Just In
- 33 min ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
- 1 hr ago
அதிக மைலேஜ் தரும் டாப்10 சப்-4மீ, க்ராஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தர கூடிய கார்கள் இந்தியாவில் இருக்கா!
- 2 hrs ago
2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!
Don't Miss!
- News
கபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..!
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கின் புதிய டிவிசி வீடியோ வெளியீடு!! உங்களது பார்வைக்கு இதோ...
2021 ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 பைக்குகளுக்கான புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களுடன் புதிய இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகள் அறிமுகமாகின.

இந்த 2021 பைக்குகளில் முக்கியமான அப்கிரேடாக புதியதாக பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 2021 ட்வின் பைக்குகளில் புதிய மேக் இட் யுவர்ஸ் தேர்வுகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் பைக்குகளை வாடிக்கையாளர்களே தங்களது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து கொள்ள முடியும். இந்த நிலையில் 2021 இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் 2021 இண்டர்செப்டர் 650 பைக்கின் புதிய டிவிசி வீடியோவினை ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ உங்களது பார்வைக்காக...
புதிய இண்டர்செப்டர் 650 பைக்கிற்கு கேயான் சிவப்பு மற்றும் வெண்டூரா நீலம் என்ற இரு சிங்கிள்-டோன் மற்றும் டவுண்டோன் ட்ராக் மற்றும் சன்செட் ஸ்ட்ரிப் என்ற இரு ட்யுல்-டோன் நிறங்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இதன் பழைய க்ரோம் மார்க் 2 பெயிண்ட்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் வழக்கமான ஆரஞ்சு க்ரஷ் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ் நிறங்களிலும் புதிய இண்டர்செப்டர் 650 பைக்கை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

புதிய நிறத்தேர்வுகளுடன் கருப்பு நிற ரிம்கள் மற்றும் மட்கார்ட்களையும் இந்த பைக்கின் சிங்கிள்-டோன் வேரியண்ட்களில் ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதேபோல் 2021 காண்டினெண்டல் ஜிடி650 பைக்கிலும் இரு சிங்கிள்-டோன் மற்றும் இரு ட்யுல்-டோன் என புதிய நிறத்தேர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மை மேக் இட் தேர்வில் டூரிங் இருக்கைகள், டூரிங் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், எதிர் காற்று தடுப்பு கண்ணாடிகள், என்ஜின் பாதுகாப்பான் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் பைக்குடன் கூடுதலாக வாங்கலாம்.

இந்த கூடுதல் ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட இண்டர்செப்டர் 650 பைக்குகளையும் இந்த டிவிசி வீடியோவில் பார்க்க முடிகிறது. ராயல் என்பீல்டின் இந்த 650சிசி இரட்டை பைக்குகளில் 649சிசி இணையான-இரட்டை, காற்று-ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக 7250 ஆர்பிஎம்-ல் 47 எச்பி மற்றும் 5250 ஆர்பிஎம்-ல் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இண்டர்செப்டர் 650 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.2.75 லட்சத்தில் இருந்து ரூ.2.97 லட்சம் வரையில் உள்ளன.