வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

ஏத்தர் 450எக்ஸ் மின்சார ஸ்கூட்டருக்கு போட்டியாக அதிக ரேஞ்ஜ் திறனுடன் விற்பனைக்கு வர இருக்கும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு செய்துமுடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சிம்பிள் எனெர்ஜி. இது ஓர் குறைந்த முதலீட்டை கொண்டு இயங்கத் தொடங்கியிருக்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஓர் ஆரம்பநிலை நிறுவனமாக இருந்தாலும், இதன் முதல் தயாரிப்பை எதிர்நோக்கி இந்திய மின் வாகன பிரியர்கள் பலர் காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர்.

வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் ஒன். இதன் வருகையை எதிர்நோக்கியே இந்தியர்கள் பலர் காத்திருக்கின்றனர். தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் சிம்பிள் ஒன் உருவாகி வருகின்றது.

வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

ஆகையால்தான் பலர் ஆகஸ்டு 15ம் தேதி எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆம், ஆகஸ்டு 15ம் தேதி அன்றே சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு நிகழ்வு அரங்கேற இருக்கின்றது. இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவை சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

சிம்பிள் ஒன் ஓர் அதி-வேக பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இது உச்சபட்சமாக மணிக்கு 100கிமீ எனும் வேகத்தில் செல்லக் கூடியது. மேலும். 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனை சிம்பிள் ஒன் பெற்றிருக்கின்றது.

வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

இதுமட்டுமில்லைங்க இந்த மின்சார ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை போக முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக 4.8kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

இதுபோன்ற சூப்பர் திறன்களுடன் சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கின்ற காரணத்தினாலயே பலர் இதன் வருகையை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம், மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி இன்னும் பல சுவாரஷ்யமான சிறப்பு வசதிகள் ஸ்கூட்டரில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

அந்தவகையில், கிளவுட் இணைப்பு, 7 இன்சிலான தொடுதிரை இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் இணைப்பு, அழைப்பு ஏற்கும் வசதி என எக்கசக்க அம்சங்கள் அதில் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், அதிகபட்சம் ரூ. 1.10 லட்சம் தொடங்கி ரூ. 1.20 லட்சம் வரையிலான விலையில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

இது முழுக்க முழுக்க ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்க இருக்கிறது. இதுதவிர, டிவிஎஸ் ஐ க்யூப், பஜாஜ் சேத்தக் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கும் இது போட்டியாளனாக அமைய இருக்கிறது.

வெற்றிகரமாக முடிந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வர்த்தக பதிவு! ஏத்தர் 450எக்ஸ் ஆப்பு தயார்!

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபத் போன்ற முக்கிய நகரங்ககளில் முதலில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே இரண்டாம் கட்டமாக நாட்டின் பிற முக்கிய நகரங்களில் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை தொடங்க இருக்கிறது.

Most Read Articles
English summary
Simple Energy Trademarks The Name Simple One For It's Flagship e-Scooter. Read In Tamil.
Story first published: Monday, July 5, 2021, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X