புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சுஸுகி ஆக்ஸஸ், பர்க்மேன் 125சிசி ஸ்கூட்டர்கள் புதிய நிறங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஆக்ஸஸ் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் ஏகப்பட்ட நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த இரு சுஸுகி ஸ்கூட்டர்கள் ரைடு கனெக்ட் எடிசன்களிலும் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

அவற்றிற்கும் சேர்த்துதான் இந்த புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய நிறத்தேர்வுகளினால் இவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்டாண்டர்ட் மாடலுக்கு மெட்டாலிக் டார்க் க்ரீனிஷ் நீலம் மற்றும் மெட்டாலிக் மேட் கருப்பு என்கிற இரு விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

இதில் மெட்டாலிக் டார்க் க்ரீனிஷ் நீல நிறத்தேர்வில் ஸ்கூட்டரின் பெரும்பான்மையான பகுதி பச்சை கலந்த நீல நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும்பகுதி உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்க, மெட்டாலிக் மேட் கருப்பு பெயிண்ட் தேர்வில் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர் முழுவதுமாகவே கருப்பு நிறத்தில் உள்ளது.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

மறந்துவிட வேண்டாம், இந்த நிறத்தேர்வுகள் ரைடு கனெக்ட் வசதி பெறாத ஆக்ஸஸ் ஸ்கூட்டருக்கானவை. சுஸுகி ஆக்ஸஸ் 125 ரைடு கனெக்ட் எடிசனுக்கு புதிய ‘பளபளப்பான க்ரே' பெயிண்ட் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பளபளப்பான க்ரே நிறத்தேர்வை சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்டாண்டர்ட் எடிசன் மற்றும் ரைடு கனெக்ட் எடிசன்களும் பெற்றுள்ளன.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

இந்த பளபளப்பான க்ரே பெயிண்ட்டில் ஸ்கூட்டர்கள் மிகவும் பிரீமியம் தரத்தில் ஜொலிக்கின்றன. இதனால் குறிப்பாக இந்த நிறத்தேர்வில் இந்த சுஸுகி ஸ்கூட்டர்களை இளம் தலைமுறையினர் வாங்க விரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த புதிய நிறத்தேர்வுகள் இந்த சுஸுகி ஸ்கூட்டர்களின் கவர்ச்சியை மேலும் மெருக்கேற்றி உள்ளன.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

இந்த புதிய பெயிண்ட் தேர்வுகளுடன் சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதியையும் ஆக்ஸஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்களில் சுஸுகி நிறுவனம் புதியதாக சேர்த்துள்ளது. ஏனெனில் சைடு-ஸ்டாண்டினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, இந்த வசதியை இந்திய அரசாங்கம் ஸ்கூட்டர்களில் கட்டாயமாக்கி வருகிறது.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

இந்த இரு அப்டேட்களை தவிர்த்து புதிய சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் மாடல்களில் வேறெந்த மாற்றமும் இல்லை. இவை இரண்டிலும் 124சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,750 ஆர்பிஎம்-இல் 8.7 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

மேக்ஸி-ஸ்கூட்டர் தோற்றத்தில் காட்சியளிக்கும் பர்க் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரானது ஆக்ஸஸ் 125 மாடலுடன் ஒப்பிடுகையில் சற்று ஸ்போர்டியரானது ஆகும். பர்க்மேனில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ஸ்போர்டியான எல்இடி ஹெட்லைட் & பொசிஷின் விளக்கு, பின்பக்கத்தில் எல்இடி இணைப்பு விளக்கு, விண்ட்ஸ்க்ரீன், முன்பக்க டிஸ்க் ப்ரேக் மற்றும் ஸ்போர்டியான மஃப்லர் கவர் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

ஆக்ஸஸ் 125 மற்றும் பர்க்மேன் இரண்டும் இருக்கைக்கு அடியில் போதுமான அளவு இடவசதியை பெறுகின்றன. அதேபோல் சார்ஜிங் துளையும் இவற்றில் சுஸுகி வழங்குகிறது. இவற்றில் கொடுக்கப்படும் ரைடு கனெக்ட் வசதி ஆனது ப்ளூடூத் மூலமாக ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போனை ஸ்கூட்டருடன் இணைக்க அனுமதிக்கிறது. சுஸுகி ரைடு கனெக்ட் செயலி மூலமாக போனின் சில வசதிகளை ஸ்கூட்டரின் டேஸ்போர்டிலேயே மேற்கொள்ளலாம்.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

இதன் வாயிலாக, மிஸ்டு-கால் எச்சரிக்கை, காலர் ஐடி, போன் அழைப்பிற்கான எச்சரிக்கை, எஸ்எம்எஸ் & வாட்ஸ் ஆப், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, இடிஏ அப்டேட்கள், போன் பேட்டரியின் சார்ஜ் அளவு உள்பட ஒவ்வொரு திருப்பலுக்கு நாவிகேஷன் வசதியினையும் பெறலாம். சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.74,374ஆக உள்ளது.

புதிய நிறங்களில் சுஸுகி ஆக்ஸஸ் & பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!! விலையில் மாற்றமில்லையாம்!

ஆனால் ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.83,271இல் இருந்து ஆரம்பிக்கிறது. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மேக்ஸி-ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போதைக்கு ரூ.87,770 ஆகவும், இதன் ரைடு கனெக்ட் எடிசனின் விலை ரூ.91,271 ஆகவும் உள்ளன. விற்பனையில் பர்க்மேன் மாடலுக்கு ஹோண்டா டியோ, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், டிவிஎஸ் ஜூபிட்டர் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

English summary
Suzuki Access, Burgman 125cc Scooters Updated – New Colours Launched.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X