தயாரிப்பு பணியில் இந்தியாவின் அதிவேக எலக்ட்ரிக் சூப்பர்பைக்... ஸ்விட்ச் எஸ்2கே!! பைக் இப்படிதான் இருக்குமாம்!

இந்தியாவின் அதிவேக எலக்ட்ரிக் சூப்பர்பைக்கின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான ஸ்விட்ச் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தயாரிப்பு பணியில் இந்தியாவின் அதிவேக எலக்ட்ரிக் சூப்பர்பைக்

எஸ்2கே என்ற பெயரில் இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூப்பர்பைக் முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்த சூப்பர்பைக் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஸ்கெட்ச் படங்களும் அவ்வாறான தோற்றத்தைதான் வெளிக்காட்டுகின்றன. இந்த எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்படவுள்ள ஒவ்வொரு பாகமும் 21ஆம் நூற்றாண்ட்டின் தொழிற்நுட்ப மேம்பாடுகளில் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விட்ச் எனர்ஜி நிறுவனம் முன்னதாக அதன் பிரபலமான ஸ்விட்ச் எக்ஸ்இ மற்றும் ஸ்விட்ச் எக்ஸ்இ+ எலக்ட்ரிக் பை-சைக்கிள்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களை கடந்த 2020ஆம் ஆண்டின் மூன்றாம் கால்பகுதியில் விற்பனைக்கு கொண்டுவந்திருந்தது.

இவை இரண்டின் மூலமாக இந்திய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் கவனிக்கத்தக்க நிறுவனமாக உருவெடுத்துள்ள ஸ்விட்ச் எனர்ஜி-யிடம் தற்சமயம் இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட டீலர்களின் தொடு மையங்களும், சில பிரத்யேகமான டீலர்ஷிப் ஷோரூம்களும், விநியோகஸ்தரர்களும் உள்ளனர்.

தயாரிப்பு பணியில் இந்தியாவின் அதிவேக எலக்ட்ரிக் சூப்பர்பைக்

இவற்றின் மூலமாக தனது சிறந்த தயாரிப்புகளுடன் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் இந்திய சந்தையில் வலுவாக கால்பதிக்க புதிய எஸ்2கே சூப்பர் எலக்ட்ரிக் பைக் பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளது.

இதற்கிடையில், எஸ்2கே சூப்பர்பைக்கின் முன்மாதிரிக்கான ஆல்பா சோதனைகள் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய ஸ்விட்ச் சூப்பர்பைக் சிஸ்டம் சோதனை, ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் செயல்பாட்டு சோதனை உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக கடந்துள்ளது.

இதனால் ஸ்விட்ச் எனர்ஜி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுப்பிடிப்பு குழுவினர் இந்த பைக்கின் வடிவமைப்பு மற்றும் மேம்படுத்துதல் பணியை துவங்கவுள்ளனர். எஸ்2கே சூப்பர்பைக்கில் வலுவான எலக்ட்ரிக் ட்ரைவ் சிஸ்டத்தை வழங்க ஸ்விட்ச் குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

அதேநேரம் அதிவேக சூப்பர்பைக் என்பதால் பைக்கை காற்று இயக்கவியலுக்கு மிகவும் இணக்கமான தோற்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வடிவமைக்கும் என்பது உறுதி. இந்த வடிவமைப்பு மற்றும் மேம்படுத்துதல் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று ஸ்விட்ச் எனர்ஜியின் எஸ்2கே சூப்பர்பைக்கின் அறிமுகம், ஏற்கனவே கூறியதுபோல், இந்த வருட இறுதியில் இருக்கும்.

Most Read Articles

English summary
Svitch Energy developing India’s Fastest Electric SuperBike
Story first published: Tuesday, February 16, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X