புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Classic 350) பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் (Accessories) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

மிக சமீபத்தில் தான் ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இதன் படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நீலையில் புதிய கிளாசிக் 350 பைக்கிற்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆக்ஸஸரீகளின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது புதிய கிளாசிக் 350 பைக்கை அழகாக்கி கொள்ளலாம். வெப்சைட்டில் ஆக்ஸஸரீகளுக்கான விலைகளும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இணைய பக்கத்தில் 2021 கிளாசிக் 350 பைக்கை தேர்வு செய்து, பின்னர் ‘Accessories' பிரிவில் பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை காணலாம். இவை இல்லாமல் பிரத்யேகமான ஆக்ஸஸரீ வேண்டுமென்றால் அதற்கும் வெப்சைட்டில் வழிகள் உள்ளன.

புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

பாதுகாப்பு, கண்ட்ரோல்கள், இருக்கைகள், உடல் வேலை, லக்கேஜ், என்ஜின் பாதுகாப்பு & பராமரிப்பு மற்றும் சக்கரங்கள் என்ற 8 விதமான பிரிவுகளில் இந்த ஆக்ஸஸரீகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானவற்றை பிரிவுகள் வாரியாக கீழே பதிவிட்டுள்ளோம்.

புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

என்ஜின் பாதுகாப்பான்கள்

 • சில்வர் ஏர்ஃப்ளை எவோ என்ஜின் பாதுகாப்பான் - ரூ.3,950
 • கருப்பு ஏர்ஃப்ளை எவோ என்ஜின் பாதுகாப்பான் - ரூ.3,950
 • சில்வர் ஏர்ஃப்ளை என்ஜின் பாதுகாப்பான் - ரூ.4,250
 • சரிவக வடிவிலான கருப்பு நிற என்ஜின் பாதுகாப்பான் - ரூ.2,950
 • இதே என்ஜின் பாதுகாப்பான் சில்வர் நிறத்தில் - ரூ.3,150
 • புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க
  • சில்வர் நிறத்தில் எண்கோண வடிவிலான என்ஜின் பாதுகாப்பான் - ரூ.3,450
  • இதே என்ஜின் பாதுகாப்பான் கருப்பு நிறத்தில் - ரூ.2,900
  • சில்வர் நிற என்ஜின் அடித்தட்டு - ரூ.2,750
  • ரைடர் கால் வைக்கும் பகுதி

   • டீலக்ஸ் ஃபுட்பெக்ஸ் (Footpegs) சில்வர் மற்றும் கருப்பு நிறத்தில் - தலா ரூ.2,500
   • புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

    லக்கேஜ்

    • அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ப நீர்புகா உள் பை - ரூ.1,150
    • சாமான்களை எடுத்து செல்லும் கூடை - ரூ.1,950
    • இதற்கான கொக்கி - ரூ.1,800
    • பின்பக்கத்தில் பொருத்துவதற்கான கருப்பு நிற ராக் - ரூ.2,750
    • அலாய் சக்கரங்கள்

     • கருப்பு நிற ஸ்டைல்-1 அலாய் சக்கரங்கள் - ரூ.12,500
     • கருப்பு நிற ஸ்டைல்-2 அலாய் சக்கரங்கள் - ரூ.12,500
     • புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

      இருக்கைகள்

      • தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ற ரைடர் இருக்கை கருப்பு நிறத்தில் - ரூ.3,750
      • பழுப்பு நிறத்தில் - ரூ.3,750
      • பின் பயணிக்கான இருக்கை கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் - தலா ரூ.2,950
      • கருப்பு நிறத்தில் தாழ்வான ரைடர் இருக்கை - ரூ.2,500
      • புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

       உடல் அலங்கரிப்பு

       • ஹெட்லேம்பிற்கான சில்வர்/ கருப்பு நிற தொப்பி - ரூ.850
       • ஸ்டைலான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி - ரூ.3,950
       • சவுகரியம்

        • பழுப்பு/ கருப்பு நிறத்தில் பின் இருக்கை பயணிக்கான முதுகு தலையணை - ரூ.950
        • புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

         இருக்கை கவர்கள்

         • பழுப்பு/ கருப்பு நிறத்தில் மடிக்கப்பட்ட இருக்கை கவர்கள் - ரூ.1,000
         • கண்ணாடிகள்

          • கருப்பு நிறத்தில் ஹேண்டில்பார் முனைகளில் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் - ரூ.5,800
          • கருப்பு நிறத்தில் தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ற கண்ணாடிகள் - ரூ.6,250
          • புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

           பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிய கிளாசிக் 350-இன் டாப் வேரியண்ட்டின் விலை அதிகப்பட்சமாக ரூ.2.15 லட்சம் வரையில் உள்ளது.

           புதிய ராயல்என்பீல்டு கிளாசிக்350 பைக்கை வாங்க போறீங்களா? அப்போ இந்த பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் தெரிஞ்சிக்கோங்க

           புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கில் 349சிசி திறன் கொண்ட சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மீட்டியோர் 350 பைக்கில் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles

English summary
2021 Royal Enfield Classic 350 official accessories revealed Price, all details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X