நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்!!

Bajaj நிறுவனம் மிக விரைவில் முற்றிலும் புதிய மாடலான Pulsar 250 பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இப்பைக் பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்களைப் பற்றிய தகவலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

இளைஞர்களின் மிகவும் பிரியமான இருசக்கர வாகன மாடல்களில் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar)-ம் ஒன்று. இது இந்தியாவில் பல விதமான சிசி எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் முற்றிலும் ஓர் புதிய மாடலாக மிக விரைவில் பஜாஜ் பல்சர் 250 (Bajaj Pulsar 250)-ஐ இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

வரும் நவம்பர் 5ம் தேதி இப்பைக் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார். தற்போது பல்வேறு வரிசையில் பல்சர் 125 (Pulsar 125), பல்சர் என்எஸ் 155 (NS 125), பல்சர் 150 (Pulsar 150), பல்சர் என்எஸ் 160 (NS 160), பல்சர் 180 (Pulsar 180), பல்சர் என்எஸ் 200 (NS 200), ஆர்எஸ் 200 (RS 200) மற்றும் 220 எஃப் (220 F) ஆகிய தேர்வுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

இவற்றின் வரிசையிலேயே பல்சர் 250 புதிதாக விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இப்புதிய மாடலை நிறுவனம் புதிய பிளாட்பாரத்தில், தனித்துவமான ஸ்டைலில் உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், ஓர் சிறப்புமிக்க இருசக்கர வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான ஐந்து முக்கிய காரணங்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

புதிய பிளாட்பாரம்

பிரமாண்டமான மற்றும் பெரிய உருவம் கொண்ட இருசக்கர வாகனங்களை உருவாக்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட தளமே இது இப்புதிய தளம் ஆகும். இதிலேயே மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பல்சர் 250 பைக் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

புதிய பல்சர் மிகவும் பெரிய உருவம் மற்றும் அதிக கட்டுமஸ்தான உடல் பேனல்களைக் கொண்டு விற்பனைக்கு வர இருக்கின்றது. மிகவும் இலகுவான எடைக் கொண்ட தயாரிப்பாகவும் இது காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் வெளியாகிய ஸ்பை படங்கள் அமைந்துள்ளன.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

Source: Zigwheels

புதிய டிசைன்

மிக விரைவில் புதிய பல்சர் 250 பைக் விற்பனக்கு வர இருப்பதை முன்னிட்டை, இப்பைக்கை நிறுவனம் சாலையில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது. அப்போது வெளியாகிய படங்களின் அடிப்படையில், மிகவும் தனித்துவமான டிசைன் தாத்பரியத்தில் 250 பைக் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

புதிய எல்இடி புரஜெக்டர் மின் விளக்கு, பகல்நேர எல்இடி, சிசெல்லட் உடல் வாகு, பெரிய மற்றும் முரட்டுத் தனமான எரிபொருள் நிரப்பும் தொட்டி, புதிய அலாய் வீல்கள் மற்றும் வால் பகுதி மின் விளக்கு, உள்ளிட்டவற்றை புதிய பல்சர் பெற்றிருக்கின்றது.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

எஞ்ஜின்

250 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்ஜினே இப்பைக்கில் இடம் பெற இருக்கின்றது. இத்துடன் ஆயில் கூலர் வசதியும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இது ஓர் மிக சிறந்த டூரிங் பைக்காக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

விலை

புதிய பல்சர் 250 பைக் என்எஸ் 200 மாடலுக்கு மேல் இடத்திலும், டோமினார் 250 மாடலுக்கு கீழ் இடத்திலும் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது. எனவே டோமினாரைக் காட்டிலும் சற்று விலை குறைவான மாடலாக இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவலையும் பஜாஜ் வெளியிடவில்லை.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

அதேவேலையில், இது மிக அதிக விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பைக்கில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்படுகின்றது. இருசக்கர வாகனத்தில் ஸ்டப்பியர் எக்சாஸ்ட், டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்தில் - மோனோஷாக் சஸ்பென்ஷன் பின்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

நவம்பர் 5ல் அறிமுகமாகிறது முற்றிலும் புதிய Pulsar 250... பைக் பற்றிய அறிய வேண்டு முக்கிய தகவல்கள்!!

இத்துடன், டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ப்ளூடூத் இணைப்பு வசதி உடனும், இரட்டை ஏபிஎஸ் சேனல் வசதியும் இப்பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதைவைத்தே சற்று காஸ்ட்லியான பைக்காக புதிய பல்சர் 250 பைக் விற்பனைக்கு வரும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: 7 முதல் 11 வரையிலான இருசக்கர வாகனங்களின் படங்கள் உதராணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Top 5 things to know about bajaj pulsar 250
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X