4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

கடந்த 2021 ஜனவரி மாதத்தில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்த பிராண்ட்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

இதுகுறித்த வெளியிடப்பட்டுள்ள லிஸ்ட்டின்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஜனவரியில் அதிக இருசக்கர வாகனங்களை நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது.

4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

இந்த நிறுவனத்தை தொடர்ந்து ஹோண்டா, டிவிஎஸ் நிறுவனங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனம் 4.67 லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

வழக்கம்போல் இந்த வரிசையில் மற்ற பிராண்ட்கள் அனைத்தையும் முந்தி முதலிடத்தை பிடித்து இருந்தாலும் 2020 ஜனவரி உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 4.2 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 4.88 லட்ச இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

ஆனால் இரண்டாவது இடத்தில் உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் 11.2 சதவீத விற்பனை முன்னேற்றத்துடன் 4.16 லட்ச யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த் நிறுவனத்தின் 2020 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை 3.74 லட்சமாகும்.

4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

ஓசூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.05 லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதுவே இந்த தமிழக இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் 2020 ஜனவரியில் 1.63 லட்ச தயாரிப்பு யூனிட்களையே விற்றிருந்தது.

4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

இதன் மூலம் இந்த நிறுவனம் 26 சதவீத வளர்ச்சியை விற்பனையில் கண்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1.57 லட்ச யூனிட் தயாரிப்புகளின் விற்பனை எண்ணிக்கை உடன் இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்தை காட்டிலும் இந்த எண்ணிக்கை சில நூறுகள் மட்டுமே குறைவாகும்.

4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

சென்னை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனையில் 5% வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த பழமை வாய்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்டின் கடந்த 2021 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை 64,372 ஆகும்.

Rank Two Wheeler OEM Jan'21 Jan'20 Growth (%)
1 Hero MotoCorp 4,67,753 4,88,069 -4.2
2 Honda 4,16,716 3,74,114 11.4
3 TVS 2,05,216 1,63,007 25.9
4 Bajaj Auto 1,57,404 1,57,796 -0.2
5 Royal Enfield 64,372 61,292 5.0
6 Suzuki 57,004 56,012 1.8
7 Yamaha 55,151 35,913 53.6
8 Piaggio 6,040 4,358 38.6
9 Kawasaki 161 151 6.6
10 Triumph 62 60 3.3
11 Mahindra Two Wheelers 26 23 13.0
12 Harley-Davidson 23 210 -89.0

Source: Autopunditz.com

4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் முறையே 1.8 சதவீத விற்பனை முன்னேற்றத்துடன் கடந்த மாதத்தில் 57,004 யூனிட் இருசக்கர வாகனங்களையும், யமஹா நிறுவனம் 2020 ஜனவரியை காட்டிலும் சுமார் 53 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் 55,151 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன.

4.6 லட்ச வாகனங்களை ஜனவரியில் விற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப்!! டாப் பிராண்ட்கள் இவைதான்!

பியாஜியோ க்ரூப் 6,040 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இவற்றிற்கு கீழே நிறுவனங்கள் 200க்கும் குறைவான இருசக்கர வாகனங்களையே கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளன. அதிகப்பட்சமாக கவாஸாகி நிறுவனம் 161 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, February 15, 2021, 21:09 [IST]
English summary
Top Selling Two-Wheeler Brands India January
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+