Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹார்னெட் 2.0 பைக்கிற்கு போட்டியாக களமிறங்கிய பல்சர் 180... பைக் பற்றி அறிய வேண்டிய டாப் முக்கிய 5 தகவல்கள்!!
ஹோண்டா ஹார்னெட்டிற்கு போட்டியாக பஜாஜ் நிறுவனம் பல்சர் 180 பிஎஸ்6 மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து மக்கிய தகவல்களைக் கீழே காணலாம்.

பஜாஜ் நிறுவனம் அதன் புதிய பிஎஸ் 6 தரத்திலான பல்சர் 180 மாடல் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் நேக்கட் ரோட்ஸ்டர் ரக மாடலாகும். பல்சர் எனும் பிராண்ட் பெயரில் பல்வேறு ரக தேர்வுகளை பஜாஜ் வழங்கி வருகின்றது. இந்த தேர்வுகளை சற்று விரிவுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய 180 மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

புதிய எஸ்6 தரம் போல் இப்பைக்கில் என்ன வசதிகள் கவனிக்கும் வகையில் இடம்பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலை இப்பதவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். குறிப்பாக, பைக்கின் டிசைன், எஞ்ஜின், ஹார்ட்வேர், அம்சங்கள் மற்றும் விலை ஆகிய ஐந்து முக்கியமாக கவனிக்க வேண்டியவைப் பற்றியே காணவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

டிசைன்:
முன்னதாக விற்பனையில் இருந்த பிஎஸ்4 வாகனத்தின் டிசைன் தாத்பரியங்களை அப்படியே இந்த புதிய பிஎஸ்6 தரத்திலான பைக்கும் பெற்றிருக்கின்றது. இருப்பினும் லேசான சில மாற்றங்களை மட்டும் நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், புதிய சிங்கிள்-பாட் ஹெட்லைட் மற்றும் இரட்டை அலகு டிஆர்எல் மின் விளக்குகளை இதில் பார்க்க முடிகின்றது.

இதேபோன்று, டின்டர் விஷர், நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மஸ்குலர் ப்யூவல் டேங்க், ஸ்பிளிட் இருக்கை, இரு துண்டு அமைப்பிலான கைப்பிடி என பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. தொடர்ந்து புதிய உடற்கூறுகளாக எஞ்ஜின் கவுல் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றது. புதிய பைக்கிற்கு ஸ்போர்ட்ஸ் வாகன தோற்றத்தை மிக அதிகளவில் வழங்குகின்றது.

எஞ்ஜின்:
இது ஓர் பிஎஸ்6 எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 178.6 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடியது. சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜின் இதுவாகும். இது, 16.7 பிஎச்பி மற்றும் 14.52 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. மேலும், ஐந்து வேக கட்டுப்பாட்டு கருவியுடன் இது இயங்குகின்றது.

ஹார்ட்வேர்:
சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்-அப் ஆகியவையும் இப்பைக்கில் கவர்ச்சிகரமானதாக காட்சியளிக்கின்றது. பல்சர் 180எஃப் நியான் பைக்கில் இடம்பெற்றிருக்கும் ஷாக் அப்சார்பர் மற்றும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் அப்படியே இதிலும் இடம்பிடித்திருக்கின்றன. இத்துடன், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 280மிமீ சிங்கிள் டிஸ்க் முன்பக்கத்திலும், 230மிமீ சிங்கிள் ரோடர் பின்னபக்கத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தொழில்நுட்பமும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது.

அம்சங்கள்:
ஏற்கனவே கூறியதைப் போல் இப்பைக்கில் நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ப்யூவல் லெவல், வேகம் போன்ற முக்கிய தகவல்களை வழங்க உதவும்.

விலை:
புதிய பிஎஸ்6 பல்சர் 180 பைக்கிற்கு ரூ. 1,04,768 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஹோண்டா ஹார்னெட் 2.0, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாகா இந்த பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. கருப்பு-சிவப்பு ஆகிய நிற கலவை தேர்வில் மட்டுமே இது விற்பனைக்குக் கிடைக்கும்.