Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுச்சுக்க ஆளே இல்ல... டிசம்பரில் மோட்டார்சைக்கிள்களை விற்று தள்ளிய ராயல் என்பீல்டு... செம டெவலப்...
ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் உள்நாட்டு சந்தையில் 65,492 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 35 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டு சந்தையில் 48,489 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அதே சமயம் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 3,503 மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,927 மோட்டார்சைக்கிள்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இது 82 சதவீத வளர்ச்சியாகும். உள்நாட்டு விற்பனையை போன்று ஏற்றுமதியும் வளர்ச்சியடைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த டிசம்பரில் 68,995 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 50,416 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த விற்பனையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 37 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டின் கடைசியில் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வந்தது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக மீட்டியோர் 350 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளுடன், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிட்டு வருகிறது.

தற்போது இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நடப்பு 2021ம் ஆண்டிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், புதிய தலைமுறை கிளாசிக் 350 மிகவும் முக்கியமானது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட புதிய மோட்டார்சைக்கிள்கள் மூலம் போட்டி அதிகரித்து வரும் நிலையில், கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர புதிய இன்டர்செப்டார் 350 பைக்கையும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை கிளாசிக் 350 மற்றும் இன்டர்செப்டார் 350 ஆகிய 2 புதிய மோட்டார்சைக்கிள்களிலும், மீட்டியோர் 350 பைக்கின் இன்ஜின்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர தற்போது விற்பனையில் இருந்து வரும் ஹிமாலயன் பைக்கின் புதிய மாடலையும் ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு விற்பனைக்கு கொண்டு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள்களின் ரசிகர்களுக்கு நடப்பாண்டு கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.