அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி... எதற்காக தெரியுமா?

KTM, Honda, Yamaha, Piaggio ஆகிய நான்கு நிறுவனங்கள் மெகா கூட்டணியை உலகளவில் தொடங்கியிருக்கின்றன. இந்த கூட்டணியின் வாயிலாக முதலில் ஐரோப்பிய நாடுகளே பலன் அடைய இருக்கின்றன. அப்படி எதற்காக நான்கு முன்னணி நிறுவனங்கள் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றன என்தற்கான கூடுதல் முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

நடப்பு 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் KTM (கேடிஎம்), Honda (ஹோண்டா), Yamaha (யமஹா), Piaggio (பியாஜியோ) ஆகிய நான்கு முன்னணி நிறுவனங்கள் கூட்டணி தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த கூட்டணியே தற்போது மீண்டும் முறைப்படுத்தப்பட்டு உண்மையான ஒப்பந்தமாகப் போடப்பட்டுள்ளது.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதிலேயே நான்கு நிறுவனங்களும் தற்போது கையொப்பம் போட்டிருக்கின்றன. நான்கு முன்னணி நிறுவனங்களின் மெகா கூட்டணி எதற்காக என உங்களுக்கு பெருத்த சந்தேகம் எழும்பியிருக்கலாம். இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்காக அண்மைக் காலங்களாக உயர்ந்து வரும் மின் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையே சான்று. இந்தியாவில் மட்டுமில்லிங்க உலக நாடுகள் பலவற்றிலும் இதே நிலைதான் நீடித்து வருகின்றது.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆனால், மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி முழுமையாக பன்பாட்டிற்கு வந்துவிட்டனவா என கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. ஆம், இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக பயன்பாட்டிற்கு வராத நிலையே தென்படுகின்றது.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த நிலையை கலையும் பணயிலேயே உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்களும் சிலவும் இப்பணியில் பணியாற்ற தொடங்கியிருக்கின்றது. அதாவது, சார்ஜிங் மையங்களை நிறுவுவதல் மற்றும் முழுமையாக சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அவை எடுத்து வருகின்றன.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த மாதிரியான ஓர் செயலுக்காகவே நான்கு நிறுவனங்களின் மெகா கூட்டணி தற்போது அமைந்துள்ளது. அதாவது, மின் வாகனங்களுக்கான பேட்டரியை வழங்கும் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை உலக நாடுகளில் உருவாக்கும் பொருட்டு இந்த கூட்டணி தொடங்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

முதலில் இந்நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தையில் தங்களின் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை (Swappable Batteries Motorcycle Consortium) பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றன. இதன் பின்னரே பிற உலக நாடுகளுக்கு இச்சேவை விரிவாக்கம் செய்யப்பட இருக்கின்றது. இதற்காக நான்கு நிறுவனங்களும் இணைந்து ஓர் குழுவை உருவாக்கியிருக்கின்றன.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்த குழுவே மக்கள் அதிகம் கூடும் இடம் மற்றும் மின் வாகனங்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் இடங்களைக் கண்டறிந்து ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை அமைக்க வழி வகுக்கும். எலெக்ட்ரிக் மொபட், ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் குவாட்ரி சைக்கிள் ரக வாகனங்கள் என அனைத்திற்குமான பேட்டரிகளும் இந்த ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் ஓர் முயற்சியாக இப்பணியில் நான்கு நிறுவனங்களும் களமிறங்கியிருக்கின்றன. தற்போது போதிய அளவில் சார்ஜிங் மையங்கங்கள் மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை வழங்கும் நிலையங்கள் பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் மக்கள் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த நிலையினாலேயே இந்தியாவிலும் மின் வாகன விற்பனை சற்று குறைவாக காணப்படுகின்றது. அதேசமயம், கடந்த காலங்களைக் காட்டிலும் இது அதிகரித்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதனை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் வகையிலேயே கேடிஎம், ஹோண்டா, யமஹா மற்றும் பியாஜியோ ஆகிய நிறுவனங்கள் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றன.

அரசியல் கூட்டணியையே மிஞ்சிட்டாங்க... KTM, Honda, Yamaha, Piaggio மெகா கூட்டணி! எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவனங்கள் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தங்களின் பிரீமியம் தர எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையிலும் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Top 4 two wheeler makers joins hand for swappable battery tech
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X