கிளாசிக்350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக உள்ள டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் மற்றும் மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் டாப்10 இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

இந்திய இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் வகையில் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் விரைவில் அதன் புதுமுக தயாரிப்புகளை களமிறக்க இருக்கின்றன. இதில், இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் டாப் 10 டூ-வீலர்கள் குறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

அதாவது, மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இரு சக்கர வாகனங்கள் பற்றியும், அவற்றின் சிறப்புகள் குறித்த தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350

இந்திய இளைஞர்களின் மிகவும் பிரியமான இருசக்கர வாகனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் இருக்கின்றது. இந்த பைக்கை நவீன காலத்திற்கு ஏற்ப அப்கிரேட் செய்து வருகிறது ராயல் என்பீல்டு. ஏற்கனவே, இப்புதிய தலைமுறை பைக்கை நிறுவனம் சாலையில் வைத்து பரிசோதிக்க தொடங்கிவிட்டது.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

அவ்வாறு, அது பரிசோதனைக்கு உட்படுத்தும்போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போதும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கில் ட்ரிப்பர் நேவிகேஷன் போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

ஹீரோ கிளாமர் எக்ஸ்டிஇசி

ஹீரோ நிறுவனம் அதன் கிளாமர் பைக் வரிசையில் புதிய தேர்வை விற்பனைக்கு வழங்க திட்டமிட்டிருக்கின்றது. 'எக்ஸ்டிஇசி' எனும் பெயரில் உருவாகி வரும் இந்த புதிய வேரியண்ட் மிக விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த புதிய வேரியண்டில் எக்கசக்க பிரீமியம் வசதிகள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

முழு டிஜிட்டல் திறனிலான ஸ்பீடோ மீட்டர், புதிய நிற தேர்வுகள் ஆகியவற்றுடன் 'எக்ஸ்டிஇசி' எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்ஜினை பொருத்தவரை 124.7 சிசி ஏர் கூல்டு, சிங்கிள்-பாட் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது அதிகபட்சமாக 10.87 பிஎஸ் மற்றும் 10.6 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310

டிவிஎஸ் நிறுவனம் அதன் அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. உடை அலங்காரம், புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் பிரீமியம் வசதி ஆகியவற்றுடன் இந்த அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி390/ஆர்சி200/ஆர்சி125

கேடிஎம் நிறுவனம் அதன் ஆர்சி வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆர்சி390, ஆர்சி200, ஆர்சி125 மாடல்களை புதிய தலைமுறையாக அப்டேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதனை ஏற்கனவே நிறுவனம் இந்தியா மற்றும் உலக நாடுகள் சிலவற்றில் வைத்து பரிசோதிக்க தொடங்கிவிட்டது.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

தொடர்ந்து மிக விரைவில் விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட தொடங்கியிருக்கின்றது. புதிய டிசைன், புதிய பிரீமியம் வசதிகள், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என பல்வேறு புது அம்சங்களுடன் இவை தயாராகி வருகின்றன.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

பஜாஜ் பல்சர் என்எஸ் 250/250எஃப்

மிக சமீபத்திலேயே நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிள்களின் டீசர் படங்களை வெளியிட்டது. தொடர்ந்து, இருசக்கர வாகனங்களை பரிசோதிக்கும் பணியிலும் ஈடுபடுத்தி வருகின்றது. இரு பைக்குகளிலும் 250 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

பிஎஸ்6 ஹோண்டா சிபி300ஆர்

ஹோண்டா நிறுவனம் தனது பிக்விங் வரிசையின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களின் தேர்வை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில் பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்தப்பட்ட சிபி300ஆர் பைக்கையே இந்தியாவில் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாசு உமிழ்வு தர மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் நிறுவனம் இதில் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் மின்சார இருசக்கர வாகனமாக ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் வெளியீடு நிகழ்வு நாட்டில் அரங்கேற இருக்கின்றது. புதிய தொழில்நுட்பம், அதிக சிறப்பம்சங்கள் என அனைத்திலும் மிக சிறந்த எலெக்ட்ரிக் வாகனமாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாகி வருகின்றது.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

சிம்பிள் ஒன்

ஓலா மின்சார ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக இந்தியர்களின் எதிர்பார்ப்பை அதிகம் தூண்டி வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக சிம்பிள் ஒன் இருக்கின்றது. இது வரும் ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்சார ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த உச்சபட்ச ரேஞ்ஜ் திறனை சிம்பிள் ஒன் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ய காரணமாக அமைந்துள்ளது.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏத்தர் 450எக்ஸ், டிவிஎஸ் ஐ க்யூப், பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் அதிக பிரீமியம் வசதிகளுடன் சுசுகி பர்க்மேன் அடிப்படையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாராகி வருகின்றது. இந்த மின்சார வாகனமே மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்கனவே சாலையில் வைத்து பரிசோதனையில் ஈடுபடுத்தும் பணியில் சுசுகி களமிறங்கிவிட்டது. சூப்பர் திறன் மற்றும் அதிக சிறப்பு வசதிகளுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகின்றது.

கிளாசிக் 350 முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை! விரைவில் அறிமுகமாக இருக்கும் டாப் 10 புதுமுக இருசக்கர வாகனங்கள்!

யமஹா ஃபஸினோ 125 ஹைபிரிட், ரே இசட்ஆர் ஹைபிரிட்

யமஹா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர் மாடல்களான ஃபஸினோ 125 மற்றும் ரே இசட்ஆர் ஆகிய இரண்டையும் ஹைபிரிட் வெர்ஷனில் விரைவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. செல்போன் இணைப்பு தொழில்நுட்பம் உட்பட எக்கசக்கமான புதிய நவீன தொழில்நுட்ப வசதிகள் இவ்விரு ஹைபிரிட் ஸ்கூட்டர்களிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Top 10 Upcoming Bikes & Scooters In India: New Gen RE Classic 350 To Ola e-Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X