Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த பைக் உங்களின் கண்களை மட்டுமல்ல மனதையும் கவரும்! ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போர்ட் பைக் பற்றிய டாப்5 தகவல்கள்!
இந்தியாவின் அட்வென்சர் டூரர் இருசக்கர வாகன சந்தையை அமர்களப்படுத்தும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போர்ட் பைக். இந்த மோட்டார்சைக்கிள் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய டாப் 5 முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள் நிறுவனம், அதன் புதுமுக மோட்டார்சைக்கிள் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. டைகர் 850 ஸ்போர்ட் எனும் மாடலை அது நாட்டில் களமிறக்கியிருக்கின்றது. இது ஓர் அட்வென்சர் டூரர் ரக பிரீமியம் பைக்காகும்.

எனவேதான் இப்பைக் சற்று காஸ்ட்லியான இருசக்கர வாகனமாக இந்தியாவில் களமிறங்கியிருக்கின்றது. இருப்பினும், டைகர் வரிசையில் விற்பனையில் இருக்கும் பிற மாடல்களைக் காட்டிலும் இந்த புதிய தேர்வு சற்று குறைந்த விலை இருசக்கர வாகனமாக காட்சியளிக்கின்றது.

ஏனெனில், இதனை இந்த மாடலில் ஆரம்ப நிலை தேர்வாகவே ட்ரையம்ஃப் நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது. இந்த பைக்கைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விஷங்களைப் பற்றிய தகவலை இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

டிசைன்:
இப்பைக்கின் ஸ்டைல் டைகர் 900 ஜிடி பைக்கைப் போன்று உள்ளது. இருப்பினும், இது ஓர் ஆரம்பநிலை மாடல் என்பதால் இப்பைக்கின் கிராஃபிக் மற்றும் நிற தேர்வு போன்ற சிலவற்றில் பெரியளவில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. அந்தவகையில், இப்பைக்கில் 850 ஸ்போர்ட் என்ற பேட்ஜ்களை ஆங்காங்கே காண முடிகின்றது. குறிப்பாக, எரிபொருள் தொட்டியின் பேட்ஜை நம்மால் காண முடிகின்றது.

இது தவிர மெல்லிய எல்இடி ஹெட்லைட், உயரமான வின்ட் ஸ்கிரீன், நடுநிலை அழகான டிசைன், ஸ்டெப்-அப் இருக்கை, உயரமான சைலென்சர் என கவர்ச்சியான அம்சங்கள் இப்பைக்கின் அழகை மெருகேற்றுவதில் பங்காற்றுகின்றன. இத்துடன், 19 இன்சில் (முன்பக்கம்), 17 இன்சில் (பின்பக்கம்) கொடுக்கப்பட்டிருக்கும் அலாய் வீல்கள் பைக்கிற்கு மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன.

நிறம்:
புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக் இரு விதமான நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன. கிராஃபைட் டையப்ளோ சிவப்பு மற்றும் கிராஃபைட் கேஸ்பியன் ப்ளூ ஆகிய நிற தேர்வுகளிலேயே இப்பைக் கிடைக்க இருக்கின்றது.

எஞ்ஜின்:
டைகர் 900 பைக்கில் இருப்பதைப் போல அதிக திறன் வாய்ந்த எஞ்ஜின் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்த எஞ்ஜின் டைகர் 900 மாடலைக் காட்டிலும் குறைந்த திறனிலேயே டைகர் 850 ஸ்போர்ட் பைக்கில் செயல்படும். அந்தவகையில், 888 சிசி திறனையே இது வெளிப்படுத்துகின்றது. இது ஓர் இன்லைன் 3 சிலிண்டர்கள் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்ஜின் ஆகும்.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 84 பிஎச்பியை 8,500 ஆர்பிஎம்மிலும், 82 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதே எஞ்ஜின் டைகர் 900 மாடலில் 93.9 பிஎச்பியையும், 86.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றுகின்றது.

எலெக்ட்ரானிக்ஸ்:
டைகர் 850 ஸ்போர்ட் பைக்கில் 5 இன்சிலான வண்ண திரை, ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, இரு ரைடிங் மோட்கள் (ரோட் மற்றும் மழை), டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் என சில தனித்துவமான வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, எல்இடி மின் விளக்கு மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவையும் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

ஹார்ட்வேர்:
சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக 45 மிமீ அளவுள்ல மர்ஸோச்சி அப்சைட் டவுன் ஃபோர்க்கும் முன்பக்கத்திலும், ப்ரீ லோட் அட்ஜஸ்டபிள் மர்ஸோச்சி மோனோஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவை மிக கரடு முரடான சாலைகளைக் கூடி மிக சுலபமாக கடக்க உதவும். குறிப்பாக, நீண்ட தூர பயணத்தின்போது களைப்பே ஏற்படாத வண்ணம் இருக்க உதவும்.

இததைத்தொடர்ந்து, இரட்டை 320 மிமீ அளவுள்ள ரோடோர்ஸ் உடன் கூடிய ப்ரெம்போ பிஸ்டன் மோனோபிளாக் காலிபர்கள் முன்பக்கத்திலும், ஒற்றை 255 மிமீ அளவுள்ள ப்ரெம்போ சிங்கிள் பிஸ்டன் காலிபர் டிஸ்க் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவானதாக இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் அட்வென்சர் பயண பிரியர்களைக் கவரும் வகையில் அனைத்து சிறப்பு வசிகளையும் இப்பைக் பெற்றிருக்கின்றது.