1 நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5 கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் சிம்பிள். இந்நிறுவனம் மிக விரைவில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்நிகழ்வு வரும் ஆகஸ்டு 15ம் தேதி நிகழும் என ஏற்கனவே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

இந்த தினத்திலேயே ஓலா நிறுவனமும் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த தினத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சிம்பிள் ஒன் என பெயரிடப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரு நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

அறிமுகத்தில் மட்டுமில்லைங்க இன்னும் பலவற்றில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களாக சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

அந்தவகையில் இப்போதும் ஓர் தகவல் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெறும் 1 நிமிடம் சார்ஜ் செய்தால் 2.5 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இத்துடன், இதன் ஸ்டோரேஜ் அளவு 30 லிட்டர் என ஆச்சரியமளிக்கும் தகவலும் வெளியாகியுள்ளது.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

இதனால் ஏற்கனவே இதன் அறிமுகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்கள் இன்னும் அதிக ஆர்வத்துடன் ஆகஸ்டு 15ம் தேதி எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அன்றைய தினத்தின்போதே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களும் வெளியாக இருக்கின்றன.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

விலை மற்றும் என்னென்ன சிறப்பம்சங்கள் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன போன்ற அனைத்து தகவல்களும் வெளியாக இருக்கின்றன. சிம்பிள் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டஸ்ஸால்ட் சிஸ்டம்ஸின் 3டி எக்ஸ்பீரியன்ஸ் தளத்தைக் கொண்டு உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

இதில் கழட்டி மாட்டக் கூடிய பேட்டரி, பெரிய திரை, நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றன. இத்துடன், இன்னும் சில சிறப்பு வசதிகளும் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, சிம்பிள் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகம் ரேஞ்ஜ் தரும் வாகனமாக உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

அந்தவகையில் ஒற்றை சார்ஜில் 240 கிமீ தூரம் வரையிலான ரேஞ்ஜ் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ என்றும் கூறப்படுகின்றது. தற்போது அரசல் புரசலாக வெளியாகியிருக்கும் இந்த தகவல்களையே வரும் ஆகஸ்டு 15ம் தேதி அன்று சிம்பிள் நிறுவனம் உறுதி செய்ய இருக்கின்றது.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

சிம்பிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிகவும் எளிதாக பயன்படுத்தும் நோக்கில் மிகப் பெரிய சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்க இருக்கின்றது. அதாவது, சிம்பிள் லூப் எனும் சார்ஜிங் வசதியை தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

சுமார் 300க்கும் அதிகமான சார்ஜிங் மையங்களை முதல் கட்டமாக உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முக்கிய வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், ரெஸ்டாரன்டுகள் ஆகிய இடங்களில் நிறுவனத்தின் சார்ஜிங் மையங்கள் அமைய இருக்கின்றன.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. பெட்ரோல்-டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து வருவதும் இதற்கு ஓர் காரணம் ஆகும். மேலும், மின் வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு சிறந்த நண்பனாக விளங்கக் கூடியவை. இதன் காரணத்தினால்தான் உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன ஊக்குவிப்பை முழு நேர வேலையாக செய்து வருகின்றது.

வெறும் 1நிமிஷம் சார்ஜ் செஞ்சா 2.5கிமீ தூரம் போகலாம்... அசாத்திய திறன்களுடன் அறிமுகமாகிறது சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர்!

இந்தியாவிலும் இப்பணி மிக அமோகமாக நடைப்பெற்று வருகின்றது. அந்தவகையில், மிக சமீபத்தில் மின் வாகனங்களுக்கு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மானியம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது. ஆகையால், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மிக அமோகமான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Simple one electric scooter boot space details revealed officially
Story first published: Monday, August 9, 2021, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X