முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பச்சை நிற இ-மிதிவண்டி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

பிரபல TI Cycles நிறுவனம் தனது புதுமுக இ-சைக்கிள் ஒன்றை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்ககியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சைக்கிள் குறித்த முக்கிய விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பச்சை நிற இ-மிதிவண்டி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

உலகம் முழுவதும் மின் வாகன பயன்பாடு ஊக்குவிப்பு மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், வரி சலுகை மற்றும் மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் மின் வாகனங்களை வாங்குவோருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவிலும் இந்த மாதிரியான நடவடிக்கைகள் பஞ்சமின்றி காணப்படுகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பச்சை நிற இ-மிதிவண்டி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

இந்த மாதிரியான சூழ்நிலையில் தமிழக மக்களை தங்களின் புதுமுக தயாரிப்பின் பக்கம் கவரும் விதமாக பிரபல TI Cycles நிறுவனம் அதன் புதுமுக இ-சைக்கிளான Montra-வை தமிழக முதலைச்சர் முக ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பச்சை நிற இ-மிதிவண்டி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

இந்த சைக்கிள் ஓர் உயர் நிலை மற்றும் அதிக பெர்ஃபார்மன்ஸ் வசதிக் எலெக்ட்ரிக் சைக்கிளாகும். நகரம் மற்றும் குறுகிய இடைவெளி பயணங்களை கருத்தில் கொண்டு இவ்வாகனத்தை TI Cycles வடிவமைத்திருக்கின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சைக்கிளையே TI Cycles நிறுவனம் தமிழக முதலமைச்சரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பச்சை நிற இ-மிதிவண்டி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

TI Cycles Montra-வின் சிறப்பு வசதிகள்:

TI Cycles Montra இ-சைக்கிளின் விலை ரூ. 27,279 ஆகும். இதனை அலாய் ஃப்ரேமைக் கொண்டு நிறுவனம் கட்டமைத்திருக்கின்றது. இத்துடன், இரு விதமான இயக்க நிலைகளை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. மேனுவல் மற்ரும் எலெக்ட்ரிக் எனும் இருவித இயக்க நிலைகளே எலெக்ட்ரிக் சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கின்றன.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பச்சை நிற இ-மிதிவண்டி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

இது சிறந்த இயக்க அனுபவத்தை பெற உதவும். இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் வசதியை வழங்குவதற்காக எலெக்ட்ரிக் பிரேக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிக சிறந்த மற்றும் மிகவும் ஸ்மூத்தான பிரேக்கிங் வசதியை வழங்க உதவும். அதேசமயம், தற்போதைய நவீன கால இருசக்கர வாகனங்களில் இடம் பெற்றிருப்பதைப் போல உடனடி பிரேக்கையும் இந்த எலெக்ட்ரானிக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கும்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பச்சை நிற இ-மிதிவண்டி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

TI Cycles Montra இ-சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ வேகம் ஆகும். இந்த இ-சைக்கிளில் ஒரு கிமீ பயணிக்க 7 பைசா மட்டுமே செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பச்சை நிற இ-மிதிவண்டி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

மேலும், எரிபொருளால் இயங்கும் இருசக்கர வாகனங்களைப் போல் இல்லாமல் இவை சுற்றுச் சூழலுக்கு நண்பனாகவும் செயல்படும். இதுபோன்ற வசதிகளை மின் வாகனங்கள் கொண்டிருக்கின்ற காரணத்தினால் அவற்றின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சியில் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பச்சை நிற இ-மிதிவண்டி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?..

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நம்ம தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அன்பளிப்பாக TI Cycles நிறுவனம் Montra இ-மிதிவண்டியை அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றது. முதலமைச்சர் முக ஸ்டாலின் உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் மீது அதீத ஆர்வம் கொண்டவர் ஆவார். கடந்த காலங்களில் இவர் சைக்கிளிங் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.

Source: Stalin Jacob

Most Read Articles

English summary
Ti cycles gifted montra e cycle to tamil nadu cm mk stalin
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X