டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்துதான் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக துவங்கியது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட ஜூன் மாதம் வரையில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் விற்பனை மிகவும் குறைவாகவே இருந்தது.

டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

தற்போது மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுக்க ஆரம்பித்தாலும், கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவுகள் தற்போது போல் கடுமையாக இல்லை.

டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

இதனால் 2020 மார்ச் மாதத்தை காட்டிலும் கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 66.62 சதவீதம் அதிகமாக மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 8,48,488 ஆகும்.

டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

ஆனால் 2020 மார்ச்சில் 5,09,240 யூனிட் மோட்டார்சைக்கிள்களே நம் நாட்டு சந்தையில் விற்கப்பட்டு இருந்தன. இந்தியாவில் எப்போதும் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளாக ஹீரோ ஸ்பிளெண்டர் விளங்குகிறது.

டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

கடந்த மாதத்தில் மட்டும் 2.8 லட்சத்திற்கும் அதிகமான ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மார்ச்சில் 1.5 லட்ச ஸ்பிளெண்டர் பைக்குகள் கூட விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

இந்த வகையில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனையில் சுமார் 98 சதவீத வளர்ச்சியை ஹீரோ நிறுவனம் கண்டுள்ளது. ஒட்டு மொத்த மோட்டார்சைக்கிள் விற்பனையில் ஹீரோ ஸ்பிளெண்டர் 33 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.

Rank Motorcycles Mar-21 Mar-20 Growth (%)
1 Hero Splendor 2,80,090 1,43,736 94.86
2 Hero HF Deluxe 1,44,505 1,14,969 25.69
3 Honda CB Shine 1,17,943 86,633 36.14
4 Bajaj Pulsar 85,999 51,454 67.14
5 Bajaj Platina 69,025 21,264 224.61
6 TVS Apache 33,162 21,764 52.37
7 Hero Glamour 33,371 12,713 154.63
8 RE Classic 350 31,694 24,304 30.41
9 Hero Passion 30,464 17,937 69.84
10 Honda Unicorn 23,235 14,466 60.62
டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

ஸ்பிளெண்டருக்கு அடுத்து இரண்டாவது இடத்திலும் ஹீரோ பைக் மாடலாக எச்.எஃப் டீலக்ஸ் உள்ளது. எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் கடந்த மாதத்தில் 1,44,505 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 மார்ச் உடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 25.69 சதவீதம் அதிகமாகும்.

டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

மூன்றாவது இடத்தை ஹோண்டா சிபி ஷைன் பிடித்துள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கை 1,17,943 யூனிட்களாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச்சில் இதன் விற்பனை 1 லட்சத்தை கூட தொடவில்லை. நான்காவது இடத்தில் உள்ள பல்சர் பைக்குகள் மொத்தமாக 85,999 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

இவை எல்லாவற்றையும் விட பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை 2020 மார்ச் ஒப்பிடுகையில் சுமார் 224.61 சதவீதம் உயர்ந்துள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் 33 ஆயிரம் யூனிட்களுக்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளன.

டாப் கியரில் மோட்டார்சைக்கிள் விற்பனை!! பஜாஜ் பிளாட்டினாவிற்கு திடீரென குவியும் வரவேற்பு!

பிளாட்டினாவை போன்று ஹீரோ கிளாமரின் விற்பனை 154.63% உயர்ந்துள்ளது. அதேபோல் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகளும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக விற்கப்பட்டுள்ளன. கிளாசிக் 350 விரைவில் புதிய தலைமுறை அப்கிரேடை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Motorcycles March 21 – Pulsar 4th, Apache 6th, Classic 350 8th.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X