600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 600சிசி+ மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

கொரோனா வைரஸ் பரவலினால் மற்ற துறைகள் அடைந்த சரிவை போன்று ஆட்டோமொபைல் துறையும் உலகளவில் வீழ்ச்சியை கண்டது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக இந்த நிலையில் இருந்து வேகமான தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டு வருகின்றன.

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது. குறிப்பாக பைக் & ஸ்கூட்டர்களின் விற்பனை கிட்டத்தட்ட பழைய ஃபார்மிற்கு வந்துவிட்டது என்று கூட சொல்லாம்.

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

இருப்பினும் பெரிய தோற்றம் கொண்ட செயல்திறன்மிக்க ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களால் முன்பை போல் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதை தான் கடந்த 2021 பிப்ரவரி மாத 600சிசி+ மோட்டார்சைக்கிள்களின் விற்பனையும் காட்டுகின்றது.

Rank Motorcycle Feb-21 Feb-20 Growth (%)
1 Royal Enfield 650 Twins 284 2,080 -86.35
2 Kawasaki Z900 61 71 -14.08
3 Kawasaki Ninja 650 48 18 166.67
4 Triumph Tiger 900 39 0 -
5 Kawasaki Ninja 1000SX 32 35 -8.57
6 Honda Africa Twin 17 2 750.00
7 Kawasaki Versys 650 16 0 -
8 Kawasaki Z650 16 20 -20.00
9 Kawasaki Vulcan S 3 12 8.33
10 Harley-Davidson Low Rider S 7 0 -

Source: Rushlane

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

கொரோனாவினால் பலரது பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இது கூட இவ்வாறான விலைமிக்க பைக்குகளின் விற்பனை குறைவிற்கு காரணமாக இருக்கலாம். 600சிசி-க்கு அதிகமாக ஒரு பைக் வாங்க நினைத்தாலே வாடிக்கையாளர்கள் பலரது கவனம் ராயல் என்பீல்டு பக்கம் தான் செல்லும்.

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

சென்னையை சேர்ந்த இந்த மோட்டார்சைக்கிள் பிராண்டின் 650சிசி இரட்டை பைக்குகள் (இண்டர்செப்டர் 650, காண்டினெண்டல் ஜிடி650) கடந்த மாதத்தில் வெறும் 284 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, கடந்த 2020 பிப்ரவரியில் சுமார் 2,080 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

இந்த வகையில் 650 ட்வின்ஸின் விற்பனையில் சுமார் 86.35 சதவீத வீழ்ச்சியை ராயல் என்பீல்டு நிறுவனம் கண்டுள்ளது. இருப்பினும், சமீபத்தில் புதிய நிறத்தேர்வுகளுடன் 2021 இண்டர்செப்டர் 650 & 2021 காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் இந்த நிலை வரும் மாதங்களில் மாறும் என்று எதிர்பார்க்கிறோம்.

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் கவாஸாகி இசட்900 பைக் உள்ளது. 2020 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஆனால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள கவாஸாகி நிஞ்சா 650 பைக்கின் விற்பனை 166.67% உயர்ந்துள்ளது.

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

கடந்த பிப்ரவரியில் 18 நிஞ்சா 650 பைக்குகள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 48 மாதிரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரையம்ப் டைகர் 900 39 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் 1000சிசி பைக்காக விளங்கும் கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் 32 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டைகர் 900-ஐ போல் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனையை துவங்கிய புதிய ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகளை 17 வாடிக்கையாளர்கள் கடந்த பிப்ரவரியில் டெலிவிரி எடுத்துள்ளனர்.

600சிசி+ பைக்குகளில் அதிகம் விற்பனையாகுவது எது தெரியுமா? 2021 பிப்ரவரி மாத நிலவரம்...

கவாஸாகி இந்தியாவின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான வெர்ஸஸ் 650 16 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இந்த டாப்-10 லிஸ்ட்டில் பெரும்பான்மையாக இடங்களில் கவாஸாகியின் பைக்குகள் உள்ளதை பார்க்க முடிகிறது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top-10 600cc+ Motocycles In Feb 2021. Royal Enfield 650 Twins Top.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X