Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

மிக விரைவில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வர இருக்கும் ஐந்து இருசக்கர வாகனங்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இருசக்கர வாகன பிரியர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம். அனைத்துமே 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்குள் நுழைய இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

இந்திய இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் விரைவில் புதுமுக பைக்குகள் சில அறிமுகமாக இருக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மற்றும் யெஸ்டி நிறுவனத்தின் ரோட்கிங் ஆகிய இருசக்கர வாகனங்கள் இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வரும் பைக்குகளாக இருக்கின்றன.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

இந்த வரிசையில் இன்னும் பல இருசக்கர வாகன மாடல்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில மாடல்களைப் பற்றிய முக்கிய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். அதாவது, இந்தியர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ஐந்து முக்கியமான பைக் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் அவை பற்றிய தகவலை பார்க்கலாம்.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி 390 (New-gen KTM RC390)

கேடிஎம் நிறுவனம் அண்மையில் அதன் புதிய தலைமுறை ஆர்சி200 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் வெளியீடு செய்தது. இந்த பைக்கைத் தொடர்ந்து நிறுவனம் மிக விரைவில் அதன் மற்றுமொரு புதிய தலைமுறை வாகனமான ஆர்சி390 மோட்டார்சைக்கிளையும் வெளியீடு செய்ய இருக்கின்றது. இன்னும் சில மாதங்களில் இந்த அப்டேட் செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அறிமுகம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

ஆனால், இதன் அறிமுகம் எப்போது அரங்கேறும் என்பது பற்றிய தகவலை தற்போது வரை கேடிஎம் நிறுவனம் வெளியிடவில்லை. அதேநேரத்தில், இணையத்தின் வாயிலாக வெளியாகிய அண்மை தகவல்கள் இப்பைக் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளது.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

யெஸ்டி ரோட் கிங் (Yezdi Roadking ADV)

யெஸ்டி நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் அதன் கால் தடத்தைப் பதிக்க இருக்கின்றது. கடந்த காலத்தில் குறிப்பிட்ட சில காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறிய இந்நிறுவனம், தற்போது இந்திய சந்தையில் இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிறுவனம் மீண்டும் களமிறங்க இருக்கின்றது.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

புதிய தயாரிப்பு யுக்தியின்கீழ் தயாரிக்கப்படும் இருசக்கர வாகனங்களைக் கொண்டு நிறுவனம் இந்திய சந்தையை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மறு வருகையை ஜாவா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. நிறுவனம் அதன் மறு வருகையை முன்னிட்டு ரோட்கிங் எனப்படும் அட்வென்சர் ரக இருசக்கர வாகனத்தை களமிறக்க இருப்பதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

இந்த இருசக்கர வாகனம் மிக விரைவில் அறிமுகமாக இருப்பதை முன்னிட்டு சாலையில் பல பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், இன்னும் ஒரு சில மாதங்களில் யெஸ்டி அதன் முதல் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துவிடும் என நம்பப்படுகின்றது.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350)

இந்தியர்களின் எதிர்பார்ப்பைப் பெரிதும் தூண்டி வரும் இருசக்கர வாகன மாடல்களில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக்கும் ஒன்று. இந்த வருகையை நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. மீட்டியோர் 350 பைக்கை உருவாக்கிய அதே பிளாட்பாரத்தில் வைத்தே இந்த பைக் உருவாக்கப்பட்டு வருகின்றது.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

ஆகையால், முற்றிலும் மாறுபட்ட டிசைன் மற்றும் ஸ்டைலில் இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்கள் இணையத்தின் வாயிலாக வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இப்பைக்கில், ட்ரிப்பர் நேவிகேஷன் போன்ற நவீன கால சிறப்பம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan)

ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற வசதிகளுடன் ஹிமாலயன் பைக்கை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதனை வழக்கமான சாலை பயன்பாட்டிற்கு உகந்த வெர்ஷனில் நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

அதாவது, அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற அம்சங்கள் குறைக்கப்பட்டு, சாலை பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்கள் பலவற்றுடன் இந்த ஹிமாலயன் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எஞ்ஜின் மற்றும் டிசைன் ஆகியவை தற்போது நடைமுறையில் இருக்கும் ஹிமாலயனைப் போன்றே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அறிமுகம் 2022ம் ஆண்டின் மத்தியில் நடைபெற இருக்கின்றது.

Royal Enfield Hunter 350 முதல் Yezdi Roadking வரை... மிக விரைவில் களம் காண இருக்கும் பைக்குகளின் பட்டியல்!

ராயல் என்பீல்டு ஷாட்கன்/கிளாசிக் 350 (Royal Enfield Shotgun/Classic 650)

அடுத்த ஆண்டு அரங்கேற இருக்கும் மிகப்பெரிய அறிமுகமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய க்ரூஸர் ரக இருசக்கர வாகனத்தின் வருகை அமைய இருக்கின்றது. இந்த பைக் ஷாட்கன் 650 அல்லது கிளாசிக் 650-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இருசக்கர வாகனங்கள் மீதும் இந்தியர்கள் மத்தியில் மிக அதிகளவில் எதிர்பார்ப்பு நீடித்த வண்ணம் இருக்கின்றது.

குறிப்பு: சில இருசக்கர வாகனங்களின் படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை

Most Read Articles
English summary
Top five upcoming motorcycles in india by 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X