2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!

இரு புதிய நிறங்களில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் 2021 ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!

2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக்கிற்கு ட்ரைடன் மெட்டாலிக் நீலம் மற்றும் டைடன் ப்ளாக் என்ற இரு நிறங்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி என்ஜின் அமைப்பில் கை வைக்கப்படவில்லை.

2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!

இதனால் அதே சிங்கிள்-சிலிண்டர் 124சிசி என்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 15 பிஎஸ் மற்றும் 11 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சஸ்பென்ஷன் பணியை கவனிக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக்கும், ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் மற்றும் பின் சக்கரத்தில் 290மிமீ மற்றும் 187மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ட்யுல்-சேனல் ஏபிஎஸ்-உம் உள்ளது.

2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!

முன்பக்கத்தில் 2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் டிஆர்எல்களுடன் முழு-எல்இடி ஹெட்லைட் மற்றும் முழு-எல்சிடி திரையை கொண்டுள்ளது. இதில் எல்சிடி திரையானது, வேகம், எரிபொருள் அளவு, என்ஜினின் வெப்பநிலை, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சராசரியாக எரிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் ஆயில் சேன்ஞ் இடைவெளி உள்ளிட்ட அடிப்படை தகவல்களை காட்டும்.

2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!

இதன் அலுமினிய சக்கரங்களில் டன்லப் டி102 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுஸுகியின் தாயக நாடான ஜப்பானில் இந்த 2021 பைக் மாடலின் விலை 3,82,800 ஜப்பானிய யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2.69 லட்சமாகும்.

எடை குறைவான ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளை பொறுத்தவரையில் 125சிசி பைக்கிற்கு இந்தியாவில் இந்த விலை சற்று அதிகமே. இதன் காரணமாகவே இத்தகைய ஜிஎஸ்எக்ஸ் பைக்குகளை சுஸுகி கொண்டுவருவது இல்லை.

Most Read Articles

English summary
2021 Suzuki GSX-S125 Launched In Two New Colours
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X