Just In
- 20 min ago
புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..
- 2 hrs ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 3 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Don't Miss!
- Finance
1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜிஎம் நிறுவனம்.. என்ன காரணம்..?!
- News
மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்தார் விவேக்... அவரது மறைவு பேரிழப்பு - பிரேமலதா
- Lifestyle
ஓட்ஸ் சாப்பிடும்போது நாம் செய்யும் இந்த தவறுகள் நமக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்காம்...!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Movies
விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...தமிழக அரசு உத்தரவு
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை இப்படியும் மாற்றி கொள்ளலாம்!! ஆனா விலைதான் தலைசுற்ற வைக்குது!
ஜெய்கர் என்ற பெயரில் ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக் ஒன்று ஹாலிவுட் பட பைக்குகளை போன்றதான தோற்றத்தை பெற்றுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் பைக்கை பற்றிய கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு பைக்குகள் பொதுவாகவே மாடிஃபிகேஷன் பணிகளுக்கு உட்படுத்துவதற்கு மிகவும் ஏற்றவை என்ற கருத்து பரவலாக உள்ளது. இதன் காரணமாகவே கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அதுமட்டுமில்லாமல் கஸ்டம் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளை உருவாக்க சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனமும் வியட்நாமை சேர்ந்த பண்டிட்9 என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
இந்த கூட்டணியில் உருவாகியுள்ள மாடிஃபை காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை தான் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் யுடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள மேலே உள்ள வீடியோவில் பார்க்கிறீர்கள்.

ஹாலிவுட் ஸ்டார் வார்ஸ் படங்களில் காட்டப்படும் பைக்குகளை போன்று இருக்கும் இந்த கஸ்டம் காண்டினெண்டல் ஜிடி650 பைக்கிற்கு ‘ஜெய்கர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் வேகத்தை பற்றி நான் கூற வேண்டிய அவசியமே இல்லை, மேல் உள்ள வீடியோவை பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

முழுவதும் இரும்பினால் தயாரிக்கப்பட்டது போன்றதான தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த கஸ்டம் பைக் பழைய கேஃப் ரேஸர் பைக்குகளை நமக்கு நினைவூட்டுகிறது. இதன் பெட்ரோல் டேங்க் 13 லிட்டர் கொள்ளளவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹெட்லேம்ப் அமைப்பு இரு எல்இடி விளக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் வெயிலின் சூட்டை தாங்கும் திறன் கொண்டதாக இருக்கையின் மீது வழங்கப்பட்டுள்ள மெல்லிய தோல் உள்ளிட்டவை அனைத்தும் ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளன.

மற்றப்படி பைக்கின் கீழ் பகுதியில் ட்யுப்லர் இரட்டை தொட்டில் சேசிஸ் உள்ளிட்டவற்றில் எந்த மாடிஃபை மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இந்த கஸ்டம் தொடுதல்களுடன் சில சந்தைக்கு பிறகான பாகங்களையும் இந்த கஸ்டம் காண்டினெண்டல் ஜிடி650 பைக்கில் பண்டிட்9 நிறுவனம் பொருத்தியுள்ளது.

இந்த புதிய பாகங்களில் ஸ்பீடோமீட்டர், ஹேண்டில்பார், முன்பக்க & பின்பக்க டர்ன் இண்டிகேட்டர்கள், முன்பக்க ஃபெண்டர், இரும்பு க்ரிப்கள், ஸ்விட்ச்கள் & லிவர்கள், இரும்பினாலான மூடி உடன் சிறிய அளவில் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், எரிபொருள் மூடி மற்றும் எல்இடி ப்ரேக் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இவற்றுடன் சைலன்சர் பகுதியிலும் கஸ்டம் ஸ்விங்கர்ஸ் நீட்டிப்பையும் இந்த பைக் பெற்றுள்ளது. இந்த ஜெய்கர் பைக்கில் 658சிசி இணையான-இரட்டை காற்று-குளிர்விப்பான் 4-ஸ்ட்ரோக் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை அடிப்படையாக கொண்ட இந்த ஜெய்கர் பைக்கின் மொத்த எடை 198 கிலோ ஆகும். இந்த பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 165கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றும், வாடிக்கையாளர்கள் தங்களது காண்டினெண்டல் பைக்கை ஜெய்கர் போன்று மாற்றி கொள்ளலாம் என்று ராயல் என்பீல்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது ஆர்டர் செய்தும் பண்டிட்9 ஜெய்கர் பைக்கை வாங்கலாம். இதன் விலை சுமார் ரூ.20.55 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் ராசியுள்ள சில நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏனெனில் இந்த கஸ்டம் ராயல் என்பீல்டு பைக் வெறும் 9 யூனிட்கள் மட்டும் தான் ஸ்டாக்கில் உள்ளன.