சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

பஜாஜ் சேத்தக்கிற்கு போட்டியாக சுஸுகி நிறுவனம் கொண்டுவரவுள்ள 2021 பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

எந்தவொரு மறைப்பும் இல்லாமல் சுஸுகி பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சில வாரங்களுக்கு முன்புதான் சாலை சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த இவி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் சோதனை ஓட்டத்தில் இருந்து வெளிவந்துள்ளன.

சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் நுழைய சுஸுகி ஆவலாக உள்ளது. இந்த வகையில் நம் நாட்டு சந்தைக்கான சுஸுகியின் தயாரிப்பு பணிகளில் பர்க்மேன் இவி ஸ்கூட்டரும் உள்ளது. கடந்த சில மாதங்களாக அவ்வப்போது சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதால் பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கலாம்.

சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள தற்போதைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் இரு-நிற பெயிண்ட் மட்டுமின்றி தோற்றத்திலும் எரிபொருள் என்ஜின் வெர்சன் உடன் ஒப்பிடுகையில் பர்க்மேன் எலக்ட்ரிக் வெர்சன் சற்று வித்தியாசப்படுகிறது.

சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

ஸ்கூட்டரின் எடையை தாங்குவதற்காக இந்த சோதனை பர்க்மேன் ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் மற்றொரு ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து இந்த சுஸுகி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படவுள்ள தொழிற்நுட்ப அம்சங்கள் அனைத்தும் மறைமுகமாகவே பாதுகாக்கப்படுகின்றன.

சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

நமக்கு தெரிந்தவரை இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஸ்கூட்டரின் மையத்தில் நிரந்தர ஏசி எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படலாம். பெல்ட் மூலமாக இயங்கக்கூடியதாகவும், 5-ல் இருந்து 6 கிலோவாட்ஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாகவும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம்.

சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

அதேபோல் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார் உடன் பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 100-ல் இருந்து 120 கிமீ தூரம் இயக்கி செல்லும் வகையில் சுஸுகி நிறுவனம் வழங்கும் என தெரிகிறது.

சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

மற்றப்படி பர்க்மேன் எரிபொருள் ஸ்கூட்டரில் வழங்கப்படும் முன்பக்க டிஸ்க் ப்ரேக், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அலாய் சக்கரங்கள் மற்றும் ட்யுப்லெஸ் டயர்கள் போன்ற அம்சங்களை பொறுத்தவரையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சுஸுகி நிறுவனம் எந்த குறையும் வைக்காது.

சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

பர்க்மேன் எலக்ட்ரிக்கில் ஸ்மார்ட்போன் இணைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த சோதனை மாதிரியில் எல்இடி டிஆர்எல்களுடன் முழு-எல்இடி ஹெட்லேம்பிற்கு பதிலாக ஹலோஜன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இதன் விற்பனை வெர்சனிலும் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

சோதனைகளில் சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! பஜாஜ் சேத்தக்கை சமாளிக்குமா?

பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் போன்ற தற்சமயம் விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சுஸுகி கொண்டுவரும் பர்க்மேன் எலக்ட்ரிக்கின் அதிகப்பட்ச வேகம் 80kmph என்ற அளவிலும், 0-வில் இருந்து 40kmph வேகத்தை 4 வினாடிகளுக்கு உள்ளாக அடையும் விதத்திலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 Suzuki Burgman Electric Scooter Spied – Bajaj Chetak Rival Detailed
Story first published: Tuesday, January 5, 2021, 22:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X