சூப்பர் பைக் பிரியர்களின் கைகளை முறுக்கேற்றும் புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்... டீசர் வெளியீடு!

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் பல புதிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலின் வருகை குறித்து ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தும் விதத்தில் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் டீசர் வீடியோ வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு தசாப்தங்களை கடந்துள்ள நிலையிலும், உலக அளவில் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், இதன் போட்டியாளர்கள் அவ்வப்போது தலைமுறை மாற்றங்களுடன் வந்துவிட்ட நிலையில், சுஸுகி ஹயபுசா பைக் மட்டும் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் விற்பனையில் இருந்து வந்தது.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் டீசர் வீடியோ வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக கூடுதல் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் முக்கிய மாற்றங்களுடன் புதிய மாடலாக வ இருக்கிறது. இந்த புதிய மாடல் வரும் பிப்ரவரி 5ந் தேதி உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் டீசர் வீடியோ வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், இதன் வருகையை வாடிக்கையாளர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் சில முக்கிய விஷயங்கள் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

அதன்படி, புதிய சுஸுகி ஹயபுசா பைக்கில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இடதுபுறத்தில் டாக்கோமீட்டரும், வலதுபுறத்தில் ஸ்பீடோமீட்டரும் உள்ளது. இந்த இரண்டு டயல்களுக்கு மத்தியில் பல்வேறு தகவல்களை பெறுவதற்கான மின்னணு திரை இடம்பெற்றுள்ளது.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் டீசர் வீடியோ வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

புதிய சுஸுகி ஹயபுசா பைக்கில் எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன் சிஸ்டம், குயிக் ஷிஃப்டர் வசதி, ரைடிங் மோடுகள் ஆகியவை சேர்க்கப்பட உள்ளன. அதேபோன்று, இனர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் (IMU), கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெறுகிறது.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் டீசர் வீடியோ வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

இதுவரை விற்பனையில் இருந்த சுஸுகி ஹயபுசா பைக்கில் 1,340 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 299 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

Most Read Articles

English summary
Suzuki has released video teaser of new Hayabusa super bike and it will be unveiled on Feb 5.
Story first published: Friday, January 29, 2021, 14:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X