கண்ணை கவரும் நிறங்களில் 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650... உங்களது தேர்வு எது? - வீடியோ

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை விளம்பரப்படுத்தும் விதத்திலான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கண்ணை கவரும் நிறங்களில் 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650... உங்களது தேர்வு எது? - வீடியோ

சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 காண்டினெண்டல் ஜிடி650 பைக்கில் புதிய அப்கிரேட்களாக புதிய வண்ணங்களில் நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது.

கண்ணை கவரும் நிறங்களில் 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650... உங்களது தேர்வு எது? - வீடியோ

புதிய நிறங்களில் வாடிக்கையாளர்களை கவர்ந்துவரும் 2021 காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளை மேலும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமான தற்போது இந்த வீடியோ ‘ஏ டன் ஆஃப் ஃபன்' என்ற பெயரில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மிஸ்டர் க்ளீன் நிறத்தேர்வின் அப்கிரேட் வெர்சன் மற்றும் புதிய மோசமான புயல் நிறத்தில் என இரு காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகள் காட்டப்படுகின்றன.

கண்ணை கவரும் நிறங்களில் 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650... உங்களது தேர்வு எது? - வீடியோ

அதன்பின் சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த பைக்குகள் இயக்கப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புதிய டக்ஸ் டீலக்ஸ் மற்றும் ராக்கர் சிவப்பு நிறத்தை கொண்ட புதிய காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளை நம்மால் பார்க்க முடிகிறது.

கண்ணை கவரும் நிறங்களில் 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650... உங்களது தேர்வு எது? - வீடியோ

மேலும் இந்த 650சிசி பைக்கிற்கு வழங்கப்படும் புதிய எதிர் காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் பின் இருக்கைக்கான இரட்டை கௌல் உள்ளிட்ட ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட பின்பு பைக் எவ்வாறு இருக்கும் என்பதும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

கண்ணை கவரும் நிறங்களில் 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650... உங்களது தேர்வு எது? - வீடியோ

எம்.ஐ.ஒய் (மேக் இட் யுவர்ஸ்) ப்ரோகிராமின் வாயிலாக மோட்டார்சைக்கிளை வாங்கும்போதே இந்த கூடுதல் ஆக்ஸஸரீகளையும் வாங்கலாம். வெறும் 39 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவின் கடைசி சில காட்சிகள் புத்தா சர்வதேச ரேஸ் ட்ராக்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்ணை கவரும் நிறங்களில் 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650... உங்களது தேர்வு எது? - வீடியோ

ரேஸ் ட்ராக் என்பதால் 2021 காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் அதிகப்பட்ச வேகம் எந்த அளவில் இருக்கும் என்பதை நமக்கு காட்டுவது போல் இந்த காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் ஆங்காங்கே பைக்கின் 648சிசி இணையான-இரட்டை என்ஜின் அமைப்பின் எக்ஸாஸ்ட் சத்தத்தை 270-கோன ஃபயரிங் ஆர்டர்டில் கேட்க முடிகிறது.

கண்ணை கவரும் நிறங்களில் 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650... உங்களது தேர்வு எது? - வீடியோ

புதிய பெயிண்ட் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதே தவிர்த்து 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்தை இந்த 2021 பைக்கிலும் பெரிதும் எதிர்பார்த்தோம், ஆனால் வழங்கப்படவில்லை.

கண்ணை கவரும் நிறங்களில் 2021 ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650... உங்களது தேர்வு எது? - வீடியோ

அதேபோல் புதிய அலாய் சக்கரங்களின் தேர்வையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர். அதுவும் கொடுக்கப்படவில்லை. பெயிண்ட் தேர்வை பொறுத்து புதிய ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.2,91,701-ல் இருந்து ரூ.3,13,367 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
2021 Royal Enfield Continental GT 650 Video Highlights New Colours. Read In Tamil.
Story first published: Friday, March 26, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X