உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் 2021 ஹயபுசா பைக்கை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இப்பைக் பற்றிய கூடுதல் சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், அதன் 2021 ஹயபுசா சூப்பர் பைக்கை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. எக்கசக்க அப்டேட்டான அம்சங்களுடன் இப்பைக் அறிமுகமாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், 2021 ஹயபுசா பைக்கில் புதிய காஸ்மெடிக், வசதிகள் மற்றும் எலெக்ட்ரானிக் கூறுகளை காண முடியும்.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

டிசைன்; 2021 ஹயபுசா பைக் அதன் பழமையான தோற்றத்தை இழக்கவில்லை. இருப்பினும், அந்த தோற்றம் புதிய கூறுகளினால் சற்று நவீன லுக்குடன் காட்சியளிக்கின்றது. இதனால், முன்பைக் கூடுதலான கவர்ச்சியான தோற்றத்தை இப்பைக் பெற்றிருக்கின்றது. இதற்கேற்ப பைக்கின் முகப்பு பகுதியில் எக்கசக்க நவீன கூறுகளை நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

புதிய ஸ்டைலிலான எல்இடி மின் விளக்குகள், ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லைட்டுகள் பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. டர்ன் இன்டிகேட்டர்களும் அட்டகாசமானதாக காட்சியளிக்கின்றது. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு இதன் அழகு இருக்கின்றது. பின்பகுதி இன்டிகேட்டரைக் காட்டிலும் முன்பக்க இன்டிகேட்டர் அசத்தலானதாக இருக்கின்றது.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

இவையனைத்தும் சேர்ந்து ஹயபுசா பைக்கை முரட்டுத் தனமான ஸ்போர்ட்ஸ் பைக்கைப்போல் காட்சியளிக்கச் செய்கின்றது. தொடர்ந்து, 2021 சுசுகி ஹயபுசா பைக்கில் புதிய இரட்டை அடுக்கு குரோம் பூச்சுக் கொண்ட எக்சாஸ்ட் பைப்புகள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது பைக்கின் பக்கவாட்டு பகுதிக்கு கவர்ச்சியைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

இதுமட்டுமின்றி, ரைடருக்கு அதிக பயனை வழங்கும் வகையில் புதிய எலெக்ட்ரானிக் கருவிகள் இப்பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில், டிஎஃப்டி டிஸ்ப்ளே சிறப்பு வாய்ந்த கருவியாக காட்சியளிக்கின்றது. இக்கருவியின் மூலம் கியர்களை ஸ்விட்ச் செய்வது, ரைடிங் மோட்களை மாற்றுவது மற்றும் நேவிகேஷன் தகவல்களை அறிந்து பல்வேறு முக்கிய விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

இந்த பைக்கில் மூன்று விதமான மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. லான்ச் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஆறு ஆக்சில்கள் கொண்ட ஐஎம்யூ மற்றும் மூன்று லெவல்கள் கொண்ட எஞ்ஜின் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவ தனி சிறப்பு கொண்ட வசதிகளும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

மேலும், சிறப்பு வசதியாக சுசுகியின் இன்டெல்லிஜன்ட் ரைட் சிஸ்டத்தையும் (Suzuki Intelligent Ride System) சுசுகி நிறுவனம் இப்பைக்கில் வழங்கியிருக்கின்றது. தொடர்ந்து, மிக உறுதியான கட்டமைப்பிற்காக அலுமினியம் ஃப்ரேம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை உறுதியானவை மட்டுமில்லைங்க சற்று இலகு எடைக் கொண்டவையும்கூட.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

இதுபோன்ற தனி சிறப்புகள் பலவற்றை இப்பைக் கொண்டிருப்பதால் இளைஞர்கள் மத்தியில் மீண்டும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கில் 1,340 சிசி திறன் கொண்ட இன்-லைன், 4 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

இது முந்தைய வெர்ஷன் சுசுகி ஹயபுசா பைக்கைக் காட்டிலும் குறைந்த திறனே ஆகும். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் 7பிஎச்பி-யை குறைவாகவே 2021 ஹயபுசா வெளியேற்றுகின்றது. இது யூரோ 5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 18,599 என்ற விலையில் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

உலகளவில் அறிமுகமானது 2021 சுசுகி ஹயபுசா... முன்பைவிட மிக கவர்ச்சியான தோற்றத்தில்... விலை எவ்ளோ தெரியுமா?

இது இந்திய மதிப்பில் ரூ. 13.55 லட்சம் ஆகும். விரைவில் இப்பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவிருக்கின்றது. ஆனால் இதற்கான நாள் பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் மிக குறைந்த காலத்தில் 2021 சுசுகி ஹயபுசா இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Suzuki Globally Unveiled 2021 Hayabusa Super Bike. Here More Details About Bike. Read In Tamil.
Story first published: Friday, February 5, 2021, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X