ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

சென்னையை தலைநகரமாக கொண்ட நம்மில் ராயல் என்பீல்டு பைக்குகளை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். பலருக்கு ராயல் என்பீல்டு பைக் வாங்குவது தற்போதுவரையில் கனவாக கூட இருக்கலாம். மிகவும் பழமையான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் பிராண்டிற்கு அமெரிக்கா வரையில் ரசிகர்கள் உள்ளனர்.

ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

தற்போதைக்கு இந்த பிராண்டின் பிரதான விற்பனை மாடல்களாக 350சிசி பைக்குகளே உள்ளன. இதனால் தான் என்னவோ ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு போட்டியாக தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவரவே பெரும்பாலான மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் விரும்புகின்றனர்.

ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

இந்த வகையில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வரும் பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம். ராயல் என்பீல்டு பைக் வாங்குவது தான் எனது கனவு என்றாலும் பரவாயில்லை, இவற்றையும் ஒரு கண்ணோட்டம் பார்த்து கொள்ளுங்கள்.

ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

பெனெல்லி இம்பீரியல் 400

இத்தாலியன் மோட்டார்சைக்கிள் பிராண்டான பெனெல்லி இந்தியாவில் அதன் குறைந்த விலை கொண்ட பைக்காக இம்பீரியல் 400-ஐ விற்பனை செய்து வருகிறது. கிட்டத்தட்ட ராயல் என்பீல்டு பைக்கின் தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த ரெட்ரோ-ஸ்டைல் பைக்கின் பிஎஸ்6 வெர்சன் கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

இதில் பொருத்தப்படும் 374சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 19 பிஎச்பி மற்றும் 3,500 ஆர்பிஎம்-இல் 29 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

ஹோண்டா சிபி350, சிபி350 ஆர்எஸ்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியிலும், தற்போதைய கொரோனா சூழலுக்கு மத்தியிலும் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக, அதன் அறிமுகத்திற்கு முன்பே ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்திய பைக் தான் ஹைனெஸ் சிபி350 ஆகும்.

ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

அதன்பின் இதன் ஸ்க்ராம்ப்ளர்-எஸ்க்யூ வெர்சனாக சிபி350 ஆர்எஸ் இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டிற்கும் இடையே சிறிய தோற்ற மாறுபாடுகள் உள்ளன. இவை இரண்டிலும் 348.36சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

ஜாவா, ஜாவா 42

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் மீண்டும் உயிர் பெற்ற ஜாவா பிராண்டில் இருந்து ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 என்ற இரு பைக்குகள் விற்பனையில் உள்ளன. கிட்டத்தட்ட ராயல் என்பீல்டு பைக்குகளின் கம்பீரத்தை ஜாவா பைக்குகளும் கொடுக்கின்றன.

ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

ஹஸ்க்வர்னா 250

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தொழிற்சாலையில் உருவாக்கப்படும் ஹக்ஸ்வர்னா 250 பைக்குகளில் ஸ்வார்ட்பிளேன் 250 & விட்பிளேன் 250 என்ற இரு மாடல்கள் உள்ளன. இவற்றின் விலை ராயல் என்பீல்டு 350 பைக்குகளை காட்டிலும் சற்று அதிகம். ஆனால் கேடிஎம் 250சிசி பைக்குகளின் அளவிற்கு இல்லை.

ராயல் என்பீல்டு பைக் தான் வாங்க வேண்டும் என்றில்லை, அதற்கு போட்டி பைக்குகளும் விற்பனையில் உள்ளன...!

பஜாஜ் டோமினார்

ராயல் என்பீல்டு 350 பைக்குகளை போல தோற்றத்தை கொண்டில்லாவிடினும் அவற்றின் அதே மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதால் பஜாஜ் டோமினார் இந்த லிஸ்ட்டில் உள்ளது. 250சிசி மற்றும் பெரிய என்ஜினாக 400சிசி-யிலும் பஜாஜ் டோமினார் பைக் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
5 Bikes You Can Buy Instead Of A Royal Enfield In India
Story first published: Tuesday, May 25, 2021, 8:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X