இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்

கடந்த 2021 ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இருசக்கர வாகனங்களை பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்

கடந்த 2021 ஜூன் மாதத்தில் பெரும்பாலான பிரிவுகளில் வாகனங்களின் விற்பனை, கொரோனா இரண்டாவது அலையினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளுக்கு பிறகு நல்லப்படியாகவே இருந்துள்ளது.

இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்

எந்த அளவிற்கு என்றால், 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் பெரியளவில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், முந்தைய 2021 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 199 சதவீதம் இருசக்கர வாகன விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. மொத்தமாக கடந்த ஜூன் மாதத்தில் 6,92,716 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்

இதில் வழக்கம்போல் ஹீரோ மோட்டோகார்பின் ஸ்பிளெண்டர் பைக் மாடலே முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 2,64,009 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2020 ஜூன் மாதத்தில் வெறும் 1,81,190 ஸ்பிளெண்டர் பைக்குகளையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்

இந்திய சந்தையில் மட்டுமில்லாமல், வெளிநாட்டு சந்தைகளுக்காகவும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விலைகளை சமீபத்தில் தான் ஹீரோ நிறுவனம் ரூ.3,000 வரையில் அதிகரித்து இருந்தது. இந்த டாப்-10 வரிசையில் இரண்டாவது இடத்தில் ஹீரோவின் மற்றொரு அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளான எச்.எஃப் டீலக்ஸ் உள்ளது.

இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்
Rank Model Jun-21 Jun-20 Growth
1 Hero Splendor 2,64,009 1,81,190 45.71
2 Hero HF Deluxe 10,724 1,30,065 -91.75
3 Honda Activa 94,274 1,21,668 -22.52
4 Bajaj Pulsar 79,150 80,822 -2.07
5 Honda CB Shine 71,869 40,316 78.26
6 Bajaj Platina 43,313 35,277 22.78
7 TVS XL100 35,897 40,620 -11.63
8 TVS Jupiter 31,848 37,831 -15.82
9 Suzuki Access 31,399 15,540 102.05
10 TVS Apache 30,233 14,218 112.64

கடந்த மாதத்தில் மட்டும் 1,10,724 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இருப்பினும் இந்த விற்பனை எண்ணிக்கை இந்த மாடலின் 2020 ஜூன் மாத விற்பனை உடன் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 14.87% அதிகமாக 1,30,065 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்

இவற்றிற்கு அடுத்து இந்தியாவின் சிறந்த விற்பனை ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா 94,274 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1.21 லட்ச ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்

பஜாஜ் பல்சர் பைக்குகள் இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளன. மொத்தமாக 79,150 பல்சர் பைக்குகள் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான பல்சர் பைக்குகள் தான் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்

ஹோண்டா சிபி ஷைன் 71,869 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு 5வது இடத்தில் உள்ளது. இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள மோட்டார்சைக்கிள்களின் விற்பனை கடந்த மாதத்தில் 50 ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாகவே உள்ளன. ஆறாவது இடத்தில் உள்ள பஜாஜ் பிளாட்டினா பைக் 43,313 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகன விற்பனை மே மாதத்தை காட்டிலும் 200% அதிகரிப்பு!! ஹீரோ ஸ்பிளெண்டர் தொடர்ந்து முதலிடம்

7வது இடத்தில் கமர்ஷியல் இருசக்கர வாகனமான டிவிஎஸ் எக்ஸ்.எல் 35,897 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 8வது மற்றும் 9வது இடங்களில் டிவிஎஸ் ஜூபிட்டர் மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் மாடல்கள் முறையே 31,848 மற்றும் 31,399 என்ற விற்பனை எண்ணிக்கைகளுடன் உள்ளன. கடைசி பத்தாவது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Two Wheelers June 2021, Hero Splendor In No.1 Place.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X