மறுபடியுமா... சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் விலைகள் மீண்டும் உயர்ந்தன!! இனி அவற்றின் விலைகள் இவைதான்

சுஸுகி ஜிக்ஸெர் மற்றும் இண்ட்ரூடர் பைக்குகளின் விலைகள் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மறுபடியுமா... சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் விலைகள் மீண்டும் உயர்ந்தன!! இனி அவற்றின் விலைகள் இவைதான்

ஜிக்ஸெர் வரிசையில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிக்ஸெர், ஜிக்ஸெர் எஸ்எஃப், ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்குகளை தற்சமயம் விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்தின் விலைகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

மறுபடியுமா... சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் விலைகள் மீண்டும் உயர்ந்தன!! இனி அவற்றின் விலைகள் இவைதான்

இதில் முதலாவதாக உள்ள ஜிக்ஸெரின் விலை முன்பு ரூ.1,14,687 ஆக இருந்தது. ஆனால் தற்போது இது ரூ.2,013 அதிகரிக்கப்பட்டு ரூ.1,16,700ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கின் விலையில் ரூ.2,044 அதிகரிப்பை சுஸுகி நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

மறுபடியுமா... சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் விலைகள் மீண்டும் உயர்ந்தன!! இனி அவற்றின் விலைகள் இவைதான்

இதனால் முன்பு ரூ.1,25,156-ல் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பைக்கின் விலை இனி ரூ.1,27,200 ஆகும். ஜிக்ஸெர் 250சிசி பைக்கின் புதிய விலை ரூ.1,67,700ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதன் முந்தைய எக்ஸ்ஷோரூம் விலையை காட்டிலும் ரூ.2,073 அதிகமாகும்.

மறுபடியுமா... சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் விலைகள் மீண்டும் உயர்ந்தன!! இனி அவற்றின் விலைகள் இவைதான்

250சிசி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கின் விலை ரூ.1,76,326ல் இருந்து ரூ.1,78,400ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுஸுகி எஸ்எஃப் பைக் மோட்டோஜிபி வெர்சனிலும் கிடைக்கிறது. இதன் விலையையும் ரூ.2,073 அளவில் தயாரிப்பு நிறுவனம் உயர்த்தியுள்ளது.

மறுபடியுமா... சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் விலைகள் மீண்டும் உயர்ந்தன!! இனி அவற்றின் விலைகள் இவைதான்

ஏற்கனவே கூறியதுபோல் ஜிக்ஸெர் பைக்குகளுடன் இண்ட்ரூடர் பைக்கின் விலையும் ரூ.2,073 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பு ரூ.1,22,327 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த க்ரூஸர் பைக்கின் விலை இனி ரூ.1,24,400 ஆகும்.

மறுபடியுமா... சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் விலைகள் மீண்டும் உயர்ந்தன!! இனி அவற்றின் விலைகள் இவைதான்

இந்த சிறிய விலை அதிகரிப்பால் பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 பைக்கிற்கு இணையான விலையில் இண்ட்ரூடர் வந்துள்ளது. ஆனால் இந்த பஜாஜ் க்ரூஸர் பைக்கில் அதிகப்பட்சமாக 19.03 பிஎஸ் மற்றும் 17.55 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய பெரிய 220சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

மறுபடியுமா... சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் விலைகள் மீண்டும் உயர்ந்தன!! இனி அவற்றின் விலைகள் இவைதான்

ஆனால் சுஸுகி இண்ட்ரூடரில் 155சிசி என்ஜினே வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 13.6 பிஎஸ் மற்றும் 13.8 என்எம் டார்க் திறனையே பெற முடியும். தயாரிப்பு செலவு அதிகரிப்பதால் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Most Read Articles

English summary
Suzuki Motorcycle India hiked the prices of Gixxer 250 Models.
Story first published: Tuesday, February 2, 2021, 23:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X