அட்டகாசமான ஸ்டைலில் மின்சார மோட்டார்சைக்கிள்... டீசர் வீடியோ வெளியிட்டு கிரங்கடிக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்...

விரைவில் அறிமுகமாக உள்ள புதுமுக மின்சார மோட்டார்சைக்கிளுக்காக அசரடிக்கும் டீசர் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இந்த வீடியோ மற்றும் மின்சார பைக் பற்றிய சுவாரஷ்ய தகவலைக் கீழே காணலாம்.

அட்டகாசமான வசதிகளில் மின்சார மோட்டார்சைக்கிள்... டீசர் வீடியோ வெளியிட்டு கிரங்கடிக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்...

ஆஸ்திரேலிய நிறுவனமான விமோட்டோ (Vmoto)-விற்கு சொந்தமான நிறுவனம் சூப்பர் சோகோ (Super Soco). இந்நிறுவனம் விரைவில் ரெட்ரோ ஸ்டைலிலான மின்சார மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்டகாசமான வசதிகளில் மின்சார மோட்டார்சைக்கிள்... டீசர் வீடியோ வெளியிட்டு கிரங்கடிக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்...

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அதன் யுட்யூப் பக்கத்தில் புதிதாக வீடியோ ஒன்றை சூப்பர் சோகோ வெளியிட்டிருக்கின்றது. இது, ரெட்ரோ ஸ்டைலில் உருவாகி வரும் டிசி வாண்டரர் (TC Wanderer) எனும் மோட்டார்சைக்கிள் பற்றிய டீசர் வீடியோவாகும். இதனையே மக்களின் கவனத்தைக் கவரும் நோக்கில் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

அட்டகாசமான வசதிகளில் மின்சார மோட்டார்சைக்கிள்... டீசர் வீடியோ வெளியிட்டு கிரங்கடிக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்...

இந்த வீடியோவின்மூலம் விரைவில் வெளிவர இருக்கும் டிசி வாண்டரர் மின்சார பைக் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளன. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அட்டகாசமான வசதிகளில் மின்சார மோட்டார்சைக்கிள்... டீசர் வீடியோ வெளியிட்டு கிரங்கடிக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்...

வீடியோவில் முதலில் மின்சார மோட்டார்சைக்கிளின் அனலாக் டிஜிட்டல் டிஸ்பிளே காண்பிக்கப்படுகின்றது. இதில், பேட்டரி முழு சார்ஜ் திறனில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இத்துடன், ஓர் முழுமையான சார்ஜ் திறனில் பைக் எத்தனை கிமீ தூரம் வரை பயணிக்கும் என்ற தகவலும் அந்த திரையில் இடம் பெற்றிருக்கின்றன.

அட்டகாசமான வசதிகளில் மின்சார மோட்டார்சைக்கிள்... டீசர் வீடியோ வெளியிட்டு கிரங்கடிக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்...

இதை வைத்து பார்க்கையில் ஓர் முழுமையான சார்ஜில் டிசி வேண்டெரெர் பைக் சுமார் 198 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்நிறுவனத்தின்கீழ் டிசி வரிசையில் தற்போது விற்பனையில் இருக்கும் பிற மின்சார இருசக்கர வாகனங்கள் அதிகபட்சமா 130 கிமீ ரேஞ்ஜை மட்டுமே ஒரு முழுமையான சார்ஜில் வழங்கும் திறனில் இருக்கின்றன.

அட்டகாசமான வசதிகளில் மின்சார மோட்டார்சைக்கிள்... டீசர் வீடியோ வெளியிட்டு கிரங்கடிக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்...

இந்த நிலையிலேயே அதிக ரேஞ்ஜ் வசதிக் கொண்ட முதல் இருசக்கர வாகனமாக டிசி வாண்டரர் வர இருக்கின்றது. இது அந்நிறுவனத்தின் ரசிகர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, புதிய மோட்டார்சைக்கிளின் உச்சபட்ச வேகம் பற்றிய தகவலும் அதே திரையின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

அட்டகாசமான வசதிகளில் மின்சார மோட்டார்சைக்கிள்... டீசர் வீடியோ வெளியிட்டு கிரங்கடிக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்...

இதன்படி, உச்சபட்சமாக மணிக்கு 90 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனை இந்த மின்சார பைக் பெற்றிருப்பது தெரியவந்திருக்கின்றது. மேலும், தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவின் மூலம் இந்த இ-மோட்டார்சைக்கிளின் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்க வீலில் மோனோஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து, எல்இடி மின் விளக்குகளே இந்த வாகனத்தில் அலங்கரிக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இந்த வாகனத்தின் விலை மற்றும் பிற சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. மேலும், இதன் இந்திய வருகையும் சற்று சந்தேகமே. இருப்பினும், இந்த மோட்டார்சைக்கிளையே மிஞ்சும் வகையில் இந்தியாவிற்கான மின்சார பைக்குகள் தயாராகி வருகின்றன. அவை மிக விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Super Soco Releases New Teaser For Its Retro-Styled Electric Bike: Here Are Full Details & Video. Read In Tamil.
Story first published: Thursday, February 4, 2021, 17:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X