கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

கடந்த 2021 ஜூலை மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட Royal Enfield பைக்குகள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

சென்னையை தலைமையிடமாக கொண்டு, இந்தியா உள்பட பல நாட்டு சந்தைகளில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துவரும் நமது உள்ளூர் பருந்தாக Royal Enfield நிறுவனம் விளங்குகிறது.

கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

இத்தகைய மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 38,930 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த விற்பனை எண்ணிக்கை இதற்கு முந்தைய 2021இல் விற்பனையான ராயல் என்பீல்டு பைக்குகளின் எண்ணிக்கையை காட்டிலும் 3,115 யூனிட்கள் அதிகமாகும்.

கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

ஏனென்றால், அந்த மாதத்தில் 35,815 Royal Enfield பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஜூலை மாதத்திலும் வழக்கம்போல் அதிகம் விற்பனையான Royal Enfield பைக்காக Classic 350 விளங்குகிறது. கடந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 16,890 Classic 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

இதற்கு முந்தைய ஜூன் மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான Classic 350 பைக்குகள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. என்ன, 500 யூனிட்கள் குறைவு, அவ்வளவுதான். இருப்பினும் Royal Enfield நிறுவனத்தின் பார்வையில் தற்போதைய Classic 350 பைக் பழையது ஆகிவிட்டது. இதனால்தான் புதிய தலைமுறை Classic 350 பைக்கை அறிமுகப்படுத்துவதற்கு இந்த நிறுவனம் தயாராகி வருகிறது.

கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் கொண்டுவரப்படும் புதிய Classic 350 பைக் அனைவருக்கும் சர்ப்ரைஸாக வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தோற்றத்தில் மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட Meteor 350 பைக்கின் 349சிசி என்ஜினையும் புதியதாக புதிய Classic 350 பெற்றுவரவுள்ளது.

கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

இதனால் விலை அதிகரிக்கப்படும், இருப்பினும் விற்பனையும் ஒருபக்கம் அதிகரிக்கும். ஆதலால் இனி வரும் மாதங்களில் Classic 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை 25,000-ஐ கடந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஒன்று மட்டும் உறுதி, சாலையில் புதிய புதிய Royal Enfield Classic பைக்குகளாக உலாவரும்.

கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

சரி மீண்டும் கீழுள்ள அட்டவணைக்கு வருவோம். கடந்த ஆண்டு வரையில் Royal Enfield பிராண்டில் இருந்து அதிகம் விற்பனையாகும் மாடல் என்றால் முதலில் Classic 350, அடுத்தது Bullet 350 ஆக தான் இருந்தது. எப்போது Meteor 350 அறிமுகமானதோ அப்போதில் இருந்து இரண்டாவது இடம் Meteor-க்கு சொந்தமாகியது.

Royal Enfield Jul-21 Jun-21
Bullet 350 7,133 5,317
Bullet 350 ES 2,949 3,137
Classic 350 16,890 17,377
Meteor 350 8,777 8,770
Himalayan 2,730 684
Twin 650 811 530
Total 38,930 35,815
கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

இது கடந்த ஜூலை மாதத்திலும் தொடர்ந்துள்ளது. 8,777 Meteor 350 பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், Bullet 350 7,133 யூனிட்கள் தான் விற்பனையாகி உள்ளது. இது எவ்வளவோ பரவாயில்லை, இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் Bullet 350-இன் விற்பனை 5 ஆயிரம் என்ற அளவில் தான் இருந்தது.

கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

Bullet 350 மாடலில் Bullet 350 ES வெர்சனும் விற்பனையில் உள்ளது. இது கடந்த மாதத்தில் 2,949 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இவற்றை தவிர மிச்சம் இருப்பது Himalayan-னும், 650 Twins பைக்குகளும் தான். இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை அப்கிரேடை பெற்ற Himalayan 2,730 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடைசி வரையில் வீழாமல் விற்பனையில் கர்ஜித்து கொண்டிருக்கும் Royal Enfield Classic350!! புதிய தலைமுறை வரப்போகுது

ஆனால் ஜூன் மாதத்தில் இந்த Royal Enfield அட்வென்ச்சர் பைக்கின் விற்பனை இதனை காட்டிலும் வெகுவாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. Continental GT650 மற்றும் Interceptor 650 என்பவை அடங்கும் Royal Enfield 650 Twins பைக்குகள் 811 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 650சிசி மோட்டார்சைக்கிள்கள் இந்த அளவிற்கு, 800 யூனிட்களுக்கு அதிகமாக விற்பனையாகுவது இந்தியாவை பொறுத்தவரையில் பெரிய விஷயமாகும்.

Most Read Articles

English summary
Here’s How Many Bikes Royal Enfield Sold In July 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X