இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இரு சக்கர வாகனங்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இரு சக்கர வாகனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், Hero Splendor முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் Hero நிறுவனம் 2,13,413 Splendor பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 2,50794 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

இதன் மூலம் விற்பனையில் 17.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் Hero Splendor முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் Honda Activa இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020 ஜூலை மாதம் 1,18,859 Activa ஸ்கூட்டர்களை Honda நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

இந்த எண்ணிக்கை தற்போது 1,62,956 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 37.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் Honda Activa இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில், Honda CB Shine மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

கடந்த 2020 ஜூலையில் 88,969 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலையில் 1,16,128 ஆக உயர்ந்துள்ளது. இது 30.5 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பட்டியலில் Hero HF Deluxe நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020 ஜூலையில் 1,54,152 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலையில் 1,06,304 குறைந்துள்ளது. இது 31 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

இந்த பட்டியலில் Bajaj Pulsar ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020 ஜூலையில் 73,836 ஆக இருந்த Bajaj Pulsar பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலையில் 65,094 ஆக குறைந்துள்ளது. இது 11.8 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை அதே Bajaj நிறுவனத்தின் Platina பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

கடந்த 2020 ஜூலையில் 35,103 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலையில் 54,606 ஆக உயர்ந்துள்ளது. இது 55.5 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை TVS XL100 பிடித்துள்ளது. கடந்த 2020 ஜூலையில் 58,403 ஆக இருந்த இந்த TVS XL100-ன் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலையில் 49,279 ஆக குறைந்துள்ளது. இது 15.6 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை Suzuki Access பிடித்துள்ளது. கடந்த 2020 ஜூலையில் 23,171 ஆக இருந்த Suzuki Access ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலையில் 46,985 ஆக உயர்ந்துள்ளது. இது 102.7 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை TVS Jupiter பிடித்துள்ளது. கடந்த 2020 ஜூலையில் TVS நிறுவனம் 48,995 Jupiter ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலையில் 38,209 ஆக குறைந்துள்ளது. இது 22 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை Bajaj CT100 பிடித்துள்ளது. Bajaj நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 33,774 CT100 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலையில் 27,962 ஆக குறைந்துள்ளது. இது 17.2 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகளவில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இதில், Ola Electric ஸ்கூட்டர் ஒன்றாகும். S1 மற்றும் S1 PRO என மொத்தம் 2 வேரியண்ட்களில் Ola Electric நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். மாநில அரசுகள் தங்களது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் வழங்கும் மானியங்களே இதற்கு காரணம். Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதே தினத்தில் மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் விற்பனைக்கு வந்தது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனையான டூவீலர் எதுன்னு தெரியுமா? டாப்-10 பட்டியல் இங்கே!

அது Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். Ola மற்றும் Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு கொள்ளும். அத்துடன் Bajaj Chetak, TVS iQube மற்றும் Ather 450X உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Top 10 two wheelers in july 2021 hero splendor leads chart
Story first published: Thursday, August 19, 2021, 21:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X