இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவுமே தேவையில்லா இ-வாகனங்கள்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பதிவெண் தேவைப்படாத இ வாகனங்கள்குறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

எரிபொருளால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட வாகனங்களைப் போல மின்சாரத்தால் இயங்கும் புதுமுக வாகனங்களின் அறிமுகம் அண்மைக் காலங்களாக உயர்ந்துக் காணப்படுகின்றது. இதேபோல், நாட்டில் மின் வாகனங்களின் எண்ணிக்கையும் கடந்த காலத்தைக் காட்டிலும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

இந்த நிலை, மின் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்தியாவில் பன்முக வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் இருக்கின்றன. அந்தவகையில், பதிவெண் மற்றும் லைசென்ஸ் போன்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படா எலெக்ட்ரிக் வாகனங்களும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

என்ன சொல்றீங்க... ஆவணங்கள் தேவைப்படாத எலெக்ட்ரிக் வாகனமா... ஆமாங்க, ஆவணம் தேவைப்படாத மின் வாகனங்கள் பல இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விற்பனையில் இருக்கும் நான்கு முக்கியமான எலெக்ட்ரிக் வாகனங்களின் பட்டியலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

லோஹியா ஓமா ஸ்டார் எல்ஐ (Lohia Oma Star Li):

லோஹியா ஓமா ஸ்டார் எல்ஐ மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 51,750 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது இந்தியாவின் மலிவு மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இதில் 250 வாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

அதே நேரத்தில் இது ஓர் குறைந்த வேக மின்சார வாகனமும்கூட. மணிக்கு 25 கிமீட்டர் எனும் வேகத்தில் இயங்கக் கூடியது. இத்தகைய குறைந்த வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது இது என்பதனாலேயே லோஹியா ஓமா ஸ்டார் எல்ஐ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்க எந்த வொரு ஆவணமும் தேவைப்படாது என கூறப்படுகின்றது. ஆம், நம் நாட்டில் மணிக்கு 25கிமீட்டருக்கும் குறைவான வேகத்தில் இயங்கும் வாகனங்களை இயக்க லைசென்ஸ், ஆர்சி போன்ற எந்த ஆவணமும் தேவைப்படாது.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

ஆம்பியர் ரியோ எலைட் (Ampere Reo Elite):

ஆம்பியர் ரியோ எலைட் மின்சார வாகனம் இந்தியாவில் ரூ. 59,990 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 250 வாட் பிஎல்டிசி ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்ரது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ வேகம் ஆகும். ஆகையால், இதனை இயக்கவும் எந்தவொரு முக்கிய ஆவணும் தேவைப்படாது.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

ஆம்பியர் ரியோ எலைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லீட்-ஆசிட் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், இப்பேட்டரிகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை பயணிக்கும் ரேஞ்ஜ் வழங்கும்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

ஒகினவா லைட் (Okinawa Lite):

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று. இதன் விலை ரூ. 59,990 ஆகும். இந்த விலையிலேயே எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், யுஎஸ்பி ஸ்மார்ட்போன் சார்ஜிங் பாயிண்ட் போர்ட், ரிமோட் ஸ்டார்ட் மற்றும் லாக் உள்ளிட்ட பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

இதில், நிறுவனம் கழட்டி மாட்டக் கூடிய லித்தியன் அயன் பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது. ஆகையால், தேவைக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் பேட்டரியைக் கழட்டிச் சென்று சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா எல்எக்ஸ் (Hero Electric Optima LX (VRLA))

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைச் செய்து வரும் குறைந்த திறன் மின்சார ஸ்கூட்டர்களில் ஹீரோ ஆப்டிமா எல்எக்ஸ் மாடலும் ஒன்று. இது இந்தியாவில் ரூ. 51,440 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த 250வாட் திறன் கொன்ட டிசி மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

இது அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ எனும் வேகத்தில் மட்டுமே இயங்கும். இந்த ஸ்கூட்டரில் மின்சார திறனை சேமித்து வைக்கும் வகையில் 48வி, 28ஏஎச் லித்தியம்-அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் எல்எக்ஸ் (Hero Electric Falsh LX)

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் எல்எக்ஸ் மின்சார ஸ்கூட்டரே இந்தியாவின் குறைந்த விலைக் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி வசதிக் கொண்ட மின்சார ஸ்கூட்டராகும். இதில், 250 வாட் எலெக்ட்ரிக்மோட்டார், 48வோல்ட்-28Ah லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 25 கிமீ ஆகும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 65கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் எடுத்து செல்லலாம்! டிரைவிங் லைசென்ஸ், பதிவெண் எதுவே தேவையில்லா இ-வாகனங்கள்!

ஜாய் இ-பைக் மான்ஸ்டர் (Joy E-Bike Monster):

நம்முடைய இந்த பட்டியலில் அதிகம் விலைக் கொண்ட மின்சார இருசக்கர வாகனமாக ஜாய் இ-பைக் மான்ஸ்டர் இருக்கின்றது. இதன் விலை ரூ. 98,999 ஆகும். இது பேட்டரியால் இயங்கும் மிகவும் சிறிய உருவம் கொண்ட இ-பைக்காகும். இதில் 250கிலோவாட் திறன் கொண்ட ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், ஒற்றை சார்ஜில் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும். டிஜிட்டல் ஸ்கிரீன், டிஸ்க் பிரேக், பிரீமியம் லுக்கிங் அப்சைடு-டவுண் ஃபோர்க், மோனோஷாக் மற்றும் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
These e two wheelers you can ride without a license in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X