மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

மலிவு விலை தொடங்கி உயர் விலை வரை இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

இந்தியாவில் மின் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு கணிசமாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. பைக், ஸ்கூட்டர், ஆட்டோ மற்றும் கார் ஆகிய வாகனங்களைத் தொடர்ந்து தற்போது வர்த்தக ரீதியாக பயன்படக் கூடிய மினி லோடு வேன் ரகத்திலும் மின் வாகனங்கள் விற்பனைக்கு வர தொடங்கியிருக்கின்றன. இதேபோல், இந்திய சந்தையில் இ-மிதிவண்டிகளும் மிக அதிகளவில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களுக்கு பெரும் உதவியளிக்கும் வாகனமாக இவை மாறியிருக்கின்றன என்றுகூட கூறலாம். மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு இணையாக நல்ல வரவேற்பை இ-மிதிவண்டிகள் பெற்று வருகின்றன. அந்தவகையில், இந்தியாவின் மிக சிறந்த இ-சைக்கிள்கள் என்று கருதக் கூடிய டாப் 5 மின்சார மிதிவண்டுகள் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

ஹீரோ லெக்ட்ரோ இஸெபிர் டிஎக்ஸ் 700சி எஸ்எஸ் (Lectro Ezephyr TX 700C SS)

விலை : ரூ. 21,000

பிரிபல மிதிவண்டி உற்பத்தி நிறுவனமான ஹீரோ, லெக்ட்ரோ வரிசையில் பல விதமான இ-மிதிவண்டி தேர்வுகளை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் முக்கியமான மற்றும் விலைக் குறைவான இ-சைக்கிளில் ஒன்றே இஸெபிர் டிஎக்ஸ் 700சி எஸ்எஸ் மாடல் ஆகும். இந்த சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக இது விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

அதேவேலையில் மிக சிறந்த தேர்வாகவும் இது காட்சியளிக்கின்றது. ஆகையால், மலிவு விலையில் ஓர் மிதி வண்டியை நீங்கள் தேடிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் இஸெபிர் டிஎக்ஸ் 700சி எஸ்எஸ் உங்களுக்கு மிக சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இ-சைக்கிளில் 250வாட், 36வோல்ட் ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 40 என்எம் திறனை வெளியேற்றும் திறன் கொண்டது.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

இதில், 5.8ஏஎச் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 25 முதல் 45 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இதில், பன்முக ரைடிங் மோட்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

நியூஸே ஐ1 (Nuze i1)

விலை: ரூ. 30,616

நம்முடைய பட்டியலில் மிக சிறந்த மற்றும் இன்னுமொரு விலைக் குறைந்த இ-சைக்கிளாக நியூஸே ஐ1 இருக்கின்றது. இது, அனைத்து விதமான பயன்பாட்டாளர்களுக்குமான உகந்த இ-மிதிவண்டியாக இருக்கின்றது. நியூஸோ ஐ1 இ-சைக்கிளில் 5.2ஏஎச் லித்தியம்-அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 25 கிமீ முதல் 30 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். இரு வீல்களில் டிஸ்க் பிரேக்குகள், சஸ்பென்ஷன் இலகு எடைக் கொண்ட ஃப்ரேம் உள்ளிட்டவை நியூஸே ஐ1 இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

டூட்சே எலெக்ட்ரிக் ஹெய்லியோ எம்100 (Toutche Electric Heileo M100)

விலை: ரூ. 49,900

சற்று அதிகமான விலைக் கொண்ட இ-மிதிவண்டியாக ஹெய்லியோ எம்100 மாடல் இருக்கின்றது. அதேவேலையில், நாம் செலவிடும் தொகைக்கு ஏற்ற தரமான வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் சைக்கிளாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த இ-சைக்கிளில் 10.4Ah, 36V லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியை தனியாக கழட்டி மாட்டிக் கொள்ளலாம்.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

ஆகையால், தேவைக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் வைத்து இதனை சார்ஜ் செய்து கொள்ளலாம். இப்பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்து, பெடல் அசிஸ்ட் வசதி உடன் இயக்கினால் சுமார் 60 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். ஆனால், த்ரோட்டில் மோடில் 50 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும். இதன் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் தேவைப்படுகின்றது.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

நேரடியாக பின் வீலுக்கு இயக்க திறனை வழங்கும் வகையில் 250வாட் திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. தொடர்ந்து, எலெக்ட்ரிக் அசிஸ்ட் (மின்திறனை சேமிக்க உதவும்), ஷிமனோ டூர்னி டிஒய்21-6 ஸ்பீடு டீரெய்லியர், ஃபோர்க், டிஸ்க் பிரேக் மற்றும் குறைந்த எடைக் கொண்ட அலாய் ஃப்ரேம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

இமோட்டாராட் இஎம்எக்ஸ் (EMotorad EMX)

விலை: ரூ. 54,999

இமோட்டாராட் நிறுவனத்தின் புகழ்மிக்க மின்சார மிதிவண்டியாக இஎம்எக்ஸ் மாடல் இருக்கின்றது. முன் மற்றும் பின் பக்கத்தில் சஸ்பென்ஷன் வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் இ-மிதிவண்டி இதுவே ஆகும். இதுபோன்ற எக்க சிறப்பம்சங்களை இது கொண்டிருக்கின்றது. எனவேதான் இதன் விலை சற்று அதிகமானதாக காட்சியளிக்கின்றது.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

இஎம்எக்ஸ் இ-சைக்கிளில் 10.4ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 65கிமீ தூரம் பயணிக்கும். மேலும், இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

ஷிமனோ டூர்னே 21 ஸ்பீடு டிரைவ்ட்ரெயின் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இஎம்எக்ஸ் இ-மிதிவண்டியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், முன் மற்றும் பின் வீல்களில் ஷாக் அப்சார்பர்கள், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சிறிய எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

ஹீரோ லெக்ட்ரோ இஎச்எக்ஸ்20 (Hero Lectro EHX20)

விலை: ரூ. 1.3 லட்சம்

பட்ஜெட் விலைக் கொண்ட பைக்கைக் காட்டிலும் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் இ-சைக்கிளாக இது இருக்கின்றது. மிக மிக அதிக விலையைக் கொண்டு பிரீமியம் தர இ-மிதிவண்டி இதுவாகும். ஆகையால், லெக்ட்ரோ ரேஞ்ஜில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் காஸ்ட்லியான இ-சைக்கிளாகவும் இது காட்சியளிக்கின்றது.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

இந்த இ-சைக்கிளின் உருவாக்கத்திற்காக ஹீரோ நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த யமஹா ஸ்மார்ட் பவர் நிறுவனத்துடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. கழட்டி மாட்டக் கூடிய பேட்டரி, மையப்பகுதியில் பொருத்தப்பட்ட மின் மோட்டார் ஆகிய சிறப்பு வசதிகளை இஎச்எக்ஸ்20 பெற்றிருக்கின்றது. இவையிரண்டையும் யமஹா உடனான கூட்டணியின் வாயிலாக ஹீரோ பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மலிவு விலை முதல் உயர் விலை வரை... இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 இ-மிதிவண்டிகள்!!

இ-சைக்கிளின் அதிகபட்ச பயண தூரம் 80 கிமீ ஆகும். இதில் இடம் பெற்றிருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் முதல் 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும். தொடர்ந்து, டிஜிட்டல் திரை, ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் ஆகிய பிரீமியம் அம்சங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

Most Read Articles

English summary
Top 5 e bicycles list in india right
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X