகளை ராயல் என்பீல்டு நிறுவனத்தால் மற்ற போட்டி மாடல்களுக்கு சவாலானதாக நிர்ணயிக்க முடியும். அதாவது இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கான செலவை கணிசமாக குறைக்க முடியும்.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

மேலும் இந்த புதிய சிகேடி தொழிற்சாலையின் மூலமாக தாய்லாந்தில் சந்தையை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. இதுகுறித்து ராயல் என்பீல்டின் நிர்வாக இயக்குனர் பி கோவிந்தராஜன் கருத்து தெரிவிக்கையில், வணிகத்தை வளர்ப்பதற்கும், அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும் ஒரு மூலோபாய கண்ணோட்டத்துடன் கடந்த 2020இல் அர்ஜெண்டினாவில் உள்நாட்டு அசெம்பிள் தொழிற்சாலையை உருவாக்கினோம்.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் கொலம்பியாவில் அசெம்பிள் தொழிற்சாலையை நிறுவினோம். இந்த பயணத்தை தொடர்ந்து ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எங்களுக்கான முதல் மைல்கல்லாக, தாய்லாந்தில் உள்ள சிகேடி அசெம்பிள் ஆலையில் செயல்பாடுகள் துவங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

முதற்கட்டமாக, ராயல் என்பீல்டின் தாய்லாந்து தொழிற்சாலையில் ஹிமாலயன், இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளின் அசெம்பிள் பணிகள் துவங்கப்பட உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் முதன்முதலாக தாய்லாந்து நாட்டு சந்தையில் 2015இல் நுழைந்தது.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

இங்கு நுழைந்த பிறகு தாய்லாந்தில் மட்டுமில்லாமல், மற்ற ஆசிய-பசுபிக் நாட்டு மக்களிடமும் தனது தயாரிப்புகளை கொண்டு செல்ல ராயல் என்பீல்டால் முடிந்தது. எந்த அளவிற்கு என்றால், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கொரியா நாடுகளில் பிரீமியம், நடுத்தர-அளவு மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் முதன்மையான ஐந்து நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குவதாக ராயல் என்பீல்டு தெரிவித்து வருகிறது.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

குறிப்பாக நம்மை போல் கிளாசிக் தோற்ற பைக்குகளை அதிகம் விரும்பக்கூடிய மக்கள் உள்ள தாய்லாந்தில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு தேவை வேகமாக பெருக துவங்கியதை அடுத்து, உள்நாட்டில் அசெம்பிள் தொழிற்சாலையை நிறுவும் முடிவிற்கு ராயல் என்பீல்டு வந்தது. அதேநேரம் சில்லறை வணிக விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் தாய்லாந்தில் அதிகப்படுத்தும் திட்டத்தில் இந்த நிறுவனம் உள்ளது.

தாய்லாந்தில் ராயல் என்பீல்டின் முதல் அசெம்பிள் தொழிற்சாலை!! விரைவில் பணிகள் துவக்கம்!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த ராயல் என்பில்டு பைக்குகளில் ஹிமாலயனும் ஒன்று. கடந்த 2016இல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் பல்வேறு நாடுகளில் ஆஃப்-ரோடு பைக் ஆர்வலர்களின் பிரதான தேர்வுகளுள் ஒன்றாக விளங்குகிறது. அத்துடன் தொலைத்தூர பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்கள் மத்தியிலும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிரபலமானதாக உள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield Opens CKD Unit In Thailand
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X