செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

பொதுவாகவே பயன்படுத்தப்பட்ட சூப்பர் பைக்கை வாங்குவது என்பது, டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து வெளியே வரும்போதே அதன் மதிப்பு பாதியாக குறைந்துவிடுகிறது. அதன்பின் அது எத்தனை காலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பொறுத்து மீதி பாதி மதிப்பு குறையும்.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

12 மாதங்கள் பயன்படுத்தப்பட்ட சூப்பர் பைக் என்றால் அதன் மதிப்பு மொத்த தொகையில் பாதியாக குறைந்துவிடும். இருப்பினும் பயன்படுத்தப்பட்ட சூப்பர்பைக்கை வாங்க தயாராகிறீர்கள் என்றால், நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

ஜப்பானிய பிராண்டில் இருந்து இத்தாலிய பிராண்ட் வரையில் சூப்பர் பைக்குகள் உள்ளன. அதேபோல் சூப்பர்ஸ்போர்ட், நாக்டு ரோட்ஸ்டர், அட்வென்ச்சர் என வெவ்வேறு விதமான ஸ்டைல்களில் சூப்பர் பைக்குகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இதனால் பயன்படுத்தப்பட்ட சூப்பர் பைக்கின் பக்கம் செல்கிறீர்கள் எனும்போது எந்த பைக் மாடலை தேர்வு செய்கிறீர்கள் என்பது முக்கியமாகும். ஏனெனில் பிராண்ட்கள் அனைத்தின் பைக்குகளும் ஒரே மாதிரியான காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் அவற்றின் தரம் வேறுப்படும்.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

ஏனென்றால் துவக்கத்திலேயே பிராண்ட்களை பொறுத்து பைக்குகள் வேறுப்படும்போது அவற்றை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ப்ளாட்ஃபாரமும் மாறுபடும். அதன்பின் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதற்கு பிறகு ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு மாதிரியான வாடிக்கையாளர்கள் சேவையினை வழங்குகின்றன.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

அதேபோல் அந்த சூப்பர்பைக்கிற்கென வழங்கப்படும் ஆக்ஸஸரீகளும் எல்லா பிராண்ட்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பயன்படுத்தப்பட்ட சூப்பர்பைக்கை வாங்கும்போது, அதில் என்னென்ன மாதிரியான ஆக்ஸஸரீகள் வாங்கப்பட்டதற்கு பிறகு பொருத்தப்பட்டுள்ளன என்பதை உரிமையாளரிடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியமாகும்.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

ஏனெனில் சில ஆக்ஸஸரீகள் தோற்றத்தை மெருக்கேற்றும் நோக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கலாம். அதுவே சில ஆக்ஸஸரீகளை உரிமையாளர் தனது ரைடிங் ஸ்டைலிற்காக பொருத்தியிருக்கலாம். உங்களது ரைடிங் ஸ்டைல் வேறு மாதிரி என்றால், அந்த ஆக்ஸஸரீ பைக்கில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

அதுமட்டுமில்லாமல் பைக்கின் பாகங்கள் முன்பு வைத்திருந்த உரிமையாளரின் பகுதியில் எளிதாக கிடைத்திருக்கலாம். ஆனால் உங்கள் பகுதியில் அதே பாகங்கள் கிடைக்காமல் போகலாம். எனவே முடிந்தவரை பயன்படுத்தப்பட்ட சூப்பர் பைக்குகளை அருகில் இருக்கும் உரிமையாளரிடம் இருந்து வாங்க பாருங்கள். ஏனெனில் பெரிய தொகை கை மாறுகிறது அல்லவா, ரிஸ்க் வேண்டாம்.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

மேலும் ஒவ்வொரு சூப்பர் பைக்கிற்கும் ஸ்பேர் பாகங்களின் விலைகள் ஒவ்வொரு விதமாக இருக்கும். விற்கப்படும் பயன்படுத்தப்பட்ட பைக் என்றாலே, சிறிய பிரச்சனை உள்ள பைக் என்று தான் அர்த்தம், அந்த பிரச்சனையை சரிசெய்ய பணம் இல்லாததினால், அல்லது சரி செய்ய முடியவில்லை என்றால் தான் பெரும்பாலான உரிமையாளர்கள் பைக்கை விற்க முன்வருவர்.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

எனவே தீர்க்க முடியாத அல்லது செலவு அதிகம் கொண்ட பிரச்சனையை கொண்ட சூப்பர்பைக்கை பெரும் தொகை கொடுத்து வாங்கி சிக்கலில் சிக்கி கொள்ளாதீர்கள். பொதுவாகவே செகண்ட் ஹேண்டில் பைக்கை வாங்கும்போது கூடவே பழக்கப்பட்ட மெக்கானிக்கையும் அழைத்து செல்வது நல்லது.

செகண்ட் ஹேண்டில் சூப்பர் பைக்கை வாங்குவது ரிஸ்க்கானதா? வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

அதிலும் சூப்பர் பைக்கை இரண்டாவது கையாக வாங்க போகிறீர்கள் என்றால் கட்டாயம் மெக்கானிக்கையோ அல்லது குறைந்தப்பட்சம் மோட்டார்சைக்கிளில் ஏற்படும் பழுதுகளை பற்றி தெரிந்தவரையோ கட்டாயம் அழைத்து செல்லுங்கள். நீங்கள் அத்தகைய துறையை சார்ந்தவர் தான் என்றால் பிரச்சனையே இல்லை, தனியாகவே செல்லலாம்.

Most Read Articles
English summary
Things to consider when buying a used superbike. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X