கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

கடந்த 2021 நவம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

இந்திய இருசக்கர வாகன பிரிவு மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் சாய்ந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக, சந்தையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பங்கும் மாதந்தோறும் அதிகரித்து வருகின்றன. தற்போதைக்கு இந்திய சந்தையில் பஜாஜ் சேத்தக் & டிவிஎஸ் ஐக்யூப் என்பவை முன்னணி பிராண்ட்களில் இருந்து விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக உள்ளன.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

இவை இரண்டில் டிவிஎஸ் ஐக்யூப் கடந்த நவம்பர் மாத விற்பனையில் முன்னிலை வகித்துள்ளதாக சமீபத்தில் நமது செய்திதளத்தில் கூட அதனை பற்றி விரிவாக பார்த்திருந்தோம். பெட்ரோல் மூலமாக இயங்கக்கூடிய ஸ்கூட்டர்களின் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த நவம்பர் மாதத்தில் மொத்த 2,86,765 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

இந்த எண்ணிக்கை 2020 நவம்பரை காட்டிலும் சுமார் 37.32% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் சுமார் 4,57,519 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், கடந்த மாதத்திலும் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா தான் முதலிடத்தை தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1,24,082 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

ஆனால் கடந்த 2020 நவம்பரில் இதனை காட்டிலும் டபுள் மடங்காக 2,25,822 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை சுமார் 45.05% சரிந்துள்ளது. யூனிட்களாக சொல்ல வேண்டுமென்றால், சுமார் 1 லட்ச யூனிட்டிற்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

இருப்பினும் தற்போதைக்கு இந்தியாவில் மொத்தமாக விற்பனை செய்யப்படும் பெட்ரோல் ஸ்கூட்டர்களில் கிட்டத்தட்ட 43.27% பங்கை ஆக்டிவா மாடல் கொண்டுள்ளது. இதேபோல் இந்த வரிசையில் இரண்டாவது இடத்திலும் டிவிஎஸ் ஜூபிட்டர் தொடர்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக 44,139 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இதனை காட்டிலும் 29.52% அதிகமாக 62,626 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

அதாவது அந்த மாதத்தை காட்டிலும் ஏறக்குறைய 18 ஆயிரம் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது இடத்தில் சுஸுகியின் பிரபலமான ஸ்கூட்டரான ஆக்ஸஸ் உள்ளது. டிவிஎஸ் ஜூபிட்டருக்கு கிட்டத்தட்ட இணையாக சுஸுகி ஆக்ஸஸ் கடந்த மாதத்தில் 42,481 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. 2020 நவம்பரிலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான (45,582 யூனிட்கள்) ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களே விற்கப்பட்டு இருந்தன.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

மற்றொரு டிவிஎஸ் ஸ்கூட்டராக எண்டார்க் இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதில் ஆச்சிரியம் என்னவென்றால், வெறும் 19,157 யூனிட்களின் விற்பனை உடன் எண்டார்க் 4வது இடத்தை பெற்றுள்ளது. ஆனால் 2020 நவம்பரில் இதனை காட்டிலும் 33.91% அதிகமாக விற்பனை செய்யப்பட்ட போதிலும், இந்த டிவிஎஸ் ஸ்கூட்டர் ஐந்தாவது இடத்தையே பிடித்திருந்தது. இதற்கு காரணம், கடந்த மாத லிஸ்ட்டில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள ஹோண்டா டியோ அந்த மாதத்தில் 4வது இடத்தில் இருந்ததே.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை வீழ்ச்சியால் நீண்ட மாதங்களுக்கு பிறகு டாப்-5 சேல்ஸ் ஸ்கூட்டர்களில் யமஹாவின் ஸ்கூட்டர் நுழைந்துள்ளது. இம்முறை ஐந்தாவது இடத்தை யமஹாவின் ரே இசட்.ஆர், 12,344 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால் உண்மையில் ரே இசட்.ஆரின் இந்த கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2020 நவம்பரை காட்டிலும் 18.99% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் இந்த யமஹா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்திருந்தது.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

கடந்த ஆண்டு நவம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பரில் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை இந்த டாப்-10 லிஸ்ட்டில் இரு ஸ்கூட்டர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளன. இதில் ஒன்றான சுஸுகி பர்க்மேன் 23.90% வளர்ச்சியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடைந்துள்ளது. 2020 நவம்பரில் 9,708 பர்க்மேன் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 11,248 பர்க்மேன் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

இதற்கடுத்து 7வது இடத்தில் தான் ஹீரோ மோட்டோகார்பின் முதல் ஸ்கூட்டராக பிளஷர் 11,136 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 19,707 பிளஷர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 43.49% குறைவாகும். ஒரு சமயத்தில் இளம் தலைமுறையினரின் ஃபேவரட்டாக விளங்கிய ஹோண்டா டியோ கடந்த மாத விற்பனையில் 8வது இடத்திற்கு சரிந்துள்ளது.

கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட ஸ்கூட்டர் எது தெரியுமா? டாப்-10 ஸ்கூட்டர்ஸ்

கடந்த நவம்பரில் மொத்தம் 8,522 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு நவம்பரில் இதனை காட்டிலும் சுமார் 75.52% அதிகமாக 34,812 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதில் இருந்து டியோ ஸ்கூட்டர்கள் எந்த அளவிற்கு மவுசை இழந்து வருகின்றன என்பதை அறியலாம். இதற்கு கீழே, இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் யமஹா ஃபேஸினோ (8,208) மற்றும் ஹோண்டா கிரேஸியா (5,448) உள்ளன.

Most Read Articles

English summary
Top 10 scooters nov 2021 honda activa leads list
Story first published: Saturday, December 18, 2021, 7:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X