சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

சுஸுகி மோட்டார்சைக்கிளின் முதல் எலக்ட்ரிக் மாடலாக வெளிவரவுள்ள பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக் வாகனங்களை சார்ந்து தான் இருக்கும் என்பதை அறிந்து பெரும்பான்மையான தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் தயாரிப்புகளை தயாரிக்க ஆரம்பித்துவிட்டன.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

இந்த வகையில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் பிரபலமான பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் எலக்ட்ரிக் வெர்சனின் தயாரிப்பு பணிகள் ஈடுப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வருங்கால எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீப காலமாக தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

இதன்படி தற்போது பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் மீண்டும் காடிவாடி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், சுஸுகி நிறுவனத்தின் முதன்மை விற்பனை ஸ்கூட்டர் மாடல்களுள் ஒன்றாக பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 விளங்குகிறது.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

அதில் விரைவில் கொண்டுவரப்படும் எலக்ட்ரிக் வெர்சன் நிச்சயம் கூடுதல் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் இன்னமும் இரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

இதனால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எந்த மாதிரியான பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார், எத்தகைய ரேஞ்சில் வழங்கப்படும் உள்ளிட்ட தகவல்கள் இதுவரையில் நமக்கு தெரியவில்லை. தற்சமயம் முன்னணி நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

இவற்றுடன் விற்பனையில் ஜொலிக்க வேண்டுமென்றால், சிறப்பான ரேஞ்சில், மலிவான விலையில் பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். தற்போதைய சோதனை பர்க்மேன் ஸ்கூட்டர் வெள்ளை- நீலம் கலந்த நிறத்தில் உள்ளது.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

மாசுவை உமிழும் எக்ஸாஸ்ட் குழாயை இந்த ஸ்கூட்டரில் பார்க்க முடியவில்லை. சஸ்பென்ஷன் சுருள்கள் மற்றும் க்ராப் ரெயில் கருப்பு நிறத்திலும், பின் டயர் கட்டியணைப்பான் மற்றும் பின்பக்க ஃபெண்டரின் வடிவம் திருத்தியமைக்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

நமக்கு தெரிந்தவரையில், இந்த மாற்றங்களை தவிர்த்து பர்க்மேன் எலக்ட்ரிக் வெர்சன் பெரும்பான்மையாக தற்சமயம் விற்பனையில் இருக்கும் அதன் பெட்ரோல் வெர்சனையே பெரிதும் ஒத்து காணப்படும்.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

குறிப்பாக பெரிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி உடன் முன்பக்க பகுதி, பருத்த உடற் பேனல்கள் மற்றும் அகலமான ஓட்டுனர் மற்றும் பின் பயணிக்கான இருக்கை உள்ளிட்டவை தற்போதைய பர்க்மேன் பெட்ரோல் மாடலில் இருந்து தொடரப்படும்.

சுஸுகி பிராண்டில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யுப் இவி ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக..

அதேநேரம் ப்ளூடூத் இணைப்புடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள், ஒற்றை-துண்டில் க்ராப் ரெயில், எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் & டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவற்றையும் பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Suzuki Burgman Electric Scooter Spotted Again Ahead Of Launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X