சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி மோட்டார்சைக்கிளை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்காகவே அட்டகாசமான சலுகை ஒன்றினை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய வணிகத்தை இந்த நடப்பு நிதியாண்டில் சில குறிப்பிடத்தக்க விற்பனை எண்ணிக்கைகளுடன் நிறைவு செய்ய கடுமையாக முயற்சித்து வருகிறது.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

அதன் ஒரு வெளிப்பாடாக தற்போது வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கிற்கு ரூ.1.15 லட்சம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் இந்த சலுகை அறிவிப்பின்படி ரூ.65,000 மதிப்பிலான ஆக்ஸஸரீகளையும் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற முடியும்.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

சுஸுகியின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி ஒரு பக்கா அட்வென்ச்சர் பைக்காகும். ஸ்டாண்டர்ட் என்ற ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.8.84 லட்சமாக உள்ளது.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு ஆக்ஸஸரீகளாக ஆக்ஸஸரீ பார், அலுமினியத்திலான சங்கிலி பாதுகாப்பான் மற்றும் செண்டர் ஸ்டாண்ட் உள்ளிட்டவற்றை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

இந்த முதன்மை சலுகைகள் மட்டுமின்றி எக்ஸ்சேன்ஞ் போனஸ், இன்ஸ்சூரன்ஸ் சலுகை போன்ற இரண்டாம் தர சலுகைகளையும் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

எக்ஸ்சேன்ஞ் போனஸின்படி, 350சிசி அல்லது அதற்கு மேற்பட்ட மோட்டார்சைக்கிளை எக்ஸ்சேன்ஞ் செய்யும் வாடிக்கையாளர் அதிகப்பட்சமாக ரூ.50,000 வரையில் மிச்சப்படுத்தலாம். அதேபோல் ரூ.40,000 வரையில் இன்ஸ்சூரன்ஸ் சலுகையும் இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு சுஸுகி அறிவித்துள்ளது.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

ஆனால் எக்ஸ்சேன்ஞ் போனஸ் அல்லது இன்ஸ்சூரன்ஸ் சலுகை என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தான் வாடிக்கையாளர் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பைக்கை எக்ஸ்சேன்ஞ் செய்ய சில சட்டப்பூர்வமான ஆவணங்களை வாடிக்கையாளர் தாக்கல் செய்ய வேண்டும்.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

இந்த ஆவணங்களில் எக்ஸ்சேன்ஞ் செய்யப்படும் வாகன பதிவு சான்றிதழின் நகல், வாடிக்கையாளரின் உறுதிப்பாட்டு கடிதம், மற்றவரிடம் இருந்து வாங்கப்பட்ட வாகனமாக இருப்பினும் மாற்றப்பட்ட பதிவு சான்றிதழின் நகல், வாஹன் பதிவு ஒப்புதல் மற்றும் புதிய வாகனத்திற்கான இன்ஸ்சூரன்ஸ் நகல் உள்ளிட்டவை அடங்குகின்றன.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

இவை மட்டுமில்லாமல் வாகனத்தை விற்றவர் எந்த வகையில் உறவு என்பதற்கான சான்றையும் வாடிக்கையாளர்கள் வழங்க வேண்டும் என்றும் சுஸுகி நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. ஏனெனில் தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மனைவி அல்லது மகன்/ மகளிடம் இருந்து வாகனம் வாங்கப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.

சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் அட்வென்ச்சர் பைக்கை சொந்தமாக்குவதற்கு இதுவே சரியான நேரம்!! ரூ.1.15 லட்சம் வரையில் சலுகை

இந்திய சந்தையில் சுஸுகியின் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி அட்வென்ச்சர் பைக்கிற்கு போட்டியாக கவாஸாகி வெர்ஸஸ் 650 மற்றும் ஹோண்டாவின் மிக சமீபத்திய அறிமுகமான சிபி500எக்ஸ் உள்ளிட்டவை உள்ளன. ஆனால் இவை இரண்டின் விலையும் சுஸுகி பைக்கை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Suzuki announced offer and benefits for V-Strom 650XT find here more details in Tamil.
Story first published: Friday, March 19, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X