தரமான ஸ்டைலில் Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகி (Suzuki), அதன் புதிய ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவெனிஸ் (Avenis) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இப்புதிய மாடல் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

இந்திய இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்கச் செய்யும் வகையில் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் (Suzuki Motorcycle India), அதன் புதுமுக ஸ்கூட்டர் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவெனிஸ் (Avenis) எனும் பெயரிலேயே அப்புதிய இருசக்கர வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் (TVS NTorq) மற்றும் ஹோண்டா டியோ (Honda Dio) ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் களமிறக்கப்பட்டிருக்கின்றது. முற்றிலும் ஸ்போர்ட்டி தோற்றத்தில் அவெனிஸ் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

அறிமுகமாக ஸ்கூட்டருக்கு இந்திய மதிப்பில் ரூ. 86,700 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மதிப்பாகும். இதன் ஸ்போர்ட்டியான தோற்றம் மட்டுமில்லைங்க இதில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களும் போட்டி தாயரிப்புகளுக்கு கடுமையான எதிர்வினையை ஆற்ற இருக்கின்றது.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

ஆம், பன்முக சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இருசக்கர வாகனமாக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. குறிப்பாக, இதில் இடம் பெற்றிருக்கும் ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு வசதியான சுசுகி ஸ்மார்ட் கன்னெக்ட் தொழில்நுட்பம் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

இளம் தலைமுறையினரைக் கவரும் பொருட்டு இந்த அம்சம் அவெனிஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக செல்போனையும், இருசக்கர வாகனத்தையும் இரட்டை சகோதரர்கள் போல் இணைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு இணைத்துக் கொள்ளும்பட்சத்தில் இருசக்கர வாகனம் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை செல்போனின் திரையிலேயேக் கண்டறிந்துக் கொள்ள முடியும்.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

இதேபோல், செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் பற்றிய தகவலை ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் திரைகளில் கண்டறிந்துக் கொள்ள முடியும். சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டரில் 125 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜினை எஃப்ஐ எனப்படும் ப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

ஆகையால், எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான மாற்று மாசுபாட்டை வெளிப்படுத்தும் வாகனமாக அவெனிஸ் உள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.7 பிஎஸ் பவரை 6,750 ஆர்பிஎம்மிலும், 10 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எடை 106 கிலோவாகும்.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டரில் திருப்பத்திற்கு திருப்பம் வழி பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது சரியான பாதையை நோக்கி பயணிக்க உதவும். இத்துடன், இருசக்கர வாகனத்தை முழுவதுமாக எல்இடி மின் விளக்குளால் சுசுகி அலங்கரித்திருக்கின்றது. முன் பக்க ஹெட்லைட் தொடங்கி பின் பக்க (வால் பகுதி) மின் விளக்கு வரை எல்இடி மின் விளக்குகளாக காட்சியளிக்கின்றன.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

இவை அவெனிஸ் ஸ்கூட்டருக்கு மேலும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாமக ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் மெட்டாலிக் டிரிடன் நீல (Metallic Triton Blue) நிறம் ரேஸ் எடிசன் தயாரிப்பாக நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கும்.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

இந்த பதிப்பு வழக்கமான அவெனிஸ் மாடலைக் காட்டிலும் சற்றே ஸ்பெஷலான தயாரிப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. சிறப்பு கிராஃபிக்குகள், நிறங்களால் இது அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இது முழுக்க முழுக்க இளம் தலைமுறையினரைக் கவரும் நோக்கில் நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது.

அதிக ஸ்டைலிஸான Avenis ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்... Honda Dioவின் இடத்தை காலி செய்ய Suzuki அதிரடி!

சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டரின் தேர்வுகள் மற்றும் விலை விபரம்:

மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே / மெட்டாலிக் லஷ் கிரீன்: ரூ. 86,700

பேர்ல் பிளேஸ் ஆரஞ்சு / கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக்: ரூ. 86,700

மெட்டாலிக் மேட் பிளாக் / கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக்: ரூ. 86,700

பேர்ல் மிராஜ் ஒயிட் / மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே: ரூ. 86,700

மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ (ரேஸ் எடிஷன்): ரூ. 87,000

Most Read Articles

English summary
Suzuki launched avenis scooter in india at rs 86700
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X