இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

இந்த 2021ஆம் ஆண்டில் ஏகப்பட்ட இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் வழக்கம்போல் 125சிசி 2-வீலர்ஸின் எண்ணிக்கை அதிகமாக இருக்க, இம்முறை சில மேக்ஸி-ஸ்கூட்டர்களும், மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

பெட்ரோலின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் இந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய 5 ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

ஓலா எஸ்1

இன்னும் டெலிவிரிகளை துவங்காவிடினும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்1-ஐ பற்றி முதலாவதாக பார்ப்பதற்கு காரணம், அறிமுகத்திற்கு முன்பு இருந்தே இந்த இ-ஸ்கூட்டருக்கு பலத்த எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி, டெலிவிரிகளை துவங்கிய பின்னர் டிவிஎஸ் எக்ஸ்எல், ஹீரோ ஸ்பிளெண்டர் போன்று இந்திய போக்குவரத்தில் மிக பெரிய மாற்றத்தை ஓலா எஸ்1 ஏற்படுத்தும் என இப்போதே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளும், டெஸ்ட் ட்ரைவ்களும் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. நார்மல், ஸ்போர்ட் & ஹைப்பர் என்கிற மூன்று விதமான வேரியண்ட்களில், 180கிமீ ரேஞ்ச் உடன் வழங்கப்பட உள்ள இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கங்கள் கொடுக்கும் மானியங்களை பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் மாறக்கூடும்.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

யமஹா ஏரோக்ஸ்

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனை செய்யப்படும் செயல்திறன்மிக்க ஸ்கூட்டர்கள் என்றால், அதில் நிச்சயம் யமஹா ஏரோக்ஸின் பெயரை கூறாமல் இருக்க முடியாது. எந்த அளவிற்கு செயல்திறன்மிக்கது என்றால், இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இதில், பிரபலமான ஆர்15 பைக்கில் வழங்கப்படும் அதே 155சிசி, லிக்யுடு-கூல்டு, வெவ்வேறான வால்வு தொழிற்நுட்பத்தை கொண்ட என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

மேலும் ஆர்15 வி4 பைக்குடன் தான் ஏரோக்ஸ் ஸ்கூட்டரும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. செயல்திறன்மிக்க என்ஜின் உடன் மற்ற போட்டி மாடல்களுக்கு சவாலான டாப் ஸ்பீடை கொண்ட இந்த யமஹா ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.30 லட்சமாக உள்ளது. மேலும் மேக்ஸி-ஸ்கூட்டர் போன்றதான தோற்றம் யமஹா ஏரோக்ஸின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

டிவிஎஸ் எண்டார்க் ரேஸ் எக்ஸ்பி

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் தயாரிப்பு வாகனங்களை அவ்வப்போது அப்டேட் செய்வதில் நிபுணத்துவம் பெற்றது என்பது நமக்கே நன்றாக தெரியும். இந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு பிரபலமான டிவிஎஸ் ஸ்கூட்டர்களுள் ஒன்றான எண்டார்க் 125-இன் புதிய செயல்திறன்மிக்க டாப் வேரியண்ட்டாக ரேஸ் எக்ஸ்பி என்கிற மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

வழக்கமான எண்டார்க் ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில் தோற்றத்தில் கவனிக்கத்தக்க அப்கிரேட்களை பெற்றுவந்தாலும், எண்டார்க் ரேஸ் எக்ஸ்பி வேரியண்ட்டிற்கு அதன் அதிகப்படியான என்ஜின் ஆற்றல் தான் அடையாளமாகும். அத்துடன் ரூ.92,300 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த ஸ்கூட்டரானது குரல் கட்டுப்பாட்டு உதவிகள், புதிய நிறத்தேர்வுகள் மற்றும் இரு ரைட் மோட்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வழக்கத்தை காட்டிலும் குறைவான எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

அப்ரில்லா எஸ்ஆர்125 & எஸ்ஆர்160

அப்டேட் செய்யப்பட்ட அப்ரில்லா எஸ்ஆர்125 மற்றும் எஸ்ஆர்160 ஸ்கூட்டர்கள் இந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு முறையே ரூ.1.07 லட்சம் மற்றும் ரூ.1.17 லட்சம் என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முந்தைய வெர்சனில் இருந்து இவை இரண்டும் குறிப்பிடத்தக்க அளவில் காஸ்மெட்டிக் அப்டேட்களை பெற்று வந்துள்ளன.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

இந்த காஸ்மெட்டிக் அப்டேட்களில் புதிய ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், ரீஸ்டைலில் ஹேண்டில்பார், பெரிய க்ராப் ரெயில், புதிய முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ரீடிசைனில் எல்இடி டெயில்லேம்ப் உள்ளிட்டவை அடங்குகின்றன. ஆனால் இவற்றில் வழக்கமான 124.45சிசி மற்றும் 160.03சிசி என்ஜின்கள் தான் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இவை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளிலும் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

டிவிஎஸ் ஜூபிட்டர் 125

ரூ.76,000இல் இருந்து ரூ.84,000 வரையிலான விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, அப்டேட் செய்யப்பட்ட ஜூபிட்டர் 125 ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வழக்கமான ஜூபிட்டர் ஸ்கூட்டருக்கு மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ள இதன் ஸ்டைலில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அனுபவத்தை வெளிக்காட்டி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-5 ஸ்கூட்டர்கள்!! டிவிஎஸ் ஜூபிட்டரில் இருந்து ஓலா எஸ்1 வரையில்...!

இந்த வகையில் எரிபொருள் நிரப்பும் பகுதி புதிய ஜூபிட்டர் 125 ஸ்கூட்டரில் ஹேண்டில்பாருக்கு கீழே வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கை அடியில் போதிய அளவில் இடவசதி கிடைத்துள்ளது. இதில் பொருத்தப்படுகின்ற 124.8சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 8.04 பிஎச்பி மற்றும் 10.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கூட்டர் #scooters
English summary
Top best scooters launched in 2021 read to find more details
Story first published: Wednesday, December 22, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X