புதிய ஸ்டூட்ஸ் ஷிஃப்டர் டி5 டெகோர் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.2,265

ஸ்டூட்ஸ் ஷிஃப்டர் டி5 டெகோர் ஹெல்மெட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்ப்பட்டுள்ளது. இந்த புதிய ஹெல்மெட்டை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்டூட்ஸ் ஷிஃப்டர் டி5 டெகோர் ஹெல்மெட் அறிமுகம்! விலை ரூ.2265

உலகின் முன்னணி இருசக்கர வாகன ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஸ்டூட்ஸ் ஆக்ஸஸரீஸ் லிமிடெட், அதன் தயாரிப்புகளின் மூலமாக மிகவும் பாதுக்காப்பான, சவுகரியத்தை வழங்கக்கூடிய பிராண்டாக உள்ளது.

இத்தகைய ஹெல்மெட் & ஆக்ஸஸரீஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஷிஃப்டர் டி5 டெகோர், ஒரு முழு-முக ஹெல்மெட் ஆகும். அதாவது, முழு தலையையும் பாதுகாக்கக்கூடியது. விரைவாக செயல்படக்கூடிய, சிலிக்கான் பூசப்பட்ட பூட்டு இந்த ஹெல்மெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன் அடர்த்தியான இபிஎஸ், கழற்றி மாற்றக்கூடிய உட்பக்க லைனர், முன் தலைப்பகுதியில் காற்று துளைகள் & காற்று எக்ஸாஸ்ட் போன்றவற்றையும் கொண்டுள்ள ஸ்டூட்ஸ் ஷிஃப்டர் டி5 டெகோர் ஹெல்மெட் நன்கு காற்று இயக்கவியலுக்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்பக்க கூடு ஆனது அதிக வலிமை கொண்ட என்ஜினீயரிங் தெர்மோ பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்டூட்ஸ் முழு-முக ஹெல்மெட்டின் விலை ரூ.2265 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டூட்ஸ் ஹெல்மெட்கள் வரிசையில் கிடைக்கும் ஸ்டைலிஷான ஹெல்மெட் மாடலாக இது கொண்டுவரப்பட்டுள்ளது.

கருப்பு என்1, கருப்பு என்2, கருப்பு என்3, கருப்பு என்5 மற்றும் கருப்பு என்10 என்கிற ஐந்து நிறத்தேர்வுகளில் புதிய ஷிஃப்டர் டி5 டெகோர் ஹெல்மெட்டை வாங்கலாம். இவை பளபளப்பான அல்லது சொரசொரப்பான ஃபினிஷிங்கில் கிடைக்கும். புற ஊதா எதிர்ப்பு வண்ணப்பூச்சு ஹெல்மெட்டின் நிறத்தின் மங்காமல் பாதுகாக்கும் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

5 விதமான நிறங்களை போல், 570மிமீ, 580மிமீ மற்றும் கூடுதல் அகலமாக 600மிமீ என்ற 3 அளவுகளில் இந்த புதிய ஹெல்மெட்டை ஸ்டூட்ஸ் ஆக்ஸஸரீஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. உயர் தரத்திலான துணியால் சவுகரியமாக அலங்கரிக்கப்பட்டுள்ள இதன் உட்பக்க அமைப்ப்பு எந்தவொரு அசவுகரியத்தையும் அனுமதிக்காது.

மேலும் புதிய ஷிஃப்டர் டி5 டெகோர் ஹெலெம்ட்டின் உட்புற லைனர், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் அலர்ஜிகளில் இருந்து பயன்படுத்துவரை பாதுக்காக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரத்திற்கு அணிந்திருந்தாலும், காய்ச்சல், தலைவலி, தேம்பல் போன்ற அலர்ஜியான வியாதிகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறது ஸ்டூட்ஸ்.

ஹெல்மெட்டின் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான பண்பு மோட்டார்சைக்கிளின் இழுவை குணகத்தை குறைப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அத்துடன் எளிமையான தாடை பூட்டு நிச்சயம் ரைடருக்கு சவுகரியத்தையும், பாதுகாப்பையும் வழங்கும்.

ஏற்கனவே கூறியதுதான், ஸ்டூட்ஸ் ஆக்ஸஸரீஸ் லிமிடெட் நிறுவனம் உலகின் மிக பெரிய இருசக்கர வாகன ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்டூட்ஸ் & எஸ்.எம்.கே என்ற இரு பிராண்ட்களில் ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

நீண்ட வரிசையில் ஹெல்மெட்களை கொண்டிருக்கும் ஸ்டூட்ஸ் புதிய தொழிற்நுட்பம், டிசைன் & கிராஃபிக்ஸ் உடன் ஒவ்வொரு வருடத்திலும் வேகமாக வளர்ந்து வருகிறது. பாதுகாப்பு, தரம் & ஸ்டைலின் மூலமாக வாடிக்கையாளர்களின் முதன்மையாக தேர்வாக ஹெல்மெட் & ஆக்ஸஸரீஸ் விற்பனையில் இருக்க முடியும் என்கிறது ஸ்டூட்ஸ்.

இந்தியா உள்பட உலகின் 40 நாடுகளில் ஸ்டூட்ஸ் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் ஆசிய, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகள் அடங்குகின்றன. நமது சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் ஸ்டூட்ஸ் ஹெலெட் ஷோரூம்கள் செயல்பாட்டில் உள்ளன.

அதேநேரம் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் ஸ்டூட்ஸ் ஹெல்மெட்களை வாங்கலாம். புதிய ஷிஃப்டர் டி5 டெகோர் ஹெல்மெட்டிற்கு முன்னதாக இந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் தண்டர் டி9 டெகோர் ஹெல்மெட்டை ஸ்டூட்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது.

ஷிஃப்டர் டி5 டெகோர் ஹெல்மெட்டை காட்டிலும் சற்று குறைவாக ரூ.1,895 என்கிற விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட தண்டர் டி9 டெகோர் ஹெல்மெட்டிலும் இதே ஐந்து நிறத்தேர்வுகள் தான் வழங்கப்படுகின்றன. அளவுத்தேர்வுகளிலும் (570, 580 & 600மிமீ) எந்த மாற்றமும் இல்லை.

Most Read Articles

மேலும்... #ஹெல்மெட் #helmet
English summary
STUDDS Launches Shifter D5 Decor Helmet.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X