சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்!

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதில், ஏத்தர், ஆம்பியர், ஒகினவா என பல புதிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களும் இந்த சந்தையில் இறங்கி உள்ளன. இந்த சூழலில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க ஆயத்தமாகி வருகிறது.

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்!

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அடிப்படையிலான எலெக்ட்ரிக் வெர்ஷன் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்!

சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் ஸ்பை படங்கள் ரஷ்லேன் தளம் மூலமாக வெளிவந்துள்ளன. இதில், பெட்ரோல் பர்க்மேன் ஸ்கூட்டருக்கும், எலெக்ட்ரிக் மாடலுக்கும் தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், சில மாற்றங்கள் உள்ளன.

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்!

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சைலென்ஸ் அமைப்பு இல்லை என்பதுடன், பின்புறத்தில் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், சில புதிய வண்ணத் தேர்வுகளும் வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்!

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 முதல் 4 kWh பேட்டரி தொகுப்பும், 4 முதல் 6kW திறன் வாய்ந்த மின் மோட்டாரும் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மாடலுக்கு இணையான திறனை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்!

மேலும், சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும். புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதியுடன் எதிர்பார்க்கப்படுகிறது. போன் அழைப்பு, எஸ்எம்எஸ் வருவது குறித்த எச்சரிக்கை தகவல்கள், நேவிகேஷன் வசதிகளை பெற இது துணை புரியும்.

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டம்!

புதிய சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும். ஆனால், இது டிசைனில் மேக்ஸி ரக மாடலாக இருக்கும்.

Most Read Articles

English summary
Suzuki is testing new electric scooter in India based on Burgman 125 scooter.
Story first published: Wednesday, February 24, 2021, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X