ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

கடந்த 2021 ஜூன் மாதத்தில் இண்ட்ரூடெர் மோட்டார்சைக்கிளை காட்டிலும் சூப்பர் பைக்கான ஹயபுஸாவையே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஹயபுஸா மோட்டார்சைக்கிளை நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது.

ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

புதிய ஹயபுஸாவின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஹயபுஸா மாடலை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.2.65 லட்சம் அதிகமாகும். இருப்பினும் உலகளவில் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து புதிய தலைமுறை ஹயபுஸாவிற்கு இந்தியாவிலும் எதிர்பார்ப்பு பெருக ஆரம்பித்தது.

ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

இதனால் இந்த சுஸுகி சூப்பர் பைக்கின் முதல் தொகுப்பிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே விற்று தீர்க்கப்பட்டன. இரண்டாவது தொகுப்பு ஹயபுஸா பைக்கிற்கான முன்பதிவுகளை சமீபத்தில் தான் சுஸுகி நிறுவனம் துவங்கி இருந்தது.

ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் 35 ஹயபுஸா பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஹயபுஸாவை காட்டிலும் பல மடங்கு விலை குறைவான இந்த ஜப்பானிய நிறுவனத்தின் க்ரூஸர் பைக் மாடலான இண்ட்ரூடர் 150 வெறும் 20 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

சுஸுகி இண்ட்ரூடர் 150 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1,27,927 ஆக உள்ளது. விலை அதிகரிக்கப்பட்டதற்கு ஏற்ப புதிய தலைமுறை ஹயபுஸா பைக்கின் தோற்றம் முன்பை விட மிகவும் மெருக்கேற்றப்பட்டுள்ளது.

ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

இதுவே ரூ.16.40 லட்சத்தில் விலையை கொண்டிருந்தாலும் சுஸுகி ஹயபுஸா பைக்கை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். அதுமட்டுமின்றி சுஸுகி நிறுவனத்தின் அடையாளமாக விளங்கும் ஹயபுஸாவிற்கு எப்போதுமே இந்தியர்களிடம் இருந்து வரவேற்பு கிடைப்பது வழக்கமே.

ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

மேம்படுத்தப்பட்ட தோற்றம் மட்டுமில்லாமல், தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ற தொழிற்நுட்பங்களையும் புதிய ஹயபுஸா பெற்று வந்துள்ளது. இவற்றினால் இந்த சூப்பர் பைக் முன்பை காட்டிலும், மிகவும் பாதுகாப்பானதாகவும், இயக்குவதற்கு எளிமையான வாகனமாக மாறியுள்ளது.

ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

புதிய தலைமுறை ஹயபுஸாவின் வெளிப்பக்கத்தில் புதிய கிராஃபிக்ஸ் & டிசைன் உடன் கூர்மையான லைன்கள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன. புதிய வசதிகளாக, 6-அச்சு ஐஎம்யு, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ரைடு-பை-வயர் த்ரோட்டல், லாஞ்ச் கண்ட்ரோல், முழு-எல்இடி விளக்குகள், இயக்கத்தின்போது முன்பக்க வாகனம் தூக்கப்படுவதை தவிர்க்கும் ஆண்டி-லிஃப்ட் கண்ட்ரோல் மற்றும் டிஎஃப்டி திரை உள்ளிட்டவற்றை இந்த சுஸுகி பைக் பெற்றுள்ளது.

ஜூன் மாத விற்பனையில், சுஸுகி இண்ட்ரூடெரை முந்திய ஹயபுஸா சூப்பர் பைக்!!

புதிய சுஸுகி ஹயபுஸாவில் 1,340சிசி, இன்லைன் 4-சிலிண்டர் பிஎஸ்6 என்ஜின் வழங்கப்பட்டுகிறது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அப்டேட் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் அதி செயல்திறன்மிக்க ப்ரெம்போ ப்ரேக்குகள் உள்ளிட்டவையும் ஹயபுஸாவில் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Suzuki sold more Hayabusa motorcycle than affordable Intruder cruiser in June 2021.
Story first published: Wednesday, July 21, 2021, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X