பஜாஜ் சேத்தக்கை டார்க்கெட் செய்து தயாராகும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை

பஜாஜ் சேத்தக்கிற்கு போட்டியாக விற்பனைக்கு வர தயாராகும் சிம்பிள் எனர்ஜி மார்க் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஸ் ட்ராக் ஒன்றில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் சேத்தக்கை டார்க்கெட் செய்து தயாராகும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை

நாளுக்கு நாள் எதிர்கால எலக்ட்ரிக் போக்குவரத்திற்கான பணிகள் தீவிரமாகி வருகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பஜாஜ் சேத்தக்கை டார்க்கெட் செய்து தயாராகும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை

இதன்படி புதிய புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்திய சந்தையில் வணிகத்தை துவங்க தயாராகுகின்றன. இந்த வகையில் களம் காணவுள்ள நிறுவனம் தான் பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனர்ஜி ஆகும்.

பஜாஜ் சேத்தக்கை டார்க்கெட் செய்து தயாராகும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை

கடந்த ஆண்டில் மார்க் 2 என்ற குறியீட்டு பெயரை கொண்ட அதன் வருங்கால இ-ஸ்கூட்டரை பற்றி அறிவித்திருந்த சிம்பிள் எனர்ஜி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக்கை டார்க்கெட் செய்து தயாராகும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை

இதற்கிடையில் தற்போது மார்க் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாதிரி ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரேஸ் ட்ராக் ஒன்றில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சோதனை செய்துள்ளதை பார்க்க முடிகிறது.

பஜாஜ் சேத்தக்கை டார்க்கெட் செய்து தயாராகும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை

மறைக்கப்பட்டு இருப்பினும் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்றதான இதன் தோற்றத்தை நம்மால் காண முடிகிறது. முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் ஹெட்லேம்ப்களை எல்இடி தரத்தில் எதிர்பார்க்கலாம்.

பஜாஜ் சேத்தக்கை டார்க்கெட் செய்து தயாராகும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை

ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி நன்கு அகலமானதாகவே வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரெஞ்சு தொழிற்நுட்ப நிறுவனமான டஸ்ஸால்ட்டின் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைத்து வருவதை சிம்பிள் எனர்ஜி நிறுவனம் ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தது நினைவுக்கூரத்தக்கது.

பஜாஜ் சேத்தக்கை டார்க்கெட் செய்து தயாராகும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை

ஸ்டைலில் மட்டுமில்லாமல் தொழிற்நுட்ப அம்சங்களில் இந்த இ-ஸ்கூட்டர் மிகவும் மாடர்ன் ஆனது ஆகும். ஏனெனில் இதில் ஐபி67 சான்றழிக்கப்பட்ட தொடுத்திரை, 4ஜி மற்றும் ப்ளூடூத் இணைப்பு, சரியாக மத்தியில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார், ஆன்-போர்டு நாவிகேஷன் மற்றும் சைக்கிளில் வழங்கப்படும் சங்கிலி அமைப்பை போன்றதான ட்ரைவ் உள்ளிட்டவற்றை சிங்கிள் எனர்ஜி நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது.

மார்க் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படவுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும் இந்த பேட்டரி தொகுப்பின் மூலம் அதிகப்பட்சமாக 9.4 பிஎச்பி மற்றும் 72 என்எம் டார்க் திறனை பெற முடியுமாம்.

பஜாஜ் சேத்தக்கை டார்க்கெட் செய்து தயாராகும் சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ரேஸ் ட்ராக்கில் சோதனை

ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற மூன்று விதமான ரைடிங் மோட்களில் வழங்கப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்போர்ட்ஸ் மோடில் அதிகப்பட்சமாக மணிக்கு 103 கிமீ வேகத்தில் செல்லலாம் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுவே 0-வில் இருந்து 50kmph வேகத்தை இந்த ஸ்கூட்டரில் வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிட முடியும். ஈக்கோ மோடில் இந்த இ-ஸ்கூட்டரின் ரேஞ்ச் 240கிமீ மற்றும் நார்மல் & ஸ்போர்ட்ஸ் மோட்களில் 220கிமீ மற்றும் 180கிமீ ஆகும்.

Most Read Articles

English summary
Simple Energy, the home-grown EV company has today released the testing images of the flagship e-scooter. Seen testing on the tracks, this Bangalore-based company has shifted its complete focus on developing a world-class product as the industry has seen large amount of investment coming in for the race to sustainable evolution.
Story first published: Thursday, April 1, 2021, 18:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X