புதிய ஸ்டீல்பேர்டு பிராட் ஹெல்மெட்கள் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.5,149

ஸ்டீல்பேர்டு நிறுவனம் புதிய 'பிராட்' ஹெல்மெட்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்களை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

புதிய ஸ்டீல்பேர்டு பிராட் ஹெல்மெட்கள் விற்பனைக்கு அறிமுகம்!!

உலகளவில் ஹெல்மெட் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று ஸ்டீல்பேர்டு. இந்த நிறுவனத்தில் இருந்து சில ஹெல்மெட்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த வகையில் தற்போது பிராட் வரிசை ஹெல்மெட்களை அமெரிக்காவை சேர்ந்த பிளேவர் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஸ்டீல்பேர்டு நிறுவனம் வடிவமைத்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

பிளேவர், அமெரிக்காவில் அதிக செயல்திறன்மிக்க, பொதுமக்களுக்கான பாதுகாப்பு கவசங்களை தயாரிப்பதில் ஈடுப்பாட்டுடன் உள்ள நிறுவனமாகும். இந்த கூட்டணியின் விளைவாக பல அமெரிக்க பிளேவர் ஹெல்மெட்கள் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளன.

தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஸ்டீல்பேர்டு பிராட் ஹெல்மெட்கள் ஐரோப்பிய மற்றும் ஐஎஸ்ஐ என இரு நிலைப்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளன. ஐஎஸ்:4151 மதிப்பெண் இந்த ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிராட் ஹெல்மெட்கள் தெர்மோ பிளாஸ்ட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் இவை எடை குறைவாக இருக்கும் அதேநேரத்தில் வலிமையானவை ஆகவும் இருக்கும். இவற்றின் விலைகள் ரூ.5,149ல் இருந்து ஆரம்பிக்கின்றன.

புதிய ஹெல்மெட்களை அறிமுகம் செய்ததை குறித்து ஸ்டீல்பேர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் பேசுகையில், இளைஞர்களை மனதில் வைத்து ஒப்பிட முடியாத தரம், உலக தரம் வாய்ந்த பாதுகாப்பு தரங்கள் மற்றும் கவர்ச்சிகரமான மற்றும் துடிப்பான வண்ண கிராஃபிக் உள்ளிட்டவற்றுடன் இந்த ஹெல்மெட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்டைலில், கச்சிதமான, சவுகரியமான மற்றும் பாதுகாப்பான ஹெல்மெட்டை தேடும் அனைவருக்கும் இந்த ஹெல்மெட்கள் ஏற்றவையாக இருக்கும் என்றார். சவுகரியத்திற்கு, முறையான தகுதி பெற்ற துணிகள் இந்த ஹெல்மெட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்டீல்பேர்டு பிராட் ஹெல்மெட்களை வெள்ளை-கருப்பு, இண்டிகோ நீலம்-கருப்பு, க்ரே-கருப்பு, கருப்பு-வெள்ளை, கருப்பு-மஞ்சள், கருப்பு-டைட்டானியம் மற்றும் கருப்பு-சிவப்பு என்ற நிறங்களில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

அதேநேரம் எக்ஸ்.எக்ஸ்.எஸ்-இல் இருந்து எக்ஸ்.எல் வரையிலான அளவுகளில் இந்த ஹெல்மெட் கிடைக்கும். ஏற்கனவே கூறியதுபோல், ரூ.5,149 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட உள்ள பிராட் ஹெல்மெட்களை ஸ்டீல்பேர்டு நிறுவனத்தின் சில்லறை விற்பனை மையங்களிலும் அல்லது ஸ்டீல்பேர்டுஹெல்மெட்.காம் என்ற இணைய பக்கத்திலும் வாங்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஹெல்மெட் #helmet
English summary
Steelbird launches new ‘Brat’ helmets with ECE and IS certification at Rs 5,149.
Story first published: Friday, April 16, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X