அழகுல Royal Enfield-இன் பிற தயாரிப்புகளை மிஞ்சிருச்சி! SG650 கான்செப்ட் மாடல் வெளியீடு!

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக எஸ்ஜி 650 எனும் புதிய கான்செப்ட் மாடலை நேற்றைய தினம் நடைபெற்ற இஐசிஎம்ஏ 2021 (EICMA 2021)இல் வெளியீடு செய்தது. இந்த பைக் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

உலகின் மிகவும் பழைமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டு, நேற்றைய தினம், உலக வாகன அரங்கமான இஐசிஎம்ஏ 2021 (EICMA 2021) இல் அதன் வருங்கால வாகனங்கள் சிலவற்றை வெளியீடு செய்தது. இரட்டையர்கள் என்றழைக்கப்படும் கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய இரு மாடல்களின் ஸ்பெஷல் பதிப்புகளும் இங்கு வைத்தே நேற்று (நவம்பர் 23) வெளியீடு செய்யப்பட்டன.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

இவற்றைத் தொடர்ந்து தற்போது மேலும் ஓர் இருசக்கர வாகனத்தையும் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. புத்தம் புதிய எஸ்ஜி 650 (SG650) எனும் மாடலையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. முன்மாதிரி (கான்செப்ட்) மாடலாக இப்பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் ஸ்டைல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றது.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

ஆகையால், இப்பைக் எப்போது வேண்டுமானாலும் உற்பத்தி நிலைக்கு உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது 120 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றது. நிறுவனம் வாகன உற்பத்தியில் 1901 ஆம் ஆண்டில் களமிறங்கியது குறிப்பிடத்தகுந்தது.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தை முன்னிட்டே நிறுவனம் 120ம் ஆண்டுவிழா ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் மற்றும் புதிய எஸ்ஜி 650 மோட்டார்சைக்கிள்களை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இவற்றின் வெளியீட்டிற்கு நிறுவனம் உலக அரங்கமான இஐசிஎம்ஏ 2021 தேர்வு செய்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

அதே நேரத்தில், நிறுவனத்தின் இந்த செயல்பாடு இருசக்கர வாகனங்கள் உலக தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் எஸ்ஜி650 மோட்டார்சைக்கிள் ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மாடர்ன் கால ரெட்ரோ ஸ்டைல் பாயாக இதன் உருவம் காட்சியளிக்கின்றது.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அழகிய தோற்றத்தை அது கொண்டிருக்கின்றது. முந்தைய பாரம்பரிய தோற்றத்திலான மோட்டார்சைக்கிள்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த வாகனத்தின் வெளியீடு அமைந்திருக்கின்றது. இதன் முன் பக்கம் அலுமினியத்தால் மெருகூட்டப்பட்டிருப்பது இதற்கு முக்கிய சான்றாக அமைந்திருக்கின்றது.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

தொடர்ந்து, கூடுதல் கவர்ச்சி அம்சமாக டிஜிட்டல் கிராஃபிக்குகள் பைக்கின் பெட்ரோல் டேங்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அனலாக்கில் இருந்து நிறுவனம் டிஜிட்டல் சகாப்தத்திற்கு மாறியிருப்பதை உணர்த்துகின்றது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் எல்இடி மின் விளக்குகள் (ஹெட்லைட், வால்பகுதி விளக்கு மற்றும் இன்டிகேட்டர்கள்), அலுமினியம் ஹெட்லேம்ப் க்ளஸ்டர் உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

இத்துடன், பெரிய ப்யூவல் டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது திடமான அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. எட்ரியம்குலர் வடிவிலான அகலமான இருக்கைகள் இந்த பைக்கில் சொகுசான பயண அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இதன் தையல்கள் கைகளாலேயே தைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

குரோம் பூச்சுக் கொண்ட மட்குவார்ட் முன்பக்கத்திலும், கருப்பு நிறத்திலான மட்குவார்ட் பின் புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன், ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம், பெஸ்போக் டிசைனிலான காலிபர்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

120 ஆண்டுகள் கொண்டாட்டம்... கூடுதல் ஓர் புதிய பைக் மாடலை வெளியீடு செய்த Royal Enfield!

இதுமாதிரியான எண்ணற்ற அம்சங்களை புதிய கான்செப்ட் மாடல் எஸ்ஜி650 பைக் பெற்றிருக்கின்றது. இப்பைக்கில் ட்வின் பைக்குகளில் இடம் பெற்றிருக்கும் 650 சிசி எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

Most Read Articles
English summary
Royal enfield reveals sg650 concept at eicma
Story first published: Wednesday, November 24, 2021, 12:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X