150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

கடந்த 2021 ஜூலை மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட 150சிசி- 200சிசி மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

இந்திய சந்தையில் 150சிசி- 200சிசி மோட்டார்சைக்கிள் பிரிவு கடந்த சில வருடங்களாக வேகமாக வளர்ச்சிக்கண்டு வரும் ஒன்றாக உள்ளது. இந்த பிரிவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,18,581 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

இந்த மாதத்தில் சில 150சிசி- 200சிசி மோட்டார்சைக்கிள்களின் விற்பனை முன்னேறி உள்ளது என்றாலும், 2020 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 8.48 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 1,18,581 மோட்டார்சைக்கிள்கள் இந்த பிரிவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

150சிசி- 200சிசி பிரிவு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை எடுத்து பார்த்தோமேயானால், இதில் எப்போதுமே டிவிஎஸ் அப்பாச்சிக்கும், பஜாஜ் பல்சருக்கும் இடையே தான் போட்டி இருக்கும். அது கடந்த 2021 ஜூலை மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் டிவிஎஸ் அப்பாச்சி பிராண்டின்கீழ் மொத்தம் 27,288 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

இந்த எண்ணிக்கை 2020 ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட அப்பாச்சி பைக்குகளை காட்டிலும் 18.94% குறைவு தான் என்றாலும், இந்த லிஸ்ட்டில் இந்த டிவிஎஸ் சப்-பிராண்ட் தான் முதலிடத்தில் உள்ளது. டிவிஎஸ் மோட்டாருக்கு அப்பாச்சி எப்படியோ அதேபோல தான் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு பல்சர் ஆகும்.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

கடந்த ஆண்டு ஜூலையில் கிட்டத்தட்ட 39 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த பஜாஜ் பல்சர் பைக்குகள் கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 30.50% குறைவாக 26,943 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் 150சிசி- 200சிசி யில் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களில் முதல் இரு இடங்களில் உள்ள இவை இரண்டு மட்டுமே கிட்டத்தட்ட 46%-ஐ ஆக்கிரமித்துள்ளன.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் ஹோண்டா யூனிகார்ன் 160 மாடல் 21,735 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கை 2020 ஜூலையை காட்டிலும் 7.53 சதவீதம் உயர்ந்துள்ளது. யூனிகார்ன் 160 பைக் மட்டுமின்றி இதற்கு அடுத்துள்ள யமஹா எஃப்.இசட் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையும் 20.06 சதவீதம் அதிகரித்துள்ளது.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

கடந்த 2021 ஜூலை மாதத்தில் மொத்தம் 18,066 எஃப்.இசட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள மோட்டார்சைக்கிள்கள் எஃப்.இசட் மாடலை காட்டிலும் மிக பெரிய வித்தியாசத்துடன் உள்ளன. ஐந்தாவது இடத்தில் உள்ள யமஹா ஆர்15-க்கும் இதே நிறுவனத்தின் எஃப்.இசட் மோட்டார்சைக்கிளிற்கும் இடையே கிட்டத்தட்ட 11 ஆயிர யூனிட்கள் வித்தியாசம் உள்ளது.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

இந்தியாவின் மலிவான ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளாக, இளைஞர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் ஆர்15 மோட்டார்சைக்கிள் கடந்த ஜூலையில் 7,280 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆறாவது இடத்திலும் மற்றொரு யமஹா மோட்டார்சைக்கிளாக எம்டி-15 5,316 யூனிட்களின் விற்பனையுடன் உள்ளது.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

இந்த மூன்று யமஹா பைக்குகளின் விற்பனை கடந்த ஆண்டு ஜூலை உடன் ஒப்பிடுகையில் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல் 7வது இடத்தில் உள்ள சுஸுகி ஜிக்ஸெர் மாடலின் (2,937 யூனிட்கள்) விற்பனையும் 35.85% அதிகரித்துள்ளது. 8வது இடத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தான் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2,302 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

9வது இடத்தை கேடிஎம் 200 பெற்றுள்ளது. இந்த லிஸ்ட்டிலேயே மற்ற 150சிசி- 200சிசி மோட்டார்சைக்கிள்களை காட்டிலும், 2020 ஜூலை மாதத்தை விட கடந்த ஜூலையில் அதிக விற்பனையை பதிவு செய்தது கேடிஎம் 200 ஆகும். கடந்த ஜூலையில் 2,019 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள கேடிஎம் 200 (200 ட்யூக், 200 ஆர்சி) 2020 ஜூலையில் வெறும் 937 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

150சிசி- 200சிசி-யில் பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? தற்போதைக்கு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான்

10வது மற்றும் 11வது இடங்களில் முறையே இந்தியாவின் தற்போதைய விலை குறைவாக க்ரூஸர் மோட்டார்சைக்கிளான சுஸுகி அவெஞ்சர் மாடலும், மலிவான அட்வென்ச்சர் பைக்கான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200-உம் உள்ளன. இவை இரண்டின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,866 மற்றும் 1,402 ஆகும்.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Motorcycle 150cc To 200cc Jul 2021, Segment Was Headed By TVS Apache.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X