விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 3 நாளில் ஒட்டுமொத்த யூனிட்டும் விற்பனை... அமோகமான வரவேற்பில் சுசுகி ஹயபுசா!!

விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட மூன்றே நாளில் ஒட்டுமொத்த ஸ்பெஷல் எடிசன் சுசுகி ஹயபுசா பைக்கும் விற்று தீர்ந்திருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 3 நாளில் ஒட்டுமொத்த யூனிட்டும் விற்பனை... அமோகமான வரவேற்பில் சுசுகி ஹயபுசா!!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி, அண்மையில் ஹயபுசா சூப்பர் பைக்கை உலகளவில் வெளியீடு செய்தது. இந்த அறிமுகத்தோடு சேர்த்து ஸ்பெஷல் எடிசன் ஹயபுசா பைக்கையும் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், இத்தாலி இருசக்கர வாகன சந்தைக்காக மட்டுமே இதனை சுசுகி அறிமுகப்படுத்தியது.

விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 3 நாளில் ஒட்டுமொத்த யூனிட்டும் விற்பனை... அமோகமான வரவேற்பில் சுசுகி ஹயபுசா!!

ஒட்டுமொத்தமாக 10 யூனிட்டுகள் மட்டுமே களமிறக்கப்பட்டன. இவற்றை புக் செய்ய மார்ச் 15 தேதியே கடைசி நாள் என்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், கெடு காலத்திற்கு முன்னரே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பைக் யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 3 நாளில் ஒட்டுமொத்த யூனிட்டும் விற்பனை... அமோகமான வரவேற்பில் சுசுகி ஹயபுசா!!

அதாவது, வெறும் மூன்றே நாட்களில் அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் ஹயபுசா பைக்கை கருப்பு மற்றும் கோல்டு நிறத்தில் சுசுகி உருவாக்கியிருக்கின்றது. இத்துடன், கார்பன் கண்ணாடி கவர்கள், கார்பன் டேங்க் பேட், ரிம் ஸ்ட்ரிப் மற்றும் நிறுவனத்தின் லோகோ உடன் கூடிய ஸ்பெஷல் அனோடைஸ் லிவர்கள் என பல்வேறு சிறப்பு கூறுகள் பைக்கில் இடம்பெற்றிருக்கின்றன.

விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 3 நாளில் ஒட்டுமொத்த யூனிட்டும் விற்பனை... அமோகமான வரவேற்பில் சுசுகி ஹயபுசா!!

ஆகையால், வழக்கமான ஹயபுசா பைக்கைக் காட்டிலும் இந்த ஸ்பெஷல் எடிசன் ஹயபுசா பைக் சற்று வித்தியாசமானதாக காட்சியளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேசமயம், இந்த இரண்டும் இடையில் உருவத்தில் மட்டுமே வித்தியாசம் மட்டுமே தென்படுகின்றது.

விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 3 நாளில் ஒட்டுமொத்த யூனிட்டும் விற்பனை... அமோகமான வரவேற்பில் சுசுகி ஹயபுசா!!

எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் நம்மால் காண முடியாது. வழக்கமான மற்றும் ஸ்பெஷல் எடிசன் என இருவிதமான ஹயபுசா பைக்குகளிலும் யூரோ5 தரத்திலான 1340 சிசி இன்லைன் 4 சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 187.7 பிஎச்பியை 9,700 ஆர்பிஎம்மிலும், 150 என்எம் டார்க்கை 7,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும்.

விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 3 நாளில் ஒட்டுமொத்த யூனிட்டும் விற்பனை... அமோகமான வரவேற்பில் சுசுகி ஹயபுசா!!

இந்த எஞ்ஜின் ரைட்-பை-ஒயர் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றது. மேலும், திருத்தப்பட்ட உட்கொள்ளல் (intake) மற்றும் வெளியேற்ற வழிமுறை (exhaust) உள்ளிட்ட செட்-அப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்த மாறுதல்கள் அதிக திறன் வெளிப்பாடு மற்றும் சிறந்த டார்க்கை வெளியேற்ற உதவும். இதன்படி, லிட்டர் ஒன்றிற்கு 14.9 கிமீ மைலேஜை இப்பைக் வழங்கும் என கூறப்படுகின்றது.

விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 3 நாளில் ஒட்டுமொத்த யூனிட்டும் விற்பனை... அமோகமான வரவேற்பில் சுசுகி ஹயபுசா!!

சுசுகி ஹயபுசா பைக் விரைவில் இந்தியாவிலும் கால் தடம் பதிக்க இருக்கின்றது. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது. இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 3 நாளில் ஒட்டுமொத்த யூனிட்டும் விற்பனை... அமோகமான வரவேற்பில் சுசுகி ஹயபுசா!!

இதனால், பெருமளவிலான விலை குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்த அறிவிப்புகளை இன்னும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுவும் இன்னும் ஒரு சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Suzuki Hayabusa Limited Edition All Units Sold Out With In A 3 Days. Read In Tamil.
Story first published: Wednesday, February 10, 2021, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X