அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

செக்வே-நைன்பாட் புதுமுக மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார வாகனத்தில் என்னென்ன சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

செக்வே எனும் மின்வாகன உற்பத்தி நிறுவனம் அதன் புதுமுக மின் வாகனம் ஒன்றை வெளியீடு செய்துள்ளது. இது ஓர் இரு சக்கரங்கள் கொண்ட செல்ஃப் பேலன்ஸிங் வாகனம் ஆகும். அதாவது, சுய சமநிலையை உறுதிப்படுத்தும் வசதிக் கொண்ட மின்சார வாகனம் ஆகும். இத்துடன், இந்த மின் வாகனத்தில் சிறப்பு வசதியாக ஹேண்டில் பார்க்கு பதிலாக ஸ்டியரிங் வீல் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

இளைஞர்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில் இந்த சிறப்பு வடிவமைப்பு இந்த மின் வாகனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதுமுக மின் வாகனத்திற்கு தயாரிப்பு நிறுவனம் நைன்பாட் எஸ் மேக்ஸ் எனும் பெயரை வைத்திருக்கின்றது.

அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

இந்த மின் வாகனத்தில் ஸ்டியரிங் வீல் மட்டுமின்றி திரை வசதியும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது வாகனத்தைப் பற்றி பற்றிய தகவல்களை விரல் நுணியில் வழங்க உதவும். அதாவது, இருப்பு சார்ஜ் அளவு, நேரம், இருப்பிடம், வேகம் என எக்கசக்க தகவல்களை இந்த திரை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

இந்த அம்சம் குறிப்பாக நவீனகால தொழில்நுட்பத்தை விரும்பும் வாகன ஆர்வலர்களைக் கவரும் நோக்கில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னதாக செக்வே நிறுவனம் அறிமுகப்படுத்திய பிற செல்ஃப் பேலன்ஸிங் மின்சார வாகனங்களைக் காட்டிலும் இது தனித்துவமான சில சிறப்பு வசதிகளைப் பெற்றிருக்கின்றது. அதாவது, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வசதி இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

இந்த மோடில் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது ரைடர் தனது உடலை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஒரே நேராக நிற்கும்போது வாகனம் இதனை தானாக கண்டறிந்து ஹேண்ட்-ஃப்ரீ மோடை இயக்கும். மேலும், எந்த பக்கம் திரும்ப வேண்டும் என்பதனை உடல் அசைவால் செய்தாலேபோதும் ஸ்கூட்டர் தானாகவே திசையைக் கண்டறிந்து செல்லும்.

அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

இதுபோன்ற சிறப்பு வசதிகளுடனேயே செக்வே இந்த மின்சார இருசக்கர வாகனத்தை உருவாக்கியிருக்கின்றது. இத்துடன், உயர்ந்த பிடிமானத்தைக் கொடுக்கக் கூடிய கால்களை வைக்கும் இடம், ஸ்பெஷல் டிபிஇ டயர், உலோகத்தாலான ஸ்டாண்ட், ஒற்றை பொத்தானில் ஆன் மற்றும் செல்போனுடம் இணைக்கும் வசதி என ஏராளமான தொழில்நுட்ப வசதிகளையும் நிறுவனம் வாரி வழங்கியுள்ளது.

அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

இத்துனை அம்சங்களைப் பெற்றும் இதன் ஒட்டுமொத்த எடை 22.7 கிலோகிராமக மட்டுமே இருக்கின்றது. ஆகையால், இதனை கையாள்வது மிக சுலபம். மேலும், இதில் 4,800 வாட் மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு தேவையான மின்சார திறனை 432Wh ஏர் கூல்டு வசதிக் கொண்ட பேட்டரி வழங்கும்.

அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

இந்த பேட்டரியை ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 38 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தின் உச்சபட்ச வேகம் மணிக்கு 20 கிமீ ஆகும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சம் 4 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இந்த வாகனத்தைக் கண்கானிக்கும் வகையில் சிறப்பு செல்போன் செயலி வழங்கப்படுகின்றது.

அந்த பக்கம், இந்த பக்கம் சாயாத இரு சக்கர மின் வாகனம்... ஸ்டியரிங் வீல் வசதியுடன் அறிமுகம்...

இதனைக் கொண்டு நைன்பாட் எஸ் மேக்ஸ் மின்சார வாகனத்தை இணைக்கும்போது பல்வேறு தகவல்களை நம்முடைய செல்போன் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, வாகனத்தை லாக் செய்வது, இருப்பிடத்தக் கண்டறிவது, பேட்டரி அளவை தெரிந்துக் கொள்வது எக்கசக்க தகவல்களைத் தெரிந்துக் கொள்ள முடியும்.

https://www.youtube.com/embed/CN7JzuHhLTY?rel=0

பள்ளிக் கூடம், அலுவலகம், கல்லூரி செல்வோர்களைக் கவனத்தில் கொண்டே இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் $899 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 65,521 ஆகும். இது முன்னதாக விற்பனையில் இருந்த செக்வே வாகனங்களைக் காட்டிலும் சற்று குறைந்த விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Segway Ninebot S Max Comes With Steering Wheel. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X